புதுச்சேரி பழைய துறைமுகம் பகுதியில் பயன்படுத்தப்பட்டு வந்த துறைமுக பாலம் பழுதடைந்ததால் கப்பல் போக்குவரத்து கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்டது. இதையடுத்து இந்த பழைய துறைமுகப் பகுதியை மீனவர்கள் மீன் பிடிப்பதற்கு பயன்படுத்திவந்தனர்.
இந்நிலையில் துறைமுகப் பாலம் பெரும் சேதம் அடைந்ததையடுத்து அங்கு மீனவர்கள் மீன்பிடிக்க அரசு தடை விதித்தது. மேலும் அந்தப் பாலத்தை பயன்படுத்தவும் அதில் நடைபயிற்சி செய்வதற்கும் தடைவிதித்து பாலத்தின் கதவுகள் மூடப்பட்டன.
இதனிடையே இப்பகுதியைச் சேர்ந்த மீனவர்கள், தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அன்பழகனை சந்தித்துப் பழைய துறைமுக பாலத்தில் மீன்பிடிக்க அனுமதிக்குமாறு கோரிக்கை வைத்தனர். இதையடுத்து துறைமுகத் துறை அமைச்சர் கந்தசாமி துறைமுகச் செயலர் அன்பரசு, அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர் வலுவிழந்த பாலத்தை ஆய்வு செய்வதற்காக துறைமுக வளாகத்துக்கு வந்தனர்.
அங்கு அமைச்சர் கந்தசாமி உள்ளிட்டோர் பாலத்தின் மீது நடந்து சென்று நடத்தினர். மேலும் பாலத்தில் உள்ள விரிசல்கள் ஆகியவற்றை அலுவலர்கள் ஆய்வு செய்தனர். ஆய்வுக்குப் பின் பேசிய அவர்கள், பாலம் சரியசெய்யப்பட்டு மீண்டும் மீனவர்களின் பயன்பாட்டுக்கு திறந்துவிட அரசு திட்டமிட்டுள்ளது என்று தெரிவித்தனர்.
இதையும் படிங்க: