ETV Bharat / bharat

அச்சுறுத்தும் தொற்று நோய்களின் முகம் - corona virus infection

கரோனா பெருந்தொற்று காலத்தில் பொதுமக்கள் தங்களது சுற்றுப்புறத்தைத் தூய்மையாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்க வேண்டியது கட்டாயமாகும். இது நாம் ஒவ்வொருவரும் முன்வந்து தவறாமல் கடைபிடிக்க வேண்டிய ஒரு விதியாகும்.

The mask of infectious diseases
The mask of infectious diseases
author img

By

Published : Jun 25, 2020, 12:51 AM IST

கரோனா எனும் மோசமான பெருந்தொற்று இந்தியாவில் நான்கு லட்சத்து 50 ஆயிரத்துக்கும் அதிகமான மக்களைத் தொற்றி இருக்கிறது. 15 ஆயிரத்திற்கும் மேற்ப்பட்டோர் உயிர்களை பலிவாங்கியிருக்கிறது. கரோனா தொற்றை தடுக்க எல்லாவழிகளிலும் மாநில, மத்திய அரசுகள் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.

தற்போது, சுற்றுச்சூழல் பருவநிலை மாற்றங்கள் தொடங்கியிருக்கின்றன. தென்மேற்கு பருவமழை தொடங்கி இருக்கிறது. பொதுமக்கள் கொஞ்சம் இடம் கொடுத்தாலும் கூட அவர்கள் மீது தொற்றுவதற்கு பல்வேறு தொற்று நோய்கள் வரிசை கட்டி நிற்கின்றன. இது சுகாதாரத் துறை அலுவலர்களை மேலும் அச்சத்துக்கு உள்ளாக்கியுள்ளது.

இந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்த அறிக்கையில், ‘கடந்த ஆண்டு எச்1 என்1 என்ற வைரஸ் தாக்கத்தால் பன்றிகாய்ச்சல் பாதிப்புக்கு உள்ளானவர்களை விடவும் இந்த ஆண்டு இரு மடங்கு மக்களுக்கு பன்றிகாய்ச்சல் பாதிப்பு ஏற்படும்’ என்று கூறப்பட்டுள்ளது. பன்றி காய்ச்சலால் மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி மற்றும் தமிழ்நாடு மாநிலங்களில் அதிகம் பேர் பாதிக்கப்பட்டனர்.

தொற்று நோய்களின் பெரும் பரவல் நம் நாட்டில் தொடங்கி இருக்கிறது. ஆனால், கரோனா வைரஸ் பரவலை தடுத்தல், சிகிச்சை என்பதில் மட்டும் ஆய்வுகள் கவனம் செலுத்திவருகின்றன. இதர நோய் தடுப்பூசி திட்டங்கள் மற்றும் நோய் தடுப்பு நடவடிக்கைகள் புறக்கணிக்கப்படுவது , சாதாரண தொற்று நோய்கள் கூட பெரும் பரவலான தொற்றாக மாறி கரோனா போன்ற சூழலை உருவாக்கக்கூடும் அல்லது கோவிட்-19 தொற்று இன்னொரு பருவகால நோயாக மாறிவிடக் கூடும்.

கடந்த மாதம் பிரதமர் நரேந்திரமோடி, “பருவமழை காலம், முழுவீச்சில் தொடங்க உள்ளதால், கரோனா அல்லாத பிற நோய்களை தடுப்பதில் மருத்துவ சுகாதார முறைகள் வலுப்படுத்தப்பட்டு தயார் செய்யப்பட வேண்டும்” என்று கூறினார்.

டெங்கு, சிக்கன் குனியா, மலேரியா, வயிற்றுப்போக்கு, டைப்பாய்டு, அபாயமான வைரஸ் காய்ச்சல்கள், காலரா, மூளைக்காய்ச்சல், மஞ்சள் காமாலை ஆகிய நோய்கள் மழைகாலத்தில் பொதுவாக ஏற்படக் கூடியவை. உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் உடல்நலக்கோளாறுகளையும் விளைவிக்கக்கூடியவை.

கரோனா அறிகுறி நோயாளிகளுக்கு டெங்குவின் பெரும்பாலான பாதிப்புகள் காணப்படுகின்றன. ஏற்கனவே இதுபோன்ற அறிகுறிகள் மும்பையில் கண்டறியப்பட்டுள்ளது. சளி, இருமல் மற்றும் காய்ச்சல் ஆகிய அறிகுறிகள் கரோனாவின் அடிப்படையான அறிகுறிகள் என்பதால், இந்த பருவகாலத்தில் தோன்றும் இந்த பொதுவான அறிகுறிகள் நாட்டில் உள்ள பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளன.

விஷத்தன்மை கொண்ட காய்ச்சல்கள் மாநில அரசுகளுக்கு சவால்களாக இருக்கும்போது கரோனா பாதிப்பு மேலும் மோசமாகக்கூடும். அசுத்தமான தண்ணீர், உணவு, காற்று மற்றும் பூச்சிகள் மூலம் பரவும் டைப்பாய்டு, மஞ்சள் காமாலை, வயிற்றுப்போக்கு, சிக்கன் குனியா, மலேரியா,டெங்கு போன்ற நோய்களைத் தடுக்க அதிநவீன வசதிகளை உருவாக்க வேண்டிய தேவை இருக்கிறது என்று கடந்த ஜனவரி மாதம் மத்திய அரசு உணர்ந்தது.

தொற்று நோய்கள் தடுப்பு மற்றும் உயர் ரத்த அழுத்தம் மற்றும் சக்கரை நோய் தடுப்பு போன்ற வாழ்வியல் சார்ந்த நோய்களை தடுக்க மருத்துவம் அல்லாத துறையிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்புகள் பொதுசுகாதாரத்தில் ஒரு பட்டம் பெற்ற மருத்துவர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று தேசிய சுகாதார இயக்கமானது ஏற்கனவே,தெரிவித்திருந்தது.

இப்போதைய கோவிட்-19- எனும் பெருந்தொற்று பரவல் நிலை, ஊரடங்கு அமல்படுத்துதல் ஆகியவை காரணமாக, கலா-அசார் என்ற ஒட்டுண்ணி நோய், ஃபிலாரியா என்ற ஈக்கள் மற்றும் கொசுக்கள் மூலம் பரவும் நோய் ஆகியவை உள்ளிட்ட நோய்களை முழுவதுமாக ஒழிக்கக் கூடிய தடுப்பு நடவடிக்கைகளை பல அரசுகள் புறக்கணித்திருக்கின்றன. ஆண்டு தோறும் 40லட்சம் பேர்களுக்கு காச நோய் இன்னும் தாக்கி வருகிறது. இதற்கு இணையாக மலேரியாவும் பெரும்பாலானவர்களுக்குப் பரவி வருகிறது. நோயின் உலகளாவிய சுமை என்ற பத்திரிகை (GBD Magazine)-யின் ஆய்வில் உயிரை அச்சுறுத்தும் நோய்கள் வரிசையில் முதல் ஐந்து இடத்தில் உள்ள நோய்களால் இந்தியா முழுவதும் தினமும் சராசரியாக 11,000 பேர் பாதிக்கப்படுகின்றனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தெலங்கானா உயர் நீதிமன்றம், ஒவ்வொரு மரணத்துக்கும் நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என்று நேரடியாகச் சொல்லியிருக்கிறது. அதே நேரத்தில் தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளது.

பருவகால நோய்கள் தொடங்குவதற்கு முன்பு, சுற்றுச்சூழலை சுத்தப்படுத்துவது, கொசுக்கள் உற்பத்தியாவதைத் தடுப்பது ஆகியவற்றை மேற்கொள்வது அவசியமான மறுக்கமுடியாத உண்மையாகும். அரசு மருத்துவமனைகள் மற்றும் கிளினிக்குகளில் மருத்துவர்கள், செவிலியர்கள் பற்றாக்குறை என்பது மற்றொரு கசப்பான உண்மை. கைகளை சுத்தம் செய்வது, முகக்கவசம் அணிவது போன்ற கரோனா தடுப்பு நடவடிக்கைகள் சில பாதுகாப்புகளை தரக் கூடும்.

கொசுக்களின் உற்பத்தி இடமாகவும் வாழ்விடமாகவும் மாறாமல் சுற்றுப்புறத்தைத் தூய்மையாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்க வேண்டியது கட்டாயமாகும். இது நாம் ஒவ்வொருவரும் முன்வந்து தவறாமல் கடைபிடிக்க வேண்டிய ஒரு விதியாகும்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.