ETV Bharat / bharat

ஐஎன்எக்ஸ் வழக்கில் ஜாமின் கோரிய ப. சிதம்பரம்: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்த உச்ச நீதிமன்றம்! - P Chidambaram INX case

டெல்லி: அமலாக்கத் துறை தொடர்ந்த ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ஜாமின் கோரிய ப. சிதம்பரத்தின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது.

The bail plea in the INX media case by Chidambaram: SC reserves verdict

author img

By

Published : Nov 28, 2019, 2:21 PM IST

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பாக கைது செய்யப்பட்டு திஹார் சிறையிலிருக்கும் ப. சிதம்பரத்தின் மீது அமலாக்கத் துறையும் சிபிஐயும் தலா ஒரு வழக்கை தொடர்ந்திருந்தன. இரு வழக்குகளை எதிர்த்து ஜாமின் கோரி சிதம்பரம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். ஆனால், இரு மனுக்களையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததால், உச்ச நீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு செய்திருந்தார்.

அதில், சிபிஐ தொடர்ந்த வழக்கில் கடந்த அக்.22ஆம் தேதி நிபந்தனை ஜாமினை உச்ச நீதிமன்றம் வழங்கியிருந்த போதிலும், அமலாக்கத் துறையின் வழக்கு விசாராணை அவர் மீது இருந்ததால் சிறையிலேயே இருந்துவருகிறார்.

இந்நிலையில், இந்த வழக்கில் ஜாமின் கோரி சிதம்பரம் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை உச்ச நீதிமன்றம் இன்று தொடங்கியது.

அப்போது அமலாக்கத் துறை சார்பில் வாதாடிய துணைத் தலைமை வழக்கறிஞர் துஷார் மேத்தா, “இந்த பணமோசடி வழக்கு ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்துடன் மட்டும் முடிந்துவிடவில்லை. இதேபோல, 16 நிறுவனங்களுக்கு சிதம்பரத்துடன் தொடர்பு இருக்கிறது. ஆகவே, சிதம்பரம் எனும் அப்பாவி சிறையில் அடைக்கப்படவில்லை. அவரின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட வேண்டும்” என்றார்.

தொடர்ந்து அவர், “இம்முறைகேட்டில் தொடர்புடைய கார்த்தி சிதம்பரம் சிபிஐ வழக்கில் மட்டுமே முன் ஜாமின் பெற்றுள்ளார். அமலாக்கத் துறை வழக்கில் அவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று நீதிமன்றத்திடம் தகவல் தெரிவித்தார்.

சிதம்பரம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் கபில் சிபல், சிங்வி ஆகியோர் வாதாடுகையில், “வழக்கில் நேரடியாகவோ மறைமுகவோ சிதம்பரத்திற்கு எந்த ஆதாரமும் இல்லை. மேலும், ஆதாரங்களை அழிக்கவும் இல்லை. எனவே ஜாமினில் அவரை விடுவிக்க வேண்டும்” என்றனர்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்டு பதிவு செய்த நீதிமன்றம், தேதி குறிப்பிடமால் தீர்ப்பை ஒத்திவைத்தது.

இதையும் படிங்க: சிதம்பரத்தின் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு கடந்து வந்த பாதை...!

Intro:Body:

ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு * வாதங்கள் முடிவடைந்த நிலையில் தீர்ப்பை ஒத்திவைத்தது, உச்ச நீதிமன்றம் * அமலாக்கத்துறை வழக்கில் ஜாமீன் கோரி ப.சிதம்பரம் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு #PChidambaram

சிதம்பரத்தை சிறையில் வைத்திருப்பது ஏன் என மத்திய அரசு தரப்பு இன்று வாதிட்டது * கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய நடவடிக்கை - மத்திய அரசு தரப்பு * சிபிஐ வழக்கில் மட்டுமே கார்த்தி சிதம்பரத்திற்கு ஜாமீன், அமலாக்கத்துறை வழக்கில் கைது செய்ய நடவடிக்கை - மத்திய அரசு

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.