ETV Bharat / bharat

தீவிரம் அடையும் விவசாயிகள் போராட்டம்: மெளனம் கலைத்த அண்ணா ஹசாரே - பிரதமர் மோடி

அகமதுநகர்(மஹாராஷ்டிரா): மத்திய அரசால் கொண்டுவரப்பட்டுள்ள விவசாய திருத்தச் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டம் டெல்லியில் தீவிரம் அடைந்துள்ளது. இந்நிலையில், சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே மத்திய அரசை விமர்சித்து கேள்வி எழுப்பியுள்ளார்.

அண்ணா ஹசாரே
அண்ணா ஹசாரே
author img

By

Published : Dec 1, 2020, 7:30 AM IST

மத்திய அரசால் அண்மையில் கொண்டுவரப்பட்ட விவசாய திருத்தச் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் கடும் எதிர்ப்பலை வீசிவருகிறது. இந்தச் சட்டங்கள் விவசாயிகளுக்கு எதிரானது என்றுகூறி, டெல்லியில் ஆறாவது நாளாக இன்றும் விவசாயிகள் தொடர்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

விவசாயிகளின் தொடர் பேராட்டத்தை மத்திய அரசு அலட்சியப்படுத்திவருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில், சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே மத்திய அரசை விமர்சித்து கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக பேசியுள்ள அண்ணா ஹசாரே, "தேர்தலின் போது விவசாயிகளிடம் வாக்கு கேட்க செல்லும் நீங்கள் (பாஜக அரசு), விவசாயிகளின் போராட்டம் நடந்து கொண்டிருக்கும்போது ஏன் அவர்களுடன் சென்று விவாதிக்கக்கூடாது. டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகள் பாகிஸ்தானிலிருந்து வந்தார்களா?

விவசாய நாட்டில் விவசாயிகளின் பிரச்னையை மத்திய அரசு அணுகும் முறை ஏற்புடையதாக இல்லை. தேர்தல்கள் வரும்போது, ​​அரசியல்வாதிகள் விவசாயிகளிடம் சென்று சில சமயங்களில் அவர்களின் வீட்டிற்குச் சென்று வாக்குகளைக் கேட்கிறார்கள். ஆனால், தங்களது வாழ்வாதாரப் பிரச்னைக்காக விவசாயிகள் போராடும்போது, அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தாமல் புறக்கணிக்கப்படுகின்றனர்.

இந்தப் போராட்டத்தில் விவசாயி ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். ஆயினும்கூட விவசாயிகள் நிதானத்துடன் போராடுகிறார்கள். இந்த மாபெரும் விவசாயப் போராட்டத்தில் வன்முறை வெடித்தால் யார் பொறுப்பு?. பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த விவசாயிகள் விவசாய சட்டங்களுக்கு எதிராக 'டெல்லி சலோ' போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த இயக்கத்தை நான் முழுமையாக ஆதரிக்கிறேன்", என்றார்.

விவசாயிகள் டெல்லியின் எல்லையில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாய சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளதாகக்கூறிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் கோரிக்கை விவசாயிகளால் நிராகரிக்கப்பட்டது.

இதையும் படிங்க: டெல்லியில் போராடிவரும் விவசாயிகளுக்கு ஆதரவு: தமிழ்நாட்டில் விவசாயிகள் போராட்டம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.