டாக்டர் சந்தீப் அட்டாவர் தலைமையிலான மருத்துவர்கள் குழு சண்டிகரைச் சேர்ந்த கரோனாவால் பாதிக்கப்பட்ட நபருக்கு நடைமுறையைச் சிக்கலான நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து சாதனை படைத்துள்ளதாக தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் அமைந்துள்ள கிருஷ்ணா மருத்துவ அறிவியல் கழகத்தின் (கிம்ஸ்) தெரிவித்துள்ளது.
மாற்று அறுவரை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட நபர் பூர்ன குணமடைந்து, வெள்ளிக்கிழமை வீடு திரும்பினார். சண்டிகரைச் சேர்ந்த அந்த நபர் சார்கோயிடோசிஸ் என்ற நோயால் அவதிப்பட்டுவந்தார்.
இது அவரது நுரையீரலை பாதித்தது. உடல்நிலை நாளுக்கு நாள் மிகவும் மோசம் அடைந்துவந்தது. இதிலிருந்து மீண்டு வர இரட்டை நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை ஒன்றே நிரந்தர தீர்வு என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.
மாற்று அறுவை சிகிச்சைக்காக காத்திருக்கும்போது அந்த நபர் கரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டபோது நிலைமை மேலும் மோசமடைந்தது.
"நோயாளியின் ஆக்ஸிஜன் தேவை கடந்த எட்டு வாரங்களாக நிமிடத்திற்கு 15 லிட்டரிலிருந்து 50 லிட்டராக அதிகரித்தது" என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நல்வாய்ப்பாக கொல்கத்தாவில் மூளை சாவு ஏற்பட்ட நபர் ஒருவரின் நுரையீரலை விமானம் மூலம் ஹைதராபாத் வரவழைத்து மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக டாக்டர் சந்தீப் அட்டாவர் கூறினார்.
இதையும் படிங்க: கரோனாவை வென்ற 105 வயது மூதாட்டி!