ஜம்மு காஷ்மீருக்கு அளிக்கப்பட்டுவந்த சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து பயங்கரவாதிகளின் நடமாட்டம் அங்கு அதிகரித்ததாக பல்வேறு தரப்பினர் குற்றஞ்சாட்டினர். இதனிடையே, அவந்திபுரா பகுதியில் பயங்கரவாதிகள் இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரத்திலிருந்து பாதுகாப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, காவல் துறையினர், பாதுகாப்பு படையினர் ஒன்றிணைந்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர். அதில், பயங்கரவாதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். நேற்று இரவு தொடங்கிய அதிரடி நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. இதேபோல், மே 3ஆம் தேதி வடக்கு காஷ்மீரில் நடைபெற்ற அதிரடி நடவடிக்கையில் ஐந்து பாதுகாப்பு படையினர் உயிரிழந்தனர்.
இதையும் படிங்க: ஊரடங்கால் உணவகத்தில் குட்டியை ஈன்ற சிறுத்தை
!