இரு நிறுவனங்களையும் அர்த்தமுள்ள வழியில் புதுப்பிக்கவில்லை. இப்போதைய நடவடிக்கை தனியார் நிறுவங்களுடன் போட்டிகளை உருவாக்கி, நடத்துவதற்கான செலவுகளை மட்டுமே அது ஈட்டும் என்ற உணர்வை தொழில் வல்லுநர்கள் கொண்டுள்ளனர்.
அரசாங்கம் நீண்ட காலத்திற்கு முன்னரே பெரிய சீர்திருத்தங்களையும் கடுமையான மறுசீரமைப்பையும் ஏற்படுத்தியிருக்க முடியும். மேலும் அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டுள்ள தற்போதைய நடவடிக்கைகள் பொதுத்துறை நிறுவனங்களை கண்காணிக்க போதுமானதாக இல்லை.
இந்த இணைப்பும், முன்மொழியப்பட்ட தன்னார்வ ஓய்வூதியத் திட்டமும் சேர்ந்து, செயல்பாட்டு செலவுகளைத்தான் குறைக்க உதவும். ஆனால் அது அதன் எதிர்காலத்தை வளப்படுத்த போதுமானதாக இருக்காது. ஒரு காலத்தில் செழிப்பான நிறுவனமாக இருந்த பி.எஸ்.என்.எல், தற்போது நோய்வாய்ப்பட்டு ரூ.90,000 கோடிக்கு மேல் இழப்பில் உள்ளது. ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பாரதி ஏர்டெல் போன்ற வேகமான மற்றும் திறமையான தனியார் நிறுவனங்களுடன் போட்டியிட பிஎஸ்என்எல் இயலாமையின் விளைவு இதுவாகும்.
1,76,000 தொழிலாளர் தொகுப்பைக் கொண்டு, பி.எஸ்.என்.எல் வெறுமனே போட்டியிட முடியாது. தொலைதொடர்பு துறை வல்லுநர்களின் கூற்றுப்படி, பி.எஸ்.என்.எல் மற்றும் எம்.டி.என்.எல் ஆகிய இரண்டிலும் உள்ள மிகப்பெரிய பிரச்சினை, 'ஏகபோக' சகாப்தத்தைச் சேர்ந்த ஊழியர்களை, இன்றைய தீவிர போட்டிச் சூழலுக்கு ஏற்றவாறு அவர்களின் மனநிலையை மாற்றுவதில் ஏற்பட்ட தோல்வியும் அவற்றின் வீழ்ச்சிக்கு ஒரு முக்கிய காரணம்.
மொபைல் பிரிவில் கடுமையான போட்டியால் குறைந்த கட்டண விகிதம் , பணியாளர்களுக்கான அதிக செலவு மற்றும் தொலைத் தொடர்பு சந்தையில் 4 ஜி சேவைகள் (சில இடங்களில் தவிர) இல்லாததால், பிஎஸ்என்எல் நட்டத்துக்கான பிற முக்கிய காரணங்களாகும்.
ரிலையன்ஸ் ஜியோ சந்தையை ஆக்கிரமித்து 2016 இல் நுழைந்த பின்னர் பொதுத்துறை நிறுவனம் அதன் வருவாயில் சரிவைக் கண்டது. ரிலையன்ஸ் ஜியோ தொலைதொடர்புத் துறையை அதன் மிக குறைந்த அதிரடி விலை நிர்ணயம் மூலம் உலுக்கியது.
ஒரு தொலைநோக்கு பார்வையில், பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் இணைப்பு தர்க்க ரீதியானதாகத் தெரிகிறது. ஏனெனில் இவை இரண்டும் ஒன்றுடன் மற்றொன்று இல்லாத பகுதிகளில் இயங்குகின்றன.
இந்தியாவைப் பொறுத்தவரை, பொதுத்துறை தொலைத் தொடர்பு நிறுவனங்கள் வயர்லெஸ் சந்தாதாரர்களின் எண்ணிக்கையில் வெறும் 10 சதவீதமும், வயர்லெஸ் பிராட்பேண்ட் சந்தாதாரர் எண்ணிக்கையில் 3 சதவீதமும் மட்டுமே உள்ளது .
மத்திய தொலை தொடர்பு துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் மே 2019 நிலவரப்படி, பிஎஸ்என்எல் சந்தை பங்கு 9.98 சதவீதமாக இருந்தது. இது எம்டிஎன்எல் உடன் இணைந்து 10.28 சதவீதம் வரை செல்கிறது என ட்ராய் கூறியுள்ளது . இதற்கு மாறாக, தனியார் ஆபரேட்டர்கள் சந்தையில் பெரும்பகுதியை வைத்திருக்கிறார்கள்.
ஒரு பொதுத்துறை நிறுவனம் போட்டித்தன்மையுடன் இருக்க, அதற்கு ஒரு சுயாட்சி தேவை. பொருளாதார மந்தநிலை இருக்கும் நேரத்தில், அது தொடர்பான அனைத்து சிக்கல்களையும் தீர்க்கும் முழுமையான அணுகுமுறை இல்லாவிட்டால் மீட்புத் திட்டம் மற்றொரு வீணான முயற்சியாக மாறுவதற்கான அபாயத்தில் இருக்கிறது. எனினும் சீர்திருத்தமும் மறுமலர்ச்சியும் இந்த நேரத்தில் செய்யபடவில்லை என்றால் அது இரண்டு தொலைத் தொடர்பு நிறுவனங்களின் முடிவுக்கு வழி வகுக்கலாம்.
இதையும் படிங்க: இந்திய திவால் சட்டம், தவறான புரிதலும் பெரிய மாற்றமும்!
Intro:Body:
TELECOM FIRMS REVIVAL PLAN NEEDS MORE FOCUS
டெலிகாம் நிறுவனங்களை புதுப்பிக்கும் திட்டத்தில் கூடுதல் கவனம் தேவை:
நோய்வாய்ப்பட்ட பொதுத்துறை தொலைத் தொடர்பு நிறுவனங்கள்… பி.எஸ்.என்.எல் மற்றும் எம்.டி.என்.எல் ஆகியவை கடினமான பாதையில் முன்னேறி வருகின்றன. அரசுக்கு சொந்தமான தொலைத் தொடர்பு நிறுவனங்களான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பி.எஸ்.என்.எல்) மற்றும் மகாநகர் தொலைபேசி நிகாம் லிமிடெட் (எம்.டி.என்.எல்) ஆகியவற்றை இணைப்பதாக நரேந்திர மோடி அரசாங்கத்தின் அறிவிப்பு மிகவும் தாமதமாக வந்துள்ளது, மேலும் இரு நிறுவனங்களையும் அர்த்தமுள்ள வழியில் புதுப்பிக்கவில்லை. இப்போதைய நடவடிக்கை தனியார் நிறுவங்களுடன் போட்டிகளை உருவாக்க்கி , நடத்துவதற்கான செலவுகளை மட்டுமே அது ஈட்டும் என்ற உணர்வை தொழில் வல்லுநர்கள் கொண்டுள்ளனர். அரசாங்கம் நீண்ட காலத்திற்கு முன்னரே பெரிய சீர்திருத்தங்களையும் கடுமையான மறுசீரமைப்பையும் ஏற்படுத்தியிருக்க முடியும், மேலும் அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டுள்ள தற்போதைய நடவடிக்கைகள் பொதுத்துறை நிறுவனங்களை கண்காணிக்க போதுமானதாக இல்லை. இந்த இரண்டு தொலைத்தொடர்பு நிறுவனங்களும் செயல்பாட்டில் இரத்தப்போக்கை ஏற்படுத்துகின்றன. இந்த இணைப்பும் , முன்மொழியப்பட்ட தன்னார்வ ஓய்வூதியத் திட்டமும் (விஆர்எஸ்) சேர்ந்து , செயல்பாட்டு செலவுகளைத்தான் குறைக்க உதவும், ஆனால் அது அதன் எதிர்காலத்தை வளப்படுத்த போதுமானதாக இருக்காது.
ஒரு காலத்தில் நவத்னா நிறுவனமாக இருந்த பி.எஸ்.என்.எல்,இப்போது நோய்வாய்ப்பட்டு ரூ .90,000 கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டது. ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பாரதி ஏர்டெல் போன்ற வேகமான மற்றும் திறமையான தனியார் நிறுவனங்களுடன் போட்டியிட பிஎஸ்என்எல் லோட இயலாமையின் விளைவு இதுவாகும். 176,000 பெருத்த தொழிலாளர் தொகுப்பைக் கொண்டு, பி.எஸ்.என்.எல் வெறுமனே போட்டியிட முடியாது. தொலைதொடர்பு துறை வல்லுநர்களின் கூற்றுப்படி, பி.எஸ்.என்.எல் மற்றும் எம்.டி.என்.எல் ஆகிய இரண்டிலும் உள்ள மிகப்பெரிய பிரச்சினை, 'ஏகபோக' சகாப்தத்தைச் சேர்ந்த ஊழியர்களை , இன்றைய தீவிர போட்டி சூழலுக்கு ஏற்றவாறு அவர்களின் மனநிலையை மாற்றுவதில் ஏற்பட்ட தோல்வியும் அவற்றின் வீழ்ச்சிக்கு ஒரு முக்கிய காரணம். மொபைல் பிரிவில் கடுமையான போட்டியால் குறைந்த கட்டண விகிதம் , பணியாளர்களுக்கான அதிக செலவு மற்றும் தொலைத் தொடர்பு சந்தையில் 4 ஜி சேவைகள் (சில இடங்களில் தவிர) இல்லாததால், பிஎஸ்என்எல் நட்டத்துக்கான பிற முக்கிய காரணங்களாகும். ரிலையன்ஸ் ஜியோ சந்தையில் ஆக்கிரமித்து 2016 இல் நுழைந்த பின்னர் பொதுத்துறை நிறுவனம் அதன் வருவாயில் சரிவைக் கண்டது. ரிலையன்ஸ் ஜியோ தொலைதொடர்புத் துறையை அதன் மிக குறைந்த அதிரடி விலை நிர்ணயம் மூலம் உலுக்கியது, மட்டுமல்லாமல் அது பான்-இந்தியா 4 ஜி நெட்வொர்க்கையும் கொண்டுள்ளது. 2016 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் ஆர்ஜியோவுடன் 4 ஜி வந்ததிலிருந்து மொபைல் சாதனங்களில் தரவு (data ) நுகர்வு கணிசமாக உயர்ந்துள்ளது. மொபைல்களில் தரவு நுகர்வு கணிசமாக வளர்ந்த போதிலும், ஆர்ஜியோ அறிமுகமான பின்னர் பொறுப்பில் இருப்பவர்களுக்கு நிதியும் அதிகமானது , இது தொலைத் தொடர்புத் துறை ஒருங்கிணைப்பிற்கும் வழிவகுத்தது இப்போது, மூன்று தனியார் நிறுவனங்கள் மட்டுமே எஞ்சியுள்ளன - பிஎஸ்என்எல் / எம்டிஎன்எல் தவிர ஏர்டெல், வோடபோன் ஐடியா (அவர்கள் இணைப்பிற்கு பிறகு).
இந்த தீவிர போட்டி சகாப்தத்தில் பொதுத்துறை தொலைத் தொடர்பு நிறுவனங்கள் நிற்க உதவும் இந்த மறுமலர்ச்சி ஏற்படுத்தும் தொகுப்பில், பி.எஸ்.என்.எல் மற்றும் எம்.டி.என்.எல் ஆகியவற்றை இணைக்க அறிவித்ததோடு, இறையாண்மை பத்திரங்கள் மூலம் ரூ .15,000கோடியை திரட்ட விரும்புவதோடு , ரூ .38,000 கோடி சொத்துக்களை பணமாக்க்கி அடுத்த நான்கு ஆண்டுகளில் ஊழியர்களுக்கு தன்னார்வ ஓய்வூதிய திட்டமும் (வி.ஆர்.எஸ்)வழங்க விரும்புகிறது .
ஒரு தொலை நோக்கு பார்வையில், பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் இணைப்பு தர்க்கரீதியானதாகத் தெரிகிறது, ஏனெனில் இவை இரண்டும் ஒன்றுடன் மற்றொன்று இல்லாத பகுதிகளில் இயங்குகின்றன. அனைத்து முக்கிய தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களும் மொபைல் சேவைகளுக்கு பான்-இந்தியா வைக் கொண்டிருப்பதால், இது பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் நிறுவனங்களுக்கும் பொருந்துகிறது. பொதுத்துறை நிறுவனம் போட்டியியை சமாளிப்பதற்காக சாத்தியமான எதிர் சலுகைகளை வழங்குகிறது. தனியார் ஆபரேட்டர்களின் செயல் திறனற்ற இருப்புநிலைகள் , அடுத்த தலைமுறை தரவு(data ) நெட்வொர்க்குகள் நாட்டின் கிராமப்புற மற்றும் பொருளாதார ரீதியாக இயலாத பகுதிகளுக்கு செல்வதை குறைக்க கட்டாயப்படுத்துகின்றன. ஒரு வலுவான பொதுத்துறை நிறுவனத்தை வைத்திருப்பது, தனியார் நிறுவனங்களின் கட்டணங்களை அதிகரிப்பதைத் தடுப்பது மட்டுமல்லாமல், நிதி அழுத்தத்திலிருந்து வெளியேறுவதற்கான ஒரு சுலபமான வழியாகும், அது கிராமப்புற நுகர்வோர்க்கு கூட வழங்கப்படுவதை உறுதிசெய்கிறது.
, நாட்டின் திட்டங்களின் நலனுக்காகத்தான்
பி.எஸ்.என்.எல் உள்ளது. நாடு முழுவதும் உள்ள மூலோபாய நிறுவனங்கள் மற்றும் பிராந்தியங்களை இணைப்பதில் பிஎஸ்என்எல் முக்கிய பங்கு வகிக்கிறது, எனவே அவற்றின் இருப்பு தேவை. தேசிய பாதுகாப்பு என்று வரும்போது, தகவல் தொடர்பு நெட்வொர்க் ஒரு முக்கிய அங்கமாகும். இந்த செயல்பாட்டை எந்த தனியார் ஆபரேட்டருக்கும் கொடுக்க முடியாது. மத்திய தொலைத் தொடர்பு அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறுகையில், வெள்ளம், சூறாவளிகள் மற்றும் பிற அவசரநிலைகள் போன்ற இயற்கை பேரழிவுகளை நாடு எதிர்கொள்ளும்போதெல்லாம் விரைவான இலவச சேவைகளை வழங்கி பி.எஸ்.என்.எல் எப்போதும் முதலிடம் வகிக்கிறது. இந்த முக்கியமான காலங்களில் இது பெரும்பாலும் இந்த ஆபரேட்டரால் மட்டுமே வெளிப்பட்டது.
நேஷனல் டிஜிட்டல் கம்யூனிகேஷன் பாலிசி
டிஜிட்டல் பொருளாதாரம் பரந்த இடத்தை பிடிக்க விரைவான வேகத்தில் வளர்ந்து வரும் ஒரு சகாப்தத்தில்,நாட்டு பாதுகாப்புக்கும் மற்றும் நிதி நடவடிக்கைகளை பாதுகாக்கவும் வலுவான அரசுக்கு சொந்தமான தொலைத் தொடர்பு நிறுவனங்களை வைத்திருப்பது மிகவும் அவசியமான ஒன்றாகும். மேம்பட்ட பிராட்பேண்ட் ஊடுருவல், சிறந்த ரேடியோ ஸ்பெக்ட்ரம் மேலாண்மை, தேசிய தொலைதொடர்பு உள்கட்டமைப்பின் மேம்பட்ட பாதுகாப்பு,மற்றவர்களிடையே நிகர நடுநிலை கொள்கைகளை பின்பற்றுதல் போன்ற டிஜிட்டல் பொருளாதாரத்தின் சில முக்கிய கூறுகளை, 2018 இல் தொடங்கப்பட்ட தேசிய டிஜிட்டல் தொடர்பு கொள்கையில் (என்.டி.சி.பி) தொலைத் தொடர்புத் துறை அங்கீகரிக்கிறது. டிஜிட்டல் சகாப்தத்தில் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான அணுகுமுறையில் என்டிசிபி மூன்று முக்கிய செயல் பாதைகளை விரிவாக கோடிட்டுக் காட்டுகிறது, அதாவது `கனெக்ட் இந்தியா’, `ப்ரொபல் இந்தியா’ மற்றும் `செக்யூர் இந்தியா’. கனெக்ட் இந்தியா சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான ஒரு கருவியாக பிராட்பேண்டைப் பார்க்கும் அதே நேரத்தில் 5 ஜி, செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் புதிய டிஜிட்டல் தொழில்நுட்பங்களின் சக்தியைப் பயன்படுத்துவதற்கான நோக்கத்தை இந்தியா கொண்டுள்ளது.
வலுவான அரசுக்கு சொந்தமான தொலைத் தொடர்பு நிறுவனங்களைக் கொண்டிருப்பதன் மூலம் மேற்கண்ட இலக்குகளை அடைய இந்தியா 2022 ம் ஆண்டை இலக்காக நிர்ணயித்துள்ளது,ஆனால் நமது அண்டை நாடான சீனா இந்த விஷயத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளது. டிஜிட்டல் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிப்பதைத் தவிர, சீன தொலைத் தொடர்பு நிறுவனங்கள் ஒரே நேரத்தில் அரசியல், பொருளாதார மற்றும் சமூகம் என பல இலக்குகளில் சேவை செய்கின்றன. பெரும்பாலான நாடுகளில் அரசாங்கங்கள் தொலைதொடர்பு உள்கட்டமைப்பு மீதான தங்கள் பிடியை விட்டுவிட்டு, தனியார் நிறுவனங்களை அனுமதித்தாலும், சீனா ஒரு விதிவிலக்காகவே உள்ளது. கடந்த ஆண்டு இறுதியில் 4 ஜி எல்டிஇ சந்தாதாரர் எண்ணிக்கையில் சீனா ஒரு பில்லியனைத் தாண்டியது, இதில் அரசுக்கு சொந்தமான தொலைத் தொடர்பு நிறுவனங்களான சீனா மொபைல், சீனா டெலிகாம் மற்றும் சீனா யூனிகாம் ஆகியவை முறையே 65 சதவீதம், 18 சதவீதம் மற்றும் 17 சதவீத சந்தாதாரர்களைக் கொண்டுள்ளன. . இதனால் உலகில் 4 ஜி சந்தாதாரர்களில் 40 சதவீதத்திற்கும் அதிகமானோர் சீனாவை சார்ந்துள்ளனர் .
இந்தியாவைப் பொறுத்தவரை, பொதுத்துறை தொலைத் தொடர்பு நிறுவனங்கள் வயர்லெஸ் சந்தாதாரர்களின் எண்ணிக்கையில் வெறும் 10 சதவீதமும், வயர்லெஸ் பிராட்பேண்ட் சந்தாதாரர் எண்ணிக்கையில் 3 சதவீதமும் மட்டுமே உள்ளது . , மே 2019 நிலவரப்படி, பிஎஸ்என்எல் லோட சந்தை பங்கு 9.98 சதவீதமாக இருந்தது, இது எம்டிஎன்எல் உடன் இணைந்து 10.28 சதவீதம் வரை செல்கிறது என ட்ராய் கூறியுள்ளது . இதற்கு மாறாக, தனியார் ஆபரேட்டர்கள் சந்தையில் பெரும்பகுதியை வைத்திருக்கிறார்கள். (வோடபோனின் சந்தைப் பங்கு 33.36 சதவீதமாகவும், ஏர்டெல் 27.58 சதவீதமாகவும் உள்ளது.) பி.எஸ்.என்.எல் நவரத்னா நிறுவனத்தில் இருந்து நோய்வாய்ப்பட்ட பொதுத்துறை நிறுவனத்திற்கு வீழ்ச்சியடைந்தது.
இந்த மறுமலர்ச்சி திட்டத்தில், 4 ஜி ஸ்பெக்ட்ரம், நிறுவனங்களை போட்டிக்கு உட்படுத்தும் என்ற நம்பிக்கையில் அரசாங்கம் மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளது. ஆனால் கவனிக்கப்பட வேண்டிய உண்மையான பிரச்சினை என்னவென்றால், பிஎஸ்என்எல் போட்டித்தன்மையுடன் செயல்பட ஆயத்தமாகுமா என்பதுதான். 4 ஜி ஸ்பெக்ட்ரம் மட்டும் வாடிக்கையாளர்களுக்கு உத்தரவாதம் அளிக்காது. வாடிக்கையாளர்கள் எளிதான அணுகல் மற்றும் பதிலளிப்புக்கு ஆதரவளிக்கின்றனர் . பொதுவாக, நுகர்வோர் எதிர்கொள்ளும் வணிகங்களில் பொதுத்துறை நிறுவனங்கள் நிறைய போராடுகின்றன. வாடிக்கையாளர்கள் நிறைய கோருவதே இதற்குக் காரணம், வாடிக்கையாளர்களுக்கு உடனடியாக பதிலளிக்க ஒரு நிறுவனத்தின் செயல்முறைகள் தேவை. , சந்தாதாரர்கள் தங்கள் வணிகத்தை வேறு இடத்திற்கு எடுத்துச் செல்வதற்கு பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல்லின் மோசமான வாடிக்கையாளர் சேவை மிகப்பெரிய காரணங்களில் ஒன்றாகும்.
ஒரு கழுத்தை அறுக்கும் தொலைத் தொடர்பு சந்தையில், போட்டியிடும் திறன் கொண்ட மாநில தொலைத் தொடர்பு நிறுவனங்களை உருவாக்க அரசாங்கம் நம்பகமான செயல் திட்டத்தை உருவாக்க வேண்டும். உதாரணமாக, ஒரு பொதுத்துறை நிறுவனம் போட்டித்தன்மையுடன் இருக்க, அதற்கு ஒரு சுயாட்சி தேவை. இருப்பினும், மிக நீண்ட காலமாக, அரசாங்கம் நடத்தும் தொலைத்தொடர்பு நிறுவனங்களை தனிப்பட்ட சொத்தாக அரசாங்கம் கருதுகிறது. காலாவதியான தொழில்நுட்பத்தில் முதலீடு செய்வதில் அவர்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு, மோசமான தரமான ஸ்பெக்ட்ரத்தை அதிக விலைக்கு விற்றனர். இது போன்ற காரணிகள் இரு நிறுவனங்களின் நிலையான சரிவுக்கு பங்களித்தன. மீட்புத் திட்டத்துடன் டெல்கோஸின் நிர்வாக சீர்திருத்தமும் அதனுடன் தொடர்புடைய பணமும் முக்கியமான அம்சமாகும், . பணி கலாச்சாரத்தை மாற்றுவது மற்றும் இந்த நிறுவனங்களின் செயல்முறைகளின் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புடன் ஊக்குவிப்பது , போன்றவையால் நல்ல கடினமான முடிவுகளை காண நிறைய உறுதிப்பாடு தேவைப்படும். குறைந்தபட்ச அரசாங்கம் மற்றும் அதிகபட்ச நிர்வாகம் குறித்த அதன் வாக்குறுதியை நிறைவேற்ற, அதை விட கற்றுக்கொள்ள வேண்டும். இந்த கட்டத்தில், பொருளாதாரம் மந்தநிலையின் மத்தியில் இருக்கும் நேரத்தில், அது தொடர்பான அனைத்து சிக்கல்களையும் தீர்க்கும் முழுமையான அணுகுமுறை இல்லாவிட்டால் மீட்புத் திட்டம் மற்றொரு வீணான முயற்சியாக மாறுவதற்கான அபாயத்தில் இருக்கிறது,. இரண்டு பொதுத்துறை நிறுவனங்களின் ஆபத்தான நிதி நிலைமையைக் கருத்தில் கொண்டு, புதிய திட்டம் ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இருக்கும். சீர்திருத்தமும் மறுமலர்ச்சியும் இந்த நேரத்தில் செய்யபடவில்லை என்றால் அது இரண்டு தொலைத் தொடர்பு நிறுவனங்களின் முடிவுக்கு வழி வகுக்கலாம்
Conclusion: