கரோனா வைரஸ் நோய் நாடு முழுவதும் வேகமாக பரவிவருகிறது. தெலங்கானாவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 26ஆக உயர்ந்துள்ள நிலையில், வைரஸ் பரவலை தடுக்கும் நோக்கில் மாநிலத்தை மார்ச் 31ஆம் தேதி வரை முடக்க முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து ஹைதராபாத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், "வைரஸ் பரவலை தடுக்க நடவடிக்கை மேற்கொள்வது அவசியமாக கருதப்படுகிறது. எனவே, மாநிலத்தை முடக்க உத்தரவிட்டுள்ளேன். குடும்பத்தில் ஒருவர் மட்டும் கடைக்கு சென்று பால், காய்கறிகள் வாங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருள்களை கொண்டு் செல்லும் லாரிகள் இயங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது" என்றார்.