ETV Bharat / bharat

ஊரடங்கால் தள்ளுவண்டி வியாபாரம் செய்யும் தலைமை‌ ஆசிரியர்!

ஹைதராபாத்: பொதுமுடக்கத்தால் வேலையில்லாமல் தனியார் பள்ளி தலைமை ஆசிரியர் ஒருவர், தள்ளுவண்டியில் உணவு வியாபாரம் செய்துவருகிறார்.

hm
hm
author img

By

Published : Jun 24, 2020, 7:29 AM IST

கரோனா வைரஸ் (தீநுண்மி) காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாத இறுதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. சுமார் மூன்று மாதங்களுக்கும் மேலாக ஊரடங்கு நீட்டித்தும் தொற்று பரவலின் தாக்கம் குறைந்தபாடில்லை.

இதன் தாக்கம், பலரின் வாழ்வாதாரத்தைச் சின்னாபின்னமாக்கியுள்ளது. அந்த வகையில், வேலையில்லாமல் தனியார் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஒருவர் பலருக்கு சூடான இட்லி, வடையை அளித்துவருகிறார்.

தலைமை ஆசிரியர் ராம்பாபு

தெலங்கானா மாநிலம் கம்மம் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியின் தலைமை ஆசிரியர் ராம்பாபு. இவர் பணியாற்றிய தனியார் பள்ளியானது ஊரடங்கு காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இதனால், வேலை இல்லாத காரணத்தினால் வீட்டின் வருமானத்தை சமாளிப்பதற்காக தள்ளுவண்டியில் உணவு வழங்கிவருகிறார் தலைமை ஆசிரியர் ராம்பாபு.

இது குறித்து அவர் கூறுகையில், "பள்ளிகள் மீண்டும் திறக்கும்வரை வேலையில்லை எனப் பள்ளி நிர்வாகம் தெரிவித்துவிட்டது. குடும்பத்தை நடத்த பணம் இல்லாத காரணத்தினால் நானும் எனது மனைவியும் தள்ளுவண்டி கடையில் இட்லி, வடை விற்பனை செய்துவருகிறோம். என்னைப் போல் பலரும் ஊரடங்கால் வேலையிழந்து தவித்துவருகின்றனர்" என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.