ETV Bharat / bharat

பெற்ற தாய்க்கு உணவில் விஷம் வைத்துக் கொலை செய்த மகன்! - தெலங்கானா மாநில செய்திகள்

தெலங்கானா: கிரிக்கெட் போட்டியில் பந்தயம் கட்டி விளையாடியதை, தனது தாய் தட்டிக்கேட்டதால், மகன் அவரைக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சாய்நாத் ரெட்டி
சாய்நாத் ரெட்டி
author img

By

Published : Dec 1, 2020, 9:14 AM IST

தெலங்கானா மாநிலம், ஹைதராபாத் பகுதியைச் சேர்ந்தவர் சுனிதா(42). இவரது கணவர் பிரபாகர் ரெட்டி, கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த நிலையில், தனது மகன் சாய்நாத் ரெட்டி, மகள் அனுஷாவுடன் வசித்து வந்தார். சுனிதா தனியார் நிறுவனத்தில் வேலை செய்து, தனது குடும்பத்தைக் காப்பாற்றி வந்தார். அதேபோல் சாய்நாத் ரெட்டி எம்.டெக் படித்துவிட்டு தனியார் நிறுவனத்தில் பணியாற்ற, அனுஷா பார்மசி படித்து வந்தார். இதற்கிடையில் பிரபாகர் ரெட்டியின் மரணத்திற்குப் பிறகு, வந்த காப்பீட்டுத் தொகையான 20 லட்சம் ரூபாயை அவர்களது குடும்பம் வங்கியில் சேமித்து வைத்திருந்தது.

இந்நிலையில் சாய்நாத் ரெட்டி, ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் பந்தயம் கட்டி விளையாடி வந்தார். அதில் கடுமையான பின்னடைவைச் சந்தித்ததால், தனது தாய்க்கு தெரியாமல் வங்கியிலிருந்து ஒரு பெரிய தொகையை எடுத்து சாய்நாத் செலவு செய்துள்ளார். அதேபோல், வீட்டிலிருந்து 150 கிராம் தங்க நகைகளையும் வைத்து பந்தயம் கட்டி விளையாடியுள்ளார். இதுகுறித்து தாயாருக்குத் தெரியவர, சாய்நாத்தின் தாய் சுனிதாவும், அவரது தங்கை அனுஷாவும் கண்டித்துள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த சாய்நாத் ரெட்டி உணவில் விஷம் வைத்து, தனது தாய் மற்றும் தங்கையை கொலை செய்ய முயன்றுள்ளார். விஷம் கலந்த உணவை உண்ட இருவரும், வீட்டில் உயிருக்குப் போராடிய நிலையில் கிடந்துள்ளனர். இதை அலுவலகத்திலிருந்து வந்து பார்த்த சாய்நாத் ரெட்டி, அவர்களை உடனே மருத்துவமனையில் அனுமதிக்காமல், இருவரும் மயக்கநிலைக்குச் செல்லும் வரை காத்திருந்து, பிறகு மருத்துவமனையில் அனுமதித்ததாக கூறப்படுகிறது.

மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த இருவரில் அனுஷா கடந்த நவம்பர் 27ஆம் தேதி உயிரிழந்த நிலையில், சுனிதா நவம்பர் 28ஆம் தேதி உயிரிழந்தார். பிறகு, இதுகுறித்து காவல் துறையினருக்குத் தகவல் தெரிவிக்க சம்பவ இடத்திற்குச் சென்ற சாய்நாத் ரெட்டியை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: ஆன்லைனில் ஏழு கோடி ரூபாய் வரை மோசடி- நான்கு பேர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.