ஹைதராபாத் என்கவுன்டர் குறித்து புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, “நாட்டில் தற்போது பாலியல் வன்கொடுமைகள் சர்வசாதாரணமாக ஆகிவிட்டது. இவர்களுக்கு மிகப்பெரிய தண்டனை வழங்க வேண்டும். தெலங்கானாவில் மருத்துவரை பாலியல் வல்லுறவு செய்த குற்றவாளிகள் சுட்டுக்கொல்லப்பட்டது, இறைவன் கொடுத்த தண்டனை. இதன்மூலம் குற்றவாளிகள் பாடம் கற்க வேண்டும்” என்று தெரிவித்தார்.
தெலங்கானா என்கவுன்டர் தொடர்பான செய்திகள் உடனுக்குடன்...
19:38 December 06
19:37 December 06
19:12 December 06
ஹைதராபாத் என்கவுன்டர் சம்பவத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் மக்கள் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.
17:56 December 06
என்கவுன்டர்களை சட்டப்பூர்வமாக்க வேண்டும் - பாஜக எம்.பி. சர்ச்சை
ஹைதராபாத் என்கவுன்டர் குறித்து பாஜக எம்.பி. லாக்கெட் சட்டர்ஜி, "நாட்டுக்காக நல்ல முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதனை செய்தித்தாளில் படித்தவுடன் மகிழ்ச்சி அடைந்தேன். இப்போது, கொல்லப்பட்ட பெண்ணின் ஆத்மா சாந்தி அடைந்திருக்கும். இதுபோன்ற என்கவுன்டர்கள் சட்டப்பூர்வமாக்க வேண்டும்" எனக் கோரிக்கைவிடுத்துள்ளார்.
17:32 December 06
நீதிமன்றம், சட்டம் போன்றவை எதற்கு இருக்கிறது? - மேனகா காந்தி சரமாரி கேள்வி
ஹைதராபாத் என்கவுன்டர் குறித்து மேனகா காந்தி, "நீங்கள் விரும்புவதால் ஒருவரை கொல்லக்கூடாது. சட்டத்தை நாம் கையில் எடுக்கக் கூடாது. குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனையை நீதிமன்றம் வழங்கியிருக்க வேண்டும். விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது, அவர்களை சுட்டுக்கொன்றால் நீதிமன்றம், சட்டம் போன்றவை எதற்கு இருக்கிறது" என சரமாரியாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.
17:07 December 06
சட்டம் தன் கடமையை செய்துள்ளது - சைபராபாத் காவல் ஆணையர் சஜ்ஜனார்
செய்தியாளர்களை சந்தித்த சைபராபாத் காவல் ஆணையர் சஜ்ஜனார், "குற்றஞ்சாட்டப்பட்ட நால்வரை காவலில் எடுத்த பிறகு டிசம்பர் 4, 5 ஆகிய தேதிகளில் விசாரணை நடத்தினோம். விசாரணையின் ஒரு பகுதியாக பாலியல் வன்கொடுமை நடந்த இடத்திற்கு நால்வரை அழைத்து வந்தோம். எங்களைத் தாக்கி ஆயுதங்களைப் பிடிங்கி அவர்கள் சுடத் தொடங்கினர். நாங்கள் எச்சரித்தோம். இருந்தபோதிலும், அவர்கள் தொடர்ந்து சுட்டனர். இறுதியாக வேறு வழியின்றி நாங்கள் என்கவுன்டர் செய்தோம். அப்போது, காவல்துறையைச் சேர்ந்த இருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
என்கவுன்டர் நடைபெற்றபோது, காவல் துறையைச் சேர்ந்த 10 பேர் சம்பவ இடத்தில் இருந்தனர். பாதிக்கப்பட்ட பெண்ணின் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. குற்றம்சாட்டப்பட்டவர்களிடமிருந்து இரண்டு ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சட்டம் தன் கடமையைச் செய்துள்ளது.
தேசிய மனித உரிமைகள் ஆணையம், மாநில அரசு என அனைவருக்கும் பதில் சொல்ல கடமைப்பட்டிருக்கிறோம். கர்நாடகாவில் இதுபோன்று பல சம்பவங்களில் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் ஈடுபட்டுள்ளதாகச் சந்தேகம் எழுந்துள்ளது. விசாரணை மேற்கொண்டிருக்கிறோம்" என தெரிவித்துள்ளார்
17:07 December 06
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், "வெளிச்சத்திற்கு வரும் பாலியல் வன்கொடுமை சம்பவங்களால் மக்கள் கோபத்தில் இருந்தனர். உன்னாவாக இருந்தாலும் சரி, ஹைதராபாத் சம்பவமாக இருந்தாலும் சரி. எனவேதான் என்கவுன்டரால் மக்கள் மகிழ்ச்சியடைகின்றனர்.
17:06 December 06
ஹைதராபாத் காவல் துறைக்கு சல்யூட் அடித்த சாய்னா நேவால்
ஹைதராபாத் காவல் துறை சிறப்பான செயலை செய்துள்ளது. தலைவணங்குகிறேன் என இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
16:28 December 06
நடைபெற்ற என்கவுன்டர் சம்பவம் சட்டவிரோதமாக இருக்கலாம் என ட்விட்டரில் காங்கிரஸ் மூத்தத் தலைவர் சசி தரூரிடம் பத்திரிகையாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு அவர், "கொள்கை அளவில் உடன்படுகிறேன். குற்றவாளிகளிடம் ஆயுதங்கள் இருந்ததா போன்ற பல கேள்விகளுக்கு விடை தெரியவில்லை. காவல் துறையினர் இதனை நியாயப்படுத்தலாம். ஆனால், முழு விவரங்கள் தெரியும்வரை இந்தச் சம்பவத்தை கண்டிக்க முடியாது. சட்டவிரோதமான என்கவுன்டர்களை ஏற்றுக்கொள்ள முடியாது" எனப் பதிவிட்டுள்ளார்.
16:27 December 06
என்கவுன்டர் குறித்து சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகல், "குற்றவாளிகள் தப்பித்துச் செல்ல முயற்சிக்கும்போது, காவல் துறையினருக்கு வேறு வழியில்லை. நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது எனக் கூறலாம்" எனத் தெரிவித்துள்ளார்.
16:27 December 06
என்கவுன்டரால் பாலியல் வன்கொடுமைகள் தடுக்கப்படுமா என இந்திய முன்னாள் பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டா ட்விட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார்.
15:48 December 06
என்கவுன்டர் சம்பவத்தை தேசிய மனித உரிமைகள் ஆணையம் தானாக முன்வந்து எடுத்துக்கொண்டு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. சம்பவம் குறித்து விசாரிக்க ஆணையத்தின் தலைமை இயக்குநர் சம்பவம் நடந்த இடத்திற்குச் செல்லவுள்ளார்.
12:48 December 06
உடற்கூறாய்வுக்காக அனுப்பப்பட்ட உடல்கள்
திஷா கொலை வழக்கில் என்கவுன்டர் செய்யப்பட்டவர்களின் உடல்கள் உடற்கூறாய்வுக்காக மகாபூப்நகர் மருத்துவமனைக்கு மாற்றப்படுகிறது.
12:13 December 06
குற்றவாளிகளை உனடியாக தண்டிக்க வேண்டும் - மாணவிகள் கருத்து
குற்றச் செயல்களில் ஈடுபடுவோரை உடனுக்குடன் தண்டித்தால் மட்டுமே இனி குற்றங்களைத் தடுக்க முடியும் என கல்லூரி மாணவிகள் தெரிவித்துள்ளனர். திஷா கொலை வழக்கில் காவல்துறையினர் விரைந்து செயல்படுவார்கள் என எதிர்பார்க்கவில்லை என்றும், இன்றைய நாள் பெண்களுக்கு மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும் எனவும் தெரிவித்திருக்கின்றனர்.
11:41 December 06
போலீஸ் கமிஷனர் படத்திற்கு பாலாபிஷேகம்
தெலங்கானா காவல்துறையையும், சைபராபாத் போலீஸ் கமிஷனர் வி.சி.சஜ்ஜனரை பாராட்டியும் பாஜக இளைஞரணியினர் அவரது புகைப்படத்திற்கு பாலாபிஷேகம் செய்து முழங்கமிட்டனர். மேலும், காவலர்களுக்கு ரோஜாப் பூக்களை அளித்து வாழ்த்து தெரிவித்தனர்.
11:23 December 06
பட்டாசு வெடித்துக் கொண்டாடும் பெண்கள்
என்கவுன்டர் நடவடிக்கைக்கு பாராட்டு தெரிவித்து ஹைதராபாத்தின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
10:55 December 06
காவலர்களுக்கு இனிப்பு ஊட்டும் தாய்மார்கள்
ஹைதராபாத் திஷா வன்கொடுமை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில், தெலங்கானா காவல்துறையினருக்கு மரியாதை செலுத்தும் வகையில், பொதுமக்கள் கூடி காவலர்களுக்கு இனிப்புகள் வழங்கியும், ஊட்டியும் தங்களது மகிழ்ச்சியை பரிமாரிக்கொண்டாதோடு, தெலங்கானா போலீஸ் சிந்தாபாத் என முழங்கமிட்டனர்.
10:40 December 06
திஷா கொலைவழக்கு: தெலங்கானாவில் பொதுமக்கள் கொண்டாட்டம்
திஷா கொலைவழக்கு: குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் என்கவுன்டர் செய்யப்பட்டிருப்பதை கொண்டாடும் வகையில் தெலங்கானாவின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நீதி கிடைத்துவிட்டதாக கோஷங்களை எழுப்பி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டனர்.
10:20 December 06
எனது மகளின் ஆன்மா சாந்தி அடைந்திருக்கும் - திஷாவின் தந்தை
"குற்றவாளிகளை காவல்துறையினர் என்கவுன்டர் செய்திருப்பதால் தனது மகளின் ஆன்மா சாந்தி அடைந்திருக்கும்" என கொலை செய்யப்பட்ட திஷாவின் தந்தை தெரிவித்துள்ளார்.
08:42 December 06
தெலங்கானா கால்நடை மருத்துவர் வன்கொடுமை செய்து எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் என்கவுன்டர் செய்யப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் கே.நாராயணா தெரிவித்துள்ளார். அப்பாவி பெண்கள் மீது நடத்தப்படும் இதுபோன்ற வன்கொடுமை கொலைக் குற்றங்களை செய்த குற்றவாளிகளுக்கு இதுபோன்ற தண்டனை வழங்கப்படுவதே இந்த சமூகத்தில் குற்றங்கள் நடக்காமல் இருக்க வழிவகை செய்யும் என தெரிவித்திருக்கிறார்.
07:59 December 06

தெலங்கானா கால்நடை மருத்துவர் கொலை வழக்கில் குற்றவாளிகள் முகமது ஆரிஃப், ஜொல்லு சிவா, நவீன் மற்றும் சென்ன கேசவலு ஆகியோரை காவல்துறையினர் என்கவுன்டர் செய்துள்ளனர். இது குறித்து அதிகாரப்பூர்வமாக தெலங்கானா காவல்துறையினர் அறிவித்துள்ளனர். சம்பவ இடத்தில் சைபராபாத் போலீஸ் கமிஷனர் ஆய்வு செய்தார்.

Disa encounter page - Live update
Conclusion: