தெலங்கானாவில் கரோனா வைரஸ் தொற்றுத் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் சுகாதாரப் பணியாளர்களுக்கு, 10 விழுக்காடு ஊக்கத்தொகை அளிக்கப்படும் என, அம்மாநில முதலமைச்சர் கே.சந்திரசேகர் ராவ் கூறினார்.
முன்னதாக, காவலர்கள், சுகாதாரப் பணியாளர்களுக்கு முழு சம்பளம் அளிக்கப்படும் என தெரிவித்திருந்தார். இந்நிலையில், தற்போது 10 விழுக்காடு ஊக்கத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, ஹைதராபாத் பெருநகராட்சியில் வேலைபார்க்கும் ஊழியர்களுக்கு, ரூ.7,500 சிறப்பு ஊக்கத்தொகை, ஹைதராபாத் பெருநகர குடிநீர் விநியோக ஊழியர்களுக்கு ரூ.5 ஆயிரமும் சிறப்பு ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என, முதலமைச்சர் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
கரோனா (கோவிட்19) வைரஸ் தொற்றுக் காரணமாக, நாட்டில் 21 நாட்கள் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் காவலர்கள் உள்ளிட்டோர் இரவுப் பகல் பாராமல் சேவையாற்றிவருகின்றனர்.
இதையும் படிங்க: பிறந்தநாள் கொண்டாட கூட்டம் சேர்த்த பாஜக எம்எல்ஏ மீது வழக்குப்பதிவு