ETV Bharat / bharat

நிதிஷ் குமார் ஆட்சியில் பாலியல் வன்கொடுமை, கொலை அதிகரிப்பு! - National Crime record Bureau

பாட்னா: நிதிஷ் குமார் ஆட்சியில் பாலியல் வன்கொடுமை, கொலை, வன்முறை, கலவரம் அதிகரித்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் குற்றஞ்சாட்டியுள்ளார்.

Tejashwi slams Nithish Kumar Government
author img

By

Published : Oct 23, 2019, 10:24 PM IST

தேசிய குற்றப்பதிவு ஆணையத்தின் (National Crime record Bureau) புள்ளி விவரத் தகவல்கள் நேற்று வெளியாகின. இது தொடர்பாக பிகார் எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் பேசியதாவது:

பிகார் மாநிலத்தில் குற்றங்கள் அதிகரித்துவருகின்றன. கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை, வன்முறை, கலவரம் சர்வசாதாரணமாக நடக்கின்றன. குறிப்பாக பட்டியலின மக்கள் மீதான கொலை, வன்முறை குற்றங்கள் அதிகரித்துள்ளன. 15 ஆண்டாக உள் துறையை (காவல் துறை) தன்வசம் வைத்துள்ள நிதிஷ் குமாருக்கு இது குற்ற உணர்வை ஏற்படுத்தவில்லையா?

மொத்தத்தில் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னை உள்ளது. கடுமையான நடவடிக்கைகள் எடுத்து குற்றச் சம்பவங்களை குறைக்க வேண்டும். இவ்வாறு தேஜஸ்வி யாதவ் கூறினார்.

இதையும் படிங்க:பிகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் மீது நீதிமன்றத்தில் புகார்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.