ETV Bharat / bharat

'முதலில் மோடி, இப்ப மனோகர் லால் கட்டர்' - மனம்தளராமல் போட்டியிடும் தேஜ் பகதூர்! - பணி நீக்கம் செய்யப்பட்ட ராணுவ அதிகாரி

சண்டிகர்: பிரதமர் நரேந்திர மோடியை எதிர்த்துப் போட்டியிடும் வாய்ப்பு நிராகரிக்கப்பட்ட தேஜ் பகதூர் யாதவ், ஹரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டரை எதிர்த்து போட்டியிடவுள்ளார்.

Tej Bahadur Yadav contest against Manohar Lal Khattar in Haryana assembly Polls
author img

By

Published : Sep 30, 2019, 8:49 PM IST

Updated : Sep 30, 2019, 11:28 PM IST

எல்லை பாதுகாப்புப் படை வீரராக பணியாற்றிவந்த தேஜ் பகதூர் யாதவ், நாட்டின் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் தங்களுக்கு முறையான உணவு வழங்குவதில்லை என வீடியோ ஒன்றை வெளியிட்டதன் மூலம் பிரபலமானவர். அவர் வெளியிட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி, பாஜக அரசாங்கத்தை பலரும் கேள்வி எழுப்பினர். இதனால் அவர் பணி நீக்கம் செய்யப்பட்டதுதான் மிச்சம்.

பணி நீக்கம் செய்யப்பட்ட தேஜ் பகதூர், மோடி அரசாங்கத்துக்கு எதிராக குரல் கொடுப்பேன் என தெரிவித்திருந்தார். அதுமட்டுமல்லாமல், நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் இந்திய தேர்தல் ஆணையம் அவரது வேட்புமனுவை நிராகரித்துவிட்டது. இந்நிலையில் ஹரியானா மாநிலத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலில் ஆளும் பாஜக முதலமைச்சர் மனோகர் லால் கட்டருக்கு எதிராக போட்டியிடவுள்ளார்.

இதற்காக துஷ்யந்த் சவுதலா தலைமை வகிக்கும் ஹரியானா மாநிலக் கட்சியான ஜனநாயக ஜனதா தளத்தில் அவர் இணைந்துள்ளார். வேலையில்லா திண்டாட்டம் தனது மாநிலத்தின் முக்கியப் பிரச்னை என குறிப்பிடும் தேஜ் பகதூர், மனோகர் லால் கட்டரை எதிர்த்து கர்னல் சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிடவுள்ளார்.

இதையும் படிங்க:

முதல் முறையாக தேர்தலில் களமிறங்கும் தாக்கரே குடும்ப வாரிசு!

Last Updated : Sep 30, 2019, 11:28 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.