ETV Bharat / bharat

சிறுவர் சீர்திருத்த பள்ளியில் பாலியல் வன்புணர்வு - சிறுவனுக்கு பாலியல் வன்புணர்வு

புதுடெல்லி: சிறுவர் சீர்திருத்த பள்ளியில் உள்ள 15 வயது சிறுவனை 17 வயது சிறுவன் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கியதையடுத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சிறுவன் கைது
சிறுவன் கைது
author img

By

Published : Jul 25, 2020, 11:54 AM IST

டெல்லி முகர்ஜி நகரில் சிறுவர் சீர்திருத்த பள்ளி ஒன்று உள்ளது. இங்கு பல்வேறு குற்றங்கள் செய்த சிறுவர்கள் கைது செய்யப்பட்டு தங்க வைக்கப்பட்டுள்ளனர். இங்கிருந்த 15 வயது சிறுவனை 17 வயது சிறுவன் ஒருவன் மிரட்டி பாலியல் வன்புணர்வு செய்துள்ளான். இதனால் பாதிக்கப்பட்ட அந்த சிறுவனின் உடல்நிலை மோசமானது. அவரை சிகிச்சைக்காக சீர்திருத்த பள்ளி வளாகத்தில் இருக்கும் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்ட போது தனக்கு நேர்ந்த கொடுமையை விவரித்துள்ளார்.

இது குறித்து உடனே சீர்திருத்த பள்ளி அலுவலருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. பின்னர் அவர் காவல்துறையினருக்கு புகார் தெரிவித்துள்ளார். புகாரின் அடிப்படையில் பாதிக்கப்பட்ட சிறுவனிடம் காவல்துறையினர் விசாரிக்கையில், தான் கழிவறைக்கு சென்று கொண்டிருந்தபோது அங்கு வந்த ஒருவன், கூர்மையான ஆயுதங்களால் அச்சுறுத்தி பாலியல் வன்புணர்வு செய்ததாகவும், இது குறித்து வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியதாக அச்சிறுவன் கூறியுள்ளார்.

இதில் குற்றஞ்சாட்டப்பட்டவர், பாதிக்கப்பட்ட இருவரும் சீர்திருத்தப் பள்ளியில் தனித்தனியாக தங்கவைக்கப்பட்டுள்ளனர். குற்றஞ்சாட்டப்பட்ட 17 வயது சிறுவன் ஒரு கொலை வழக்கு தொடர்பாக இங்குள்ளார். பாதிக்கப்பட்ட 15 வயது சிறுவன் திருட்டு, கொள்ளை வழக்குகள் தொடர்பாக இங்கு தங்க வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட சிறுவன் மீது சீர்திருத்த பள்ளியில் இருக்கும் மற்ற சிறுவர்களை கொடுமையாக தாக்கியதாகவும் அவர்களை அச்சுறுத்தியதாகவும் புகார்கள் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ளன. தற்போது 17 வயது சிறுவன் மீது ஐபிசி 377 சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.