ETV Bharat / bharat

வெங்காயத்தை நினைத்தாலே கண்ணீர்! - Onion price in India

வெங்காயத்தை உரித்தால் கண்ணீர் வரும் என்ற நிலை மாறி, இந்திய மக்களுக்கு வெங்காய விலையை நினைத்தாலே கண்ணீர் வரும் நிலை தற்போது உருவாகி விட்டது.

Onion price
Onion price
author img

By

Published : Dec 3, 2019, 10:18 PM IST

தீபாவளிப் பண்டிகை முடிந்து, ஒரு மாதத்திற்கு மேலாகியும் கடந்த பல நாட்களாக இந்திய வீடுகளில் உள்ள சமையல் அறைகளில் 'வெங்காய விலை' வெடியாக வெடித்து இல்லத்தரசிகளின் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடச் செய்கிறது. எப்படி வெங்காய விலை திடீரென்று ராக்கெட் வேகத்தில் உயர்ந்து, மொத்த விலை சந்தைகளிலேயே கிலோ ரூ.100/- க்கு விற்கப்படுகிறது என்பதை நாடே வியந்து பார்க்கிறது.

வெங்காய களஞ்சியம்:
மகாராஷ்டிர மாநில வெங்காய உற்பத்தி களஞ்சியங்களான சோலாப்பூர், மற்றும் சங்கனேர் விற்பனைக் கூடங்களில் வெங்காயம் கிலோ ரூ. 110/- க்கு விற்பனை செய்யப்படுகின்றது . கோவை போன்ற தென்னிந்திய மாநகரங்களில் பெரிய வெங்காயம் கிலோ ரூ. 100/- க்கும் , சிறிய வெங்காயம் கிலோ ரூ. 130/-க்கும் விற்கப்படுகிறது. தேசிய தோட்டக்கலை வாரியம் தனது செய்திக் குறிப்பில், நாடெங்கிலும் உள்ள பெரும்பான்மையான பெரு நகரங்களில் வெங்காயத்தின் சில்லறை விற்பனை விலை ரூ. 80/-க்கு உயர்ந்துள்ளது என்று அறிவித்திருந்த போதிலும், முன் எப்போதும் இல்லாத அளவு விலை விண்ணைத்தொடும் அளவு உயர்ந்துள்ளது என்பது நாடறிந்த உண்மை.

ஹைதராபாத், நாக்பூர், போபால் போன்ற மாநகரங்களில் வெங்காய விலை ஏற்றத்தினால் பெரும்பாலான நுகர்வோர்களின் பணப்பைகளில் ஓட்டை விழுந்ததுதான் மிச்சம். மகாராஷ்டிரம் , கர்நாடகம் , மத்தியப்பிரதேசம், குஜராத், ராஜஸ்தான் , உத்திரப்பிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களில் பருவம் கடந்து பெய்த கனமழையானது பயிர் மகசூலைப் பாதித்தது. சர்வதேச வெங்காய உற்பத்தியாளர்களிடையே சீனாவிற்கு அடுத்து இந்தியா இரண்டாம் இடம் வகிக்கிறது.

கனமழையும் வெங்காயமும்:
எதிர்பாராத கனமழையால் பயிர்ச்சேதம் ஏற்பட்டதைக் கருத்தில் கொண்டு வெங்காய விலையைக் கட்டுப்படுத்த மூன்று வாரங்களில் வெளி நாடுகளில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்யும், அதே வேளையில் உள் நாட்டு வெங்காய மகசூலை அதிகப்படுத்தி உள் நாட்டு சந்தைகளில் போதுமான வெங்காய வரத்து உறுதிசெய்யப்படும் என மத்திய வேளாண்துறை அமைச்சர் பஸ்வான் அறிவித்திருக்கிறார். வெங்காய இறக்குமதி மற்றும் விநியோகிக்கும் பொறுப்பை தேசிய வர்த்தக நிறுவனமான MMTC வசம் இருக்கும். இறக்குமதி செய்யப்படும் சரக்கு டிசம்பர் மாதம் 15ஆம் தேதிக்குள் அனைத்து மாநிலங்களுக்கும் விநியோகிக்கும் பொறுப்பு தேசிய வேளாண் கூட்டுறவு விற்பனை இணையம் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இத்தகைய சூழலில் மத்திய அரசு மானிய விலையில் வழங்கும் வெங்காயத்தின் விலையை மேலும் குறைக்க வேண்டுமென மாநில அரசுகள் கோரிக்கை வைத்துள்ளன. அவ்வாறு மத்திய அரசு மாநில அரசுகளின் கோரிக்கைகளை ஏற்றால், அதன் பலன் நுகர்வோரைப் போய் சேருமா என்பது கேள்விக்குறியே.

கண்ணீர் வரவழைக்கும் வெங்காய விலை
கண்ணீர் வரவழைக்கும் வெங்காய விலை

வெங்காயத்தின் கடந்தகால வரலாறு:
கடந்த பல ஆண்டுகளாகவே திடீர் வெங்காய விலை ஏற்றத்தினால் நுகர்வோர் கண்ணீர் சிந்தும் காட்சிகள் அடிக்கடி அரங்கேறின. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெங்காயம் கிலோ ரூ. 60/-க்கு மேல் விற்ற போது, மத்திய அரசு இது விடயத்தில் தன்னால் எந்தத் தீர்வு நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை என்ற தன் இயலாமையை வெளிப்படையாகவே ஒத்துக்கொண்டது. இவ்வாண்டு தொடக்கத்தில் மத்திய அரசு ஒவ்வொரு மாநிலத்திற்கும் தேவையான வெங்காய விநியோகம் தீபாவளி பண்டிகைக்கு முன்பு, செப்டம்பர் மாத இறுதியில் பூர்த்தி செய்யப்படும் என அறிவித்திருந்தது. ஆனால், உறுதி அளித்தபடி மாநிலங்களின் முக்கால் வாசி வெங்காயத் தேவையைக் கூட பூர்த்தி செய்ய முடியவில்லை. கடந்த இரண்டு மாதங்களில் வெங்காயத்தின் விலை ஏற்ற நிலைமையைச் சரி செய்ய, மத்திய அரசு போதுமான நடவடிக்கை எடுத்தது என நம்புவதற்கு எள்ளளவும் இடம் இல்லை.

வெங்காய இறக்குமதி:

வெங்காய விலையேற்றம் அபாயகட்டத்தை எட்டியதைக் கண்ட மத்திய அரசு வெங்காயத்திற்கான ஏற்றுமதி மானியத் தொகை திட்டத்தை திரும்பப் பெற்றது. ஆனால், சில்லறை வியாபாரிகள் நூறு குவிண்டால் வெங்காயமும் மொத்த வியாபாரிகள் 500 குவிண்டால் வெங்காயமும் இருப்பு வைத்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டார்கள். அவசரத் தேவைக்காக எகிப்து போன்ற நாடுகளில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்ய முடிவெடுக்கப்பட்டது. பல்வேறு மாநிலங்கள் மானிய விலையில், வெங்காயம் விற்பனை செய்து வருகின்றன. ஆனால் இத்தகைய மானிய விலை விற்பனை நுகர்வோருக்கு பெருமளவில் நன்மை பயப்பதற்குப் பதிலாக விலையேற்றத்திற்கே வழி வகுக்கும்.

ஒருபுறம் ஏறிய விலை எப்போது குறையுமோ என்ற வியப்போடு நுகர்வோர் காத்திருக்கின்றனர். மறுபுறம் விவசாயிகள் குஜராத் , இமாச்சலப்பிரதேசம், அரியானா, பஞ்சாப் போன்ற மாநிலங்களில் தக்காளி போன்றவற்றின் பயன்பாடு கருத்தில் கொள்ளப்படாமல், வெங்காய உற்பத்தி செலவைப் பற்றி கவலை கொண்டுள்ளனர்.

கிட்டத்தட்ட ஒவ்வொரு ஆண்டும் ஏதாவது ஒரு பயிரால் பாதிப்பிற்குள்ளாவது விவசாயிகளாகவோ அல்லது நுகர்வோர்களாகவோ இருக்கிறார்கள் என்பது உண்மை. இது போன்று நிலைமை மோசமாகும் போது, மத்திய அரசோ அல்லது மாநில அரசுகளோ நிலைமையை சீராக்க எடுக்கவேண்டிய நடவடிக்கைகளில் தயக்கம் காட்டுகின்றன.

வெங்காய உற்பத்தியாளர்கள்
வெங்காய உற்பத்தியாளர்கள்

வேளாண் உற்பத்தி – இந்தியாவும் சீனாவும்:
14 பில்லியன் ஹெக்டேர் விவசாய நிலப்பரப்பை கொண்ட ஒரு பரந்த நாட்டில் நாம் வாழ்கிறோம். நம் அண்டை நாடான சீனா தனது விவசாய நிலங்களைப் பயன்படுத்தி தனது 95% உணவு தேவையைப் பூர்த்தி செய்து கொள்ளும் போது, இந்தியா மட்டும் எதற்காக வெங்காயத்தோடு பருப்பு வகைகளையும் சமையல் எண்ணெயையும் இறக்குமதி செய்ய வேண்டும்? இத்தகைய பற்றாக்குறை நிலைமையை வென்றெடுக்க இந்தியா சார்பு பயிர் உற்பத்தியை ஊக்குவிக்கலாம். நாடு முழுக்க எங்கெல்லாம் பயிர் வேளாண்மைக்குச் சலுகைகள் வழங்கப்படுகின்றனவோ அத்தகைய தகவல்களை ஒவ்வொரு பஞ்சாயத்தும் தொகுத்தல் வேண்டும்.

அவ்வாறு தொகுக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் அரசு துறைகளும் , விவசாய ஆராய்ச்சி நிறுவனங்களும் எந்த விதமான பயிர் வகைகளைப் பயிரிட்டால் அப்பகுதி சுற்றுச் சூழலால் பாதிக்கப்படாமல் அதிகப் படியான மகசூல் இலக்கை அடைய முடியும் என்பதை விவசாயிகளுக்கு எடுத்துரைக்கலாம்.

அரசும் மொத்த விலை நிர்ணய முறையைக் கடைப்பிடிப்பதின் மூலம் விவசாயி எந்த நிலையிலும் நஷ்டம் அடைவதிலிருந்து தடுக்க முடியும். எந்தப் பயிர் விளைச்சலுக்கு ஏற்ற சூழல் அமையவில்லையோ... அந்தப் பயிரை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்வதற்கான அனுமதியை வழங்கும் ஒப்பந்தங்களை முன்கூட்டியே செய்தல் வேண்டும்.

அது போலவே அபரிவிதமான மகசூல் பெறும் காலங்களில் பல்வேறு வகையான பயிர்களை ஏற்றுமதி செய்யக் கூடிய சாத்தியக் கூறுகளை மதிப்பீடு செய்தல் வேண்டும். இத்தகைய நீண்டகாலத் திட்டங்களும் பயனுள்ள நடைமுறைப்படுத்துதலும் மத்திய, மாநில விவசாய அமைச்சகங்களின் ஆணைகளை நடைமுறைப்படுத்த உதவும் அடிப்படைக் கூறுகள் ஆகும்.

இதற்கு மாறாக மாவட்ட அளவிலான பயிர்த் திட்டம், போக்குவரத்து மற்றும் தானிய சேமிப்பு வசதிகள் செய்வதில் அரசு மெத்தனப் போக்கை கடைப்பிடித்தால் உத்தேசதேவைக்கும் வரத்துக்கும் இடையேயான இடைவெளி பெருகி, நாடு வெளி நாட்டு உதவியைச் சார்ந்து இருக்க வேண்டிய நிலை ஏற்படும். வேளாண் விஞ்ஞான நிலையங்கள் , விவசாய பல்கலைக் கழகங்கள் மற்றும் அரசு துறைகள் அனைத்தும் இணைந்து இந்தியாவின் வேளாண் உற்பத்தியை பெருக்குவதற்கான ஒருங்கிணைந்த குறிக்கோளோடு எங்கும் நிறைந்துள்ள தொழில் நுட்பத்தை பயன்படுத்த முன்வரவேண்டும். மேலே விவரித்த இத்தகையச் சூழலில் மட்டுமே கண்ணீர் நிறைந்த வெங்காய நுகர்வோரின் கண்களைச் சுற்றி படர்ந்துள்ள கருமேகங்களை கலையச்செய்து ஒளி ஏற்ற முடியும்.

Intro:Body:

Teary Onions: Government in jitters

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.