இதுகுறித்து அவர் பேசுகையில், "ஆந்திர அரசு மக்களின் உயிருடன் விளையாடுகிறது. கோவிட்-19 பரிசோதனைக் கருவிகள், போலியான கிருமிநாசினியை வாங்கியது எனப் பல ஊழல் வேலைகளில் அரசு ஈடுபட்டுவருகிறது. சமீபத்தில், ஆந்திரச் சட்டப்பேரவையில் நடந்த நிதிநிலை அறிக்கை விளக்கக் கூட்டத்தின்போது சட்டப்பேரவை, சட்ட மேலவை உறுப்பினர்கள் கோவிட்-19 பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அரசின் மறு முகத்தை இது அம்பலப்படுத்தியுள்ளது.
தெலுங்கு தேசம் கட்சியின் சட்ட மேலவை உறுப்பினர் தீபக் ரெட்டிக்கு கோவிட்-19 உறுதிசெய்யப்பட்டதாகவும், அதனால் அவர் தனிமைப்படுதிக்கொள்ள வேண்டும் என்றும் அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஆனால், தெலங்கானாவில் ஏற்கனவே தீபக்குக்கு எடுக்கப்பட்ட இரண்டு பரிசோதனைகளில் அவருக்கு நோய்த் தொற்று இல்லை என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
கோவிட்-19 இல்லை என இரண்டு முறை உறுதிசெய்யப்பட்ட பிறகும் ஏன் அவரை (தீபக் ரெட்டி) தனிமைப்படுத்த வேண்டும். இதனை வன்மையாகக் கண்டிக்கிறேன். இதில், மத்திய அரசின் சுகாதார வழிமுறைகள் பின்பற்றப்படவில்லை. எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு எதிராகச் செய்யப்படும் சதி வேலை இது. அரசியல் ஆதாயத்துக்காக அரசு இப்படிச் செய்து வருவதாகச் சந்தேகம் எழுகிறது. இதுகுறித்து அரசு விளக்கமளிக்க வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க : பேச்சுவார்த்தை மூலம் எல்லைப் பிரச்னைக்கு தீர்வுகாண்க - பிரிட்டன் பிரதமர்