ETV Bharat / bharat

பொன்னாரை எதிர்க்கும் வசந்தகுமார்: காங். வேட்பாளர் பட்டியல் வெளியீடு - தி.மு.க

டெல்லி: நாடாளுமன்றத் தேர்தலுக்கான தமிழ்நாடு, புதுச்சேரி காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை அக்கட்சி வெளியிட்டுள்ளது.

ராகுல் காந்தி
author img

By

Published : Mar 23, 2019, 9:04 AM IST

Updated : Mar 23, 2019, 9:47 AM IST

திமுக கூட்டணியில் தமிழ்நாடு, புதுச்சேரி காங்கிரஸ் கட்சிக்கு பத்து தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. காங்கிரஸ் வேட்பாளர்களைத் தேர்வு செய்யும், மத்திய தேர்தல் குழுக் கூட்டம், நேற்று (மார்ச் 22) மாலை வேளையில் டெல்லியில் கூடியது. அக்கூட்டம் முடிந்த பின், வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், காங்கிரஸ் கட்சி தனது ட்விட்டர் பக்கத்தில், ஏழாவது கட்டமாக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.

அதன்படி, தமிழ்நாட்டில் உள்ள எட்டு தொகுதிகளுக்கும் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத் தொகுதிகளும் வேட்பாளர்களும்:

  1. திருச்சி - காங்கிரஸ் மாநிலமுன்னாள் தலைவர் திருநாவுக்கரசர்,
  2. தேனி - ஈவிகேஎஸ் இளங்கோவன்,
  3. ஆரணி - விஷ்ணு பிரசாத்,
  4. கரூர் - ஜோதிமணி,
  5. விருதுநகர் - மாணிக்தாகூர்,
  6. கிருஷ்ணகிரி - செல்லக்குமார்,
  7. திருவள்ளூர் - ஜெயக்குமார்,
  8. கன்னியாகுமரி - வசந்தகுமார்

தற்போது நாங்குநேரி சட்டப்பேரவை உறுப்பினராக உள்ள வசந்தகுமார், கன்னியாகுமரியில் பொன்.ராதாகிருஷ்ணனை எதிர்த்துப் போட்டியிட உள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்காக தனது சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை அவர் ராஜினாமா செய்யவுள்ளார்.

2014 மக்களவைத் தேர்தலின்போதும் கன்னியாகுமரி தொகுதியில் பாஜக சார்பில் பொன்.ராதாகிருஷ்ணனும் காங்கிரஸ் சார்பில் வசந்தகுமாரும் போட்டியிட்டனர். இந்தத் தேர்தலில் பொன்.ராதாகிருஷ்ணன் ஒரு லட்சத்து 28 ஆயிரத்து 662 வாக்குகள் வித்தியாசத்தில் வசந்தகுமாரை தோற்கடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

புதுச்சேரியில் வைத்தியலிங்கம் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். அறிவிப்புக்கு முன்னரே, அவர் நேற்று வேட்புமனு தாக்கல் செய்துவிட்டார். சிவகங்கை தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

inc, candidates list, tamilnadu congress
நாடாளுமன்ற தேர்தலுக்கான தமிழ்நாடு காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல்

Intro:Body:Conclusion:
Last Updated : Mar 23, 2019, 9:47 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.