பொதுமுடக்க தளர்வுகளுக்கு பிறகு முதலில் புதுச்சேரி மாநிலத்தில் கடந்த ஜுன் மாதம் முதல் மாநிலத்திற்குள் பேருந்து சேவைகள் தொடங்கப்பட்டன. ஆனால் தமிழ்நாட்டிற்கு பேருந்துகளை இயக்க அனுமதிக்கப்படவில்லை.
அதேபோன்று தமிழ்நாட்டில் பொதுமுடக்க தளர்வுகளுக்கு பிறகு பல்வேறு மாவட்டங்களுக்கு இயக்கப்பட்ட பேருந்து சேவை புதுச்சேரி, காரைக்காலுக்கு இயக்கப்படவில்லை. இரு மாநிலங்களுக்கு இடையேயான பேருந்துகளை இயக்க வேண்டும் என புதுச்சேரி அரசு தமிழ்நாடு அரசை கேட்டுக்கொண்டது.
இதனையடுத்து இரு மாநிலங்களுக்கிடையே பேருந்துகளை இ-பாஸ் இன்றி இயக்க தமிழ்நாடு அரசு நேற்று (அக்.31) அரசாணை பிறப்பித்தது. இன்று (நவ.01) காலை முதல் புதுச்சேரி, காரைக்கால் பேருந்து நிலையங்களில் தமிழ்நாடு, புதுச்சேரி மாநில அரசு, தனியார் போக்குவரத்கள் கடந்த 7 மாதத்திற்கு பிறகு மீண்டும் படிப்படியாக தொடங்கியுள்ளது.
இதையும் படிங்க: குடும்பத்தில் குழந்தையான மலைக் குருவி!