புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் ஜானகிராமன் உடல்நலக்குறைவு காரணமாக திங்கள்கிழமை அதிகாலை 2.30 மணியவில் உயிரிழந்தார்.
ஆம்பூர் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலை, சொந்த ஊரான ஆலந்தூருக்கு இன்று கொண்டுவரும் வழியில் வாகனம் பழுதடைய, உடல் பேருந்துக்கு மாற்றப்பட்டு ஊரை சென்றடைந்தது.
அங்கு 21 குண்டுகள் முழுங்க அரசு மரியாதையுடன் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்த இறுதிச்சடங்கில் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், முன்னாள் அமைச்சர் பொன்முடி, பன்னீர்செல்வம், தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களைச் சேர்ந்த அரசியல் கட்சித் தலைவர்கள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.