இந்தியாவில் கரோனா வைரஸ் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்தபோது டெல்லியில் தப்லீக் ஜமாஅத் மாநாடு நடைபெற்றது.
இதில் சுமார் 34 வெளிநாட்டைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். மேலும், அவர்கள் ஒவ்வொரு மாநிலத்தில் உள்ள மசூதிகளுக்கும் சென்றனர்.
இந்நிலையில், தப்லீக் ஜமாஅத் மாநாட்டில் கலந்து கொண்ட பல மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கானோரில் பலருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது. அதுமட்டுமின்றி பல வெளிநாட்டினர் முறைகேடாக இந்தியாவிற்கு வந்ததும் வெளிச்சத்திற்கு வந்தது.
இதனையடுத்து இது தொடர்பான வழக்கு இன்று(ஜூலை14) டெல்லி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த பெருநகர மாஜிஸ்திரேட் (நீதித்துறை நடுவர்) தேவ் சவுத்ரி, இலங்கை, நைஜீரியா, டன்சானியா, மாலி, கென்யா ஆகிய ஐந்து நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டவர் ஐந்தாயிரம் ரூபாய் அபராதமாக செலுத்திவிட்டு சொந்த நாடுகளுக்குச் செல்லலாம் என உத்தரவிட்டார்.
இதையும் படிங்க...சமூக விரோதிகள் சிறார்களை பயன்படுத்தி குற்றங்களை செய்வதைத் தடுக்க வேண்டும்!