கடந்த ஜூலை மாதம் 5ஆம் தேதி திருவனந்தபுர விமான நிலையத்தில் ரூ.14.82 கோடி மதிப்பிலான 30 கிலோ தங்கத்தை சுங்கத் துறை அதிகாரிகள் கைப்பற்றினர்.
இந்த கடத்தல் சம்பவத்தில் முக்கியக் குற்றவாளியான ஸ்வப்னா சுரேஷ், கேரள முதலமைச்சர் அலுவலகத்தில் தனக்குள்ள நெருக்கம் மூலம் இந்தக் கடத்தலில் ஈடுபட்டார் என புகார் எழுந்தது.
கேரள அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ள தங்கக் கடத்தல் விவகாரத்தில், அம்மாநில அமைச்சர் கே.டி. ஜலீல்லுக்கு தொடர்பு உள்ளதாக தற்போது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அவர் பதவி விலகக் கோரி எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், பாஜக பெரும் போரட்டத்தில் ஈடுபட்டுவருகின்றன.
உடல்நலக் குறைவை காரணம்காட்டி ஸ்வப்னா சுரேஷ் பிணைக்கு விண்ணப்பித்திருந்த நிலையில், அந்த மனுவை கடந்த 18ஆம் தேதி நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்நிலையில், ஸ்வப்னா சுரேஷை நான்கு நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க தேசிய புலனாய்வு முகமைக்கு என்.ஐ.ஏ. சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
இதையும் படிங்க: ஏழு மாநில முதலமைச்சர்களுடன் கலந்தாலோசிக்கும் பிரதமர் மோடி!