ETV Bharat / bharat

சுதேசி என்றால் வெளிநாட்டு பொருள் புறக்கணிப்பு என்று அர்த்தமல்ல: மோகன் பகவத் - சுயசார்பு இந்தியா

சுதேசி என்ற வார்த்தைக்கு அனைத்து வெளிநாட்டு பொருள்களைப் புறக்கணிக்க வேண்டும் என்று அர்த்தமல்ல என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் பேசியுள்ளார்.

swadeshi-does-not-necessarily-mean-boycotting-every-foreign-product-mohan-bhagwat

author img

By

Published : Aug 13, 2020, 1:01 PM IST

சுயசார்பு இந்தியா பற்றி பிரதமர் நரேந்திர மோடி அதிகமாக பேசிவரும் நிலையில் சுயசார்பு இந்தியா மற்றும் சுதேசி கருத்துக்கள் பற்றி ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் புத்தக வெளியீட்டு விழாவில் பேசியுள்ளார்.

அதில், ''சுதேசி என்பதற்கு அனைத்து வெளிநாட்டுப் பொருள்களையும் புறக்கணிக்க வேண்டும் என்று அர்த்தமல்ல. நமக்கு தேவையானதை சில நிபந்தனைகளோடு நாம் வாங்கிகொள்ள வேண்டும். சுதேசி என்பது நமது உள்நாட்டு தயாரிப்புகளை ஊக்குவிக்கவும், வெளிநாட்டுப் பொருள் முதலீடுகள் நமது நாட்டிற்குள் வருவதைக் கட்டுப்படுத்தவும் தொடங்கப்பட்டது.

ஒரே பொருளாதாரக் கொள்கை அனைத்து பகுதிகளுக்கும் ஒத்துப்போகாது. கரோனா சூழலில் உலகமயமாக்கல் சரியான முடிவுகளைத் தரவில்லை. அனைத்து சுயசார்பு நாடுகளுக்குள்ளும் நல்ல ஒருங்கிணைப்பு இருக்க வேண்டும். அவர்கள் அனைவரும் உலகத்தை ஒரே குடும்பம் என்று எண்ண வேண்டும். ஆனால் அந்தக் குடும்பத்திற்கு ஒரே மாதிரியான சந்தை சரியாக இருக்காது என்பதையும் தெரிந்துகொள்ள வேண்டும்.

சுதந்திரத்திற்கு பிறகு மேற்கு மற்றும் பிற வெளிநாடுகளின் செல்வாக்குகளால் ஏற்படும் இழப்புகளைத் தடுக்க நமது நாட்டின் பொருளாதாரக் கொள்கையை செயல்படுத்தவில்லை.

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் பேச்சு

நமது நாட்டில் தயாரிக்கப்படும் தொழிற்நுட்பங்கள் வெளிநாட்டு உற்பத்திகள் அளவிற்கு கவனிக்கப்படுவவில்லை. அதில் நாம் முன்னேற்றம் காண வேண்டும். நாம் நமது பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டுமென்றால் ஒருங்கிணைந்த பார்வை, விரிவான கொள்கைகள், அதனை நல்ல முறையில் செயல்படுத்துதல் ஆகியவை பற்றி சிந்திக்க வேண்டும்.

இந்தியாவில் கிடைக்காத நமக்கு தேவையான தொழிற்நுட்பங்களை மட்டும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டும்'' எனப் பேசியுள்ளார்.

இதையும் படிங்க: புதிய நாடாளுமன்ற கட்டடம்: 3 நிறுவனங்கள் தேர்வு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.