ETV Bharat / bharat

பிரதமரின் ‘தூய்மை இந்தியா’ நனவா? தொலைதூர கனவா? - பிரதமரின் ‘தூய்மை இந்தியா’ நனவா? தொலைதூர கனவா?

பிரதமர் மோடியின் பிரதான திட்டமான ‘ஸ்வச் பாரத்’ என்றழைக்கப்படும் தூய்மை இந்தியா திட்டத்திலுள்ள நடைமுறை சிக்கல்கள் குறித்தும் பிரதமர் அறிவித்தது போல திறந்தவெளியில் மலம் கழிக்கும் பழக்கத்திலிருந்து இந்தியா முற்றிலுமாக விடுபட்டுவிட்டது உண்மைதானா என்பது குறித்தும் இக்கட்டுரை விரிவாக அலசுகிறது.

Swach bharat is distant dream
Swach bharat is distant dream
author img

By

Published : Dec 20, 2019, 10:41 AM IST

திறந்தவெளியில் மலம் கழிக்கும் பழக்கத்திலிருந்து இந்தியா முற்றிலுமாக விடுபட்டுவிட்டதாக, கடந்த அக்டோபர் இரண்டாம் தேதி அறிவித்தார் பிரதமர் நரேந்திர மோடி. “தூய்மை பாரதம் திட்டத்தின் கீழ் 60 மாதங்களில் 11 கோடி கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. இதனால் 60 கோடி மக்கள் பயன்பெற்றுள்ளனர். இதைப் பார்த்து உலகமே வியந்துள்ளது” என்று கூறினார் அவர். மோடியின் இந்த அபார சாதனைக்காக பில் மற்றும் மிலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை கடந்த செப்டம்பரில் அவருக்கு குலோபல் கோல்கீப்பர் விருதினை வழங்கியது. எனினும், ‘பாதுகாப்பான குடிநீர், சுகாதாரம், வீட்டு வசதி’ ஆகியவை குறித்து தேசிய புள்ளியியல் துறை நடத்திய 76ஆவது தேசிய மாதிரி ஆய்வறிக்கையிலுள்ள(NSS) தகவல்கள் அதற்கு நேர்மாறாக உள்ளன.

நாட்டின் கிராமப்புற பகுதிகளில் 29 விழுக்காடு அளவுக்கு கழிவறைகள் இல்லை என்கிறது அந்த அறிக்கை. அதிலும் தனித்தனியாக மாநில வாரியாக பார்க்கையில் உத்தரப் பிரதேசத்திலும் ஒடிஷாவிலும் இது 50 விழுக்காடாக உள்ளது. மேலும் ஜார்கண்ட், தமிழ்நாடு, ராஜஸ்தானில் இந்த விழுக்காடு 30க்கும் அதிகமாக இருக்கிறது. கழிப்பறைக் கட்டிக்கொள்ளத் தயாராக இருப்பவர்களுக்கு அரசு நிதியுதவி அளித்தாலும், இந்தத் திட்டத்தின் கீழ் 17 விழுக்காடு கிராமப்புற வீடுகள் மட்டுமே பயனடைந்துள்ளதாக புள்ளி விவரம் தெரிவிக்கின்றது.

இந்த என்எஸ்எஸ் அறிக்கை மத்திய அரசுக்கு மகிழ்ச்சியளிக்கக் கூடியது அல்ல என்பதால், அது தயாராகி ஆறு மாதத்திற்குப் பிறகே வெளியிடப்பட்டுள்ளது. இதேபோல் நாட்டில் வேலைவாய்ப்பின்மை 6.10 விழுக்காடு உயர்ந்துள்ளதாக தெரிவித்த என்எஸ்எஸ் அறிக்கையும் ஆறு மாதத்திற்குப் பிறகே வெளியானது. நாட்டிலுள்ள அனைத்துக் கிராமங்களுக்கும் மின்சாரம் வழங்கப்பட்டுவிட்டதாக கடந்தாண்டு ஏப்ரல் மாதம் பிரதமர் தெரிவித்தார். ஆனால், அதற்கு இரண்டு மாதங்கள் கழித்து வெளியிடப்பட்ட ராக்கிஃபெல்லர் அறக்கட்டளை சார்பில் வெளியிட்ட அறிக்கையில், நாட்டில் இன்னமும் 45 லட்சம் வீடுகளுக்கு மின் இணைப்பு சென்று சேர்வில்லை எனத் தெரிவித்தது.

அறைகுறையாக நடக்கும் கண்காணிப்புப் பணிகள்:

மத்தியப் பிரதேசத்தின் பவேகேடி பஞ்சாயத்திலுள்ள பட்டியல் சமூக சிறுவர்கள் இருவர், பஞ்சாயத்து அலுவலக வாசல் எதிரே திறந்த வெளியில் சிறுநீர் கழித்ததற்காக அடித்துக் கொல்லப்பட்டார்கள். உண்மை என்னவென்றால் பாதிக்கப்பட்ட அந்தக் குடும்பங்களில் கழிப்பறையே கிடையாது. ஆனால், மத்திய அரசின் கீழ் உள்ள தூய்மை இந்தியா தொடர்பு நிதிய ஆவணம் அந்தக் கிராமம், திறந்த வெளியை கழிப்பிடமாக பயன்படுத்துவதில் இருந்து விடுபட்டுவிட்ட கிராமம் என்கிறது.

இந்த விவகாரத்தில் அரசு ஆவணத்திற்கும் உண்மைக்கும் மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது. திறந்தவெளியை கழிப்பிடமாகப் பயன்படுத்தக் கூடிய பல கிராமங்கள் இன்னமும் இருக்கின்றன. தங்கள் கிராமம் திறந்தவெளியை கழிப்பிடமாகப் பயன்படுத்தும் பழக்கத்திலிருந்து விடுபட்டுவிட்டது என்று அந்தக் கிராமத்தின் கிராமசபை அறிவிக்குமானால், அதை உறுதிப்படுத்துவதற்கான சரிபார்ப்புப் பணிகள் இரண்டு கட்டங்களாக நடத்தப்பட வேண்டியது அவசியம். இந்தச் சரிபார்ப்புப் பணிகளை சுதந்திரமான மூன்றாம் நபரைக் கொண்டும் அரசு அலுவலர்களைக் கொண்டும் அரசு மேற்கொள்ள வேண்டியதும் அவசியம்.

திறந்தவெளியை கழிப்பிடமாகப் பயன்படுத்துவதிலிருந்து விடுபட்டுவிட்டதாக ஒரு கிராமசபை அறிவித்த மூன்று மாதங்களுக்குப் பிறகு இந்தச் சரிபார்ப்புக் குழுக்கள் அங்கு சென்று நிலைமையை ஆய்வு செய்ய வேண்டும். ஆனால், பெரும்பாலான மாநிலங்களில் இத்தகைய சரிபார்ப்புப் பணிகள் சரியாக நடப்பதில்லை. கடந்த செப்டம்பர் 26ஆம் தேதியின்படி, ஒடிஷாவிலுள்ள 23,902 கிராமங்களில் முதற்கட்ட ஆய்வு முடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. மீண்டும் செப்டம்பர் 30ஆம் தேதி வெளியிடப்பட்ட அறிக்கையில், 37 ஆயிரம் கிராமங்களில் அதாவது சுமார் 55 விழுக்காடு கிராமங்களில் ஆய்வு முடிக்கப்பட்டுவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. அப்படியானால், 4 நாட்களில் 13 ஆயிரம் கிராமங்களில் ஆய்வு நடத்தி முடிக்கப்பட்டுவிட்டதா?

வரையறுக்கப்பட்ட விதத்தில் ஆய்வுகளை நடத்துவதாக இருந்தால் இவ்வளவு கிராமங்களில் ஆய்வுகளை நடத்துவதற்கு ஒரு மாத காலம் கூட போதாது. நாடு முழுவதிலும் 6 லட்சம் கிராமங்கள் திறந்தவெளி கழிப்பிட பழக்கத்திலிருந்து விடுபட்டுவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இரண்டாம்கட்ட சரிபார்ப்புப் பணிகள் 25 விழுக்காடு கிராமங்களில் மட்டுமே நடந்துள்ளன. உத்தரப் பிரதேசத்தில் கிராமசபையால் அறிவிப்பு வெளியிடப்பட்ட 97 ஆயிரம் கிராமங்களில் 10 விழுக்காடு அளவுக்கு மட்டுமே இரண்ட்டாம்கட்ட ஆய்வு முடிக்கப்பட்டுள்ளது. ஒடிஷாவில் 47 ஆயிரம் கிராமங்களில் ஒன்றில்கூட இரண்டாம் கட்ட ஆய்வு மேற்கொள்ளப்படவில்லை. நாட்டின் 10 மாநிலங்களில் இரண்டாம் கட்ட ஆய்வு நடத்தப்படவே இல்லை. இருந்தபோதிலும், இந்தக் கிராமங்கள் திறந்தவெளி கழிப்பிட பழக்கத்தை கைவிட்ட கிராமங்களின் பட்டியலுக்குள் சேர்க்கப்பட்டுவிட்டன. குறிப்பிட்ட காலத்திற்குள் அனைத்து ஆய்வுகளையும் முடிக்க வேண்டும் என்பதற்காக கொடுக்கப்படும் அழுத்தம் காரணமாகவே இதுபோன்ற நிலை ஏற்படுகிறது.

பாராட்டத்தக்க இலக்கு:

தூய்மையான இந்தியாவை உருவாக்க வேண்டும் என்ற மகாத்மா காந்தியின் கனவை நனவாக்கும் நோக்கில், ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு தூய்மை இந்தியா திட்டம் அறிவிக்கப்பட்டது. மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்தநாளை முன்னிட்டு இந்தாண்டு அக்டோபர் இரண்டாம் தேதிக்குள் திறந்தவெளி கழிப்பிட முறையை ஒழிக்க அரசு இலக்கு நிர்ணயித்தது. இதற்காக அரசு நிர்வாகம் முடுக்கிவிடப்பட்டது. இறுதியில் இலக்கு எட்டப்பட்டுவிட்டதாகவும் திறந்தவெளி கழிப்பிட முறை முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுவிட்டதாகவும் கடந்த அக்டோபர் இரண்டாம் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது. தூய்மை இந்தியா திட்டத்திற்காக மத்திய, மாநில அரசுகள் 80 ஆயிரம் கோடி ரூபாயை செலவிட்டுள்ளன. 10.16 கோடி வீடுகளில் கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளதாக அரசு அறிக்கை கூறுகிறது.

இந்த இலக்கை எட்டுவதற்காக ஏழைகள் துன்புறுத்தப்பட்டதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது. இந்தத் திட்டத்திற்கான உயர் அலுவலர்களில் ஒருவரான லியோ ஹில்லர், கடந்த 2017ஆம் ஆண்டு நாட்டின் பல பகுதிகளில் இரண்டு வார காலம் ஆய்வு மேற்கொண்டுள்ளார். அப்போது அவரிடம் அலுவலர்கள் மிரட்டுவதாகவும் அவமரியாதையாக நடத்துவதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டி இருக்கிறார்கள். கழிப்பறை கட்டாததற்காக ரேஷன் கார்டுகளை பறித்துக்கொண்ட சம்பவங்களும் மின்சார இணைப்பை துண்டித்த சம்பவங்களும் அரங்கேறியுள்ளன. கழிப்பறை கட்ட இடவசதி இல்லாதவர்களுக்கு தூய்மை இந்தியா திட்டத்தில் எந்தவித உதவியும் இல்லை.

கழிப்பறை கட்ட போதுமான இடவசதி இல்லை என கூறும் ஹரியானாவின் அம்ரோலியிலுள்ள பட்டியல் சமூக மக்கள், பொதுக் கழிப்பறைகளைப் பயன்படுத்திக்கொள்ள உயர்த்தப்பட்ட வகுப்பினர் அனுமதிப்பதில்லை என்கின்றனர். இந்தப் பிரச்னைக்கு இன்றளவும் தீர்வு காணாத ஹரியானா மாநிலம், தன்னை திறந்தவெளி கழிப்பிட பழக்கத்திலிருந்து விடுபட்ட மாநிலமாக அறிவித்துக்கொண்டுள்ளது. கழிப்பறைகளைக் கட்டிக்கொள்ள பொருளாதார வசதியோ, இடவசதியோ இல்லாதவர்களுக்கு குடியிருப்புப் பகுதியிலிருந்து வெகு தொலைவில் பொதுக் கழிப்பறைகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன. சில கிராமங்களில் இதற்காக ஒரு கிலோமீட்டர் தூரம் வரை செல்ல வேண்டியுள்ளது. சில கிராமங்களிலோ கழிப்பறைகளைப் பயன்படுத்த தண்ணீரே இருப்பதில்லை.

தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக தங்கள் கிராமத்தின் பாதி குடும்பங்கள் கோடை காலங்களில் கழிப்பறைகளை பயன்படுத்துவதில்லை என்று கூறுகிறார் ஒடிஷாவின் கானாக்பூர் கிராமத்தைச் சேர்ந்த தரங்கனி மிஷ்ரா என்பவர். தண்ணீர் விநியோகம்தான் உண்மையான பிரச்னை எனக் கூறுகிறார் பலாங்கீர் மாவட்ட ஆட்சியர். கிராமப்புற வளர்ச்சி குறித்த நாடாளுமன்ற நிலைக்குழுவின் அறிக்கை கடந்த ஜூலை 19ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘இந்தியர்கள் அனைவருக்கும் முழுமையான சுகாதாரம் அளிக்கப்பட வேண்டும். மகாத்மா காந்தியின் தூய்மை இந்தியா இன்னும் நனவாகவில்லை’ என தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆவணங்களிலுள்ள தகவல்களும் கள நிலவரங்களும் ஒத்துப்போவதில்லை என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், நாடாளுமன்ற நிலைக்குழுவின் இந்தக் கருத்தை அரசு ஏற்க மறுத்துவிட்டது. இத்தகைய சூழலில், சரிபார்ப்புப் பணிகளை மேற்கொள்வதற்கான குழுக்கள் தங்கள் பணிகளை நேர்மையாக செய்ய வேண்டியது மிகவும் அவசியமாகிறது. அதோடு மட்டுமல்லாமல் கழிப்பறைகளுக்குத் தண்ணீர் போதுமான அளவு கிடைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். சுற்றுச்சூழலுக்கு உகந்த கழிப்பறைகளை கட்டுவதும் குப்பைகளைச் சரியாக கையாளுவதும் மிகவும் அவசியம். அப்போதுதான் உண்மையான தூய்மை இந்தியா உருவாகும்.

சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு:

மகசேசே விருதைப் பெற்றவரும், சஃபாய் கர்மசாரி அந்தோலனின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான பெஜாவாடா வில்சன், நாட்டில் 96 லட்சம் உலர் கழிப்பறைகள் உள்ளதாகவும் அவற்றில் சேரும் கழிவுகளை பொதுவெளியில் கொட்டுவதைத் தவிர வேறு வழியில்லை என்றும் கூறுகிறார். இதுபோன்ற பொதுகழிப்பிடங்களில் சேரும் கழிவுகள் அருகிலுள்ள நீர்நிலைகளில்தான் கொட்டப்படுவதாகக் கூறப்படுகிறது. சுற்றுச்சூழல் மேலும் மாசுபடுவதற்கும் நோய்க் கிருமிகள் பரவுவதற்குமே இது வழிவகுக்கும்.

இதையும் படிங்க: ஆரோக்கியமான பாதையில் இந்தியாவின் ஆரோக்கியம்! ஆயுஷ்மன் பாரத் குறித்து அறிந்திடுங்கள்...

Intro:Body:

தூய்மை பாரதம் – ஒரு தொலைதூர கனவா?

திறந்தவெளியில் மலம் கழிக்கும் பழக்கத்தில் இருந்து இந்தியா முற்றிலுமாக விடுபட்டு விட்டதாக கடந்த அக்டோபர் 2ம் தேதி அறிவித்தார் பிரதமர் மோடி. “தூய்மை பாரதம் திட்டத்தின் கீழ் 60 மாதங்களில் 11 கோடி கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. இதனால், 60 கோடி மக்கள் பயன்பெற்றுள்ளனர். இதைப் பார்த்து உலகமே ஆச்சரியப்பட்டுள்ளது” என கூறினார் அவர். 

பிரதமர் மோடியின் இந்த அபார சாதனைக்காக, பில் மற்றும் மிலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை கடந்த செப்டம்பரில் அவருக்கு குலோபல் கோல்கீப்பர் விருதினை வழங்கியது. 

எனினும், ‘பாதுகாப்பான குடிநீர், சுகாதாரம், வீட்டு வசதி’ ஆகியவை குறித்து தேசிய புள்ளியியல் துறை நடத்திய 76வது தேசிய மாதிரி ஆய்வறிக்கையில்( NSS ) உள்ள தகவல்கள் இதற்கு முரணாக உள்ளன. 

நாட்டின் கிராமப்புற பகுதிகளில் 29 சதவீதம் அளவுக்கு கழிவறைகள் இல்லை என்கிறது அந்த அறிக்கை. அதிலும், உத்தரப்பிரதேசம் மற்றும் ஒடிஷாவில் இது 50 சதவீதமாக உள்ளது. ஜார்கண்ட், தமிழ்நாடு, ராஜஸ்தானில் இது 30 சதவீதத்திற்கும் மேலாக இருக்கிறது. 

கழிப்பறை கட்டிக்கொள்ள தயாராக இருப்பவர்களுக்கு அரசு நிதி உதவி அளிக்கிறது. எனினும், அரசின் இந்த திட்டத்தின் கீழ் 17 சதவீத கிராமப்புற வீடுகளே பயன் அடைந்துள்ளதாக புள்ளி விவரம் தெரிவிக்கிறது. 

NSS-ன் இந்த அறிக்கை மத்திய அரசுக்கு மகிழ்ச்சி அளிக்கக் கூடியது அல்ல என்பதால் அது தயாராகி 6 மாதத்திற்குப் பிறகே வெளியிடப்பட்டுள்ளது. இதேபோல், நாட்டில் வேலைவாய்ப்பின்மை 6.10 சதவீதம் உயர்ந்துள்ளதாக தெரிவித்த NSS-ன் அறிக்கையும் 6 மாதத்திற்குப் பிறகே வெளியானது. நாட்டில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் மின்சாரம் வழங்கப்பட்டுவிட்டதாக கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தெரிவித்தார் மோடி. ஆனால், அதற்கு 2 மாதங்கள் கழித்து வெளியிடப்பட்ட ராக்கிஃபெல்லர் அறக்கட்டளை அறிக்கையில், நாட்டில் இன்னமும் 45 லட்சம் வீடுகளுக்கு மின்சாரம் சென்று சேரவில்லை என தெரிவித்தது. 

அறைகுறையாக நடக்கும் கண்காணிப்புப் பணிகள்: 

மத்தியப்பிரதேசத்தின் பவேகேடி பஞ்சாயத்தில் உள்ள பட்டியல் சமூகத்து சிறுவர்கள் இருவர், பஞ்சாயத்து அலுவலக வாசல் எதிரே திறந்த வெளியில் சிறுநீர் கழித்ததற்காக அடித்துக் கொல்லப்பட்டார்கள். உண்மை என்னவென்றால், பாதிக்கப்பட்ட அந்த குடும்பங்களில் கழிப்பறையே கிடையாது. ஆனால், மத்திய அரசின் கீழ் உள்ள தூய்மை இந்தியா தொடர்பு நிதிய ஆவணம், அந்த கிராமம், திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்துவதில் இருந்து விடுபட்டுவிட்ட கிராமம் என்கிறது. 

இந்த விவகாரத்தில் அரசு ஆவணத்திற்கும் உண்மைக்கும் மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது. திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்தக் கூடிய பல கிராமங்கள் இன்னமும் இருக்கின்றன. 

தங்கள் கிராமம் திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்தும் பழக்கத்தில் இருந்து விடுபட்டுவிட்டது என்று அந்த கிராமத்தின் கிராம சபை அறிவிக்குமானால், அதை உறுதிப்படுத்துவதற்கான சரிபார்ப்பு பணிகள் இரண்டு கட்டங்களாக நடத்தப்பட வேண்டியது அவசியம். 

இந்த சரிபார்ப்பு பணிகளை சுதந்திரமான மூன்றாம் நபரைக் கொண்டும், அரசு அலுவலர்களைக் கொண்டும் அரசு மேற்கொள்ள வேண்டியது அவசியம். 

திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்துவதில் இருந்து விடுபட்டு விட்டதாக ஒரு கிராம சபை அறிவித்த 3 மாதங்களுக்குப் பிறகு இந்த சரிபார்ப்பு குழுக்கள் அங்கு சென்று நிலைமையை ஆய்வு செய்ய வேண்டும். ஆனால், பெரும்பாலான மாநிலங்களில் இத்தகைய சரிபார்ப்பு பணிகள் சரியாக நடப்பதில்லை. 

கடந்த செப்டம்பர் 26ம் தேதியின்படி, ஒடிஷாவில் உள்ள 23,902 கிராமங்களில் முதற்கட்ட ஆய்வு முடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. மீண்டும் செப்டம்பர் 30ம் தேதி வெளியிடப்பட்ட அறிக்கையில், 37 ஆயிரம் கிராமங்களில் அதாவது சுமார் 55 சதவீத கிராமங்களில் ஆய்வு முடிக்கப்பட்டுவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. அப்படியானால், 4 நாட்களில் 13 ஆயிரம் கிராமங்களில் ஆய்வு நடத்தி முடிக்கப்பட்டுவிட்டது! 

வரையறுக்கப்பட்ட விதத்தில் ஆய்வுகளை நடத்துவதாக இருந்தால் இவ்வளவு கிராமங்களில் ஆய்வுகளை நடத்துவதற்கு ஒரு மாத காலம் கூட போதாது. 

நாடு முழுவதிலும் 6 லட்சம் கிராமங்கள் திறந்தவெளி கழிப்பிட பழக்கத்தில் இருந்து விடுபட்டுவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இரண்டாம் கட்ட சரிபார்ப்பு பணிகள் 25 சதவீத கிராமங்களில் மட்டுமே நடந்துள்ளன. 

உத்தரப்பிரதேசத்தில் கிராம சபையால் அறிவிப்பு வெளியிடப்பட்ட 97 ஆயிரம் கிராமங்களில் 10 சதவீதம் அளவுக்கு மட்டுமே 2ம் கட்ட ஆய்வு முடிக்கப்பட்டுள்ளது. ஒடிஷாவில் 47 ஆயிரம் கிராமங்களில் ஒன்றில்கூட இரண்டாம் கட்ட ஆய்வு மேற்கொள்ளப்படவில்லை. 

நாட்டின் 10 மாநிலங்களில் இரண்டாம் கட்ட ஆய்வு நடத்தப்படவே இல்லை. இருந்தபோதிலும், இந்த கிராமங்கள் திறந்தவெளி கழிப்பிட பழக்கத்தை கைவிட்ட கிராமங்களின் பட்டியலுக்குள் சேர்க்கப்பட்டுவிட்டன. குறிப்பிட்ட காலத்திற்குள் அனைத்து ஆய்வுகளையும் முடிக்க வேண்டும் என்பதற்காக கொடுக்கப்படும் அழுத்தம் காரணமாகவே இதுபோன்ற நிலை ஏற்படுகிறது. 

பாராட்டத்தக்க இலக்கு: 

தூய்மையான இந்தியாவை உருவாக்க வேண்டும் என்ற மகாத்மா காந்தியின் கனவை நனவாக்கும் நோக்கில் 5 ஆண்டுகளுக்கு முன்பு தூய்மை இந்தியா திட்டம் அறிவிக்கப்பட்டது. மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாளை முன்னிட்டு இந்த ஆண்டு அக்டோபர் 2ம் தேதிக்குள் திறந்தவெளி கழிப்பிட முறையை ஒழிக்க அரசு இலக்கு நிர்ணயித்தது. இதற்காக அரசு நிர்வாகம் முடுக்கிவிடப்பட்டது. இறுதியில், இலக்கு எட்டப்பட்டுவிட்டதாகவும், திறந்தவெளி கழிப்பிட முறை முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுவிட்டதாகவும் கடந்த அக்டோபர் 2ம் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது. 

தூய்மை இந்தியா திட்டத்திற்காக மத்திய மாநில அரசுகள் 80 ஆயிரம் கோடி ரூபாயை செலவிட்டுள்ளன. 10.16 கோடி வீடுகளில் கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளதாக அரசு அறிக்கை கூறுகிறது. 

இந்த இலக்கை எட்டுவதற்காக ஏழைகள் துன்புறுத்தப்பட்டதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது. இந்த திட்டத்திற்கான உயர் அதிகாரிகளில் ஒருவரான லியோ ஹில்லர், கடந்த 2017ம் ஆண்டு நாட்டின் பல பகுதிகளில் இரண்டு வார காலம் ஆய்வு மேற்கொண்டுள்ளார். அப்போது, அவரிடம், அதிகாரிகள் மிரட்டுவதாகவும், அவமரியாதையாக நடத்துவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டி இருக்கிறார்கள். கழிப்பறை கட்டாததற்காக ரேஷன் கார்டுகளை பறித்துக்கொண்ட சம்பவங்களும், மின்சார இணைப்பை துண்டித்த சம்பவங்களும் நடந்துள்ளன.  

கழிப்பறை கட்ட இட வசதி இல்லாதவர்களுக்கு தூய்மை இந்தியா திட்டத்தில் எந்தவித உதவியும் இல்லை. 

கழிப்பறை கட்ட போதுமான இடவசதி இல்லை என கூறும் ஹரியானாவின் அம்ரோலியில் உள்ள பட்டியல் சமூக மக்கள், பொது கழிப்பறைகளை பயன்படுத்திக் கொள்ள உயர் ஜாதியினர் அனுமதிப்பதில்லை என்கின்றனர். இந்த பிரச்னைக்கு தீர்வு காணப்படுவில்லை. எனினும், திறந்தவெளி கழிப்பிட பழக்கத்தில் இருந்து விடுபட்ட மாநிலமாக ஹரியானா தன்னை அறிவித்துக்கொண்டுள்ளது. 

கழிப்பறைகளைக் கட்டிக்கொள்ள பொருளாதார வசதியோ இடவசதியோ இல்லாதவர்களுக்கு குடியிருப்பு பகுதியில் இருந்து வெகு தொலைவில் பொதுகழிப்பறைகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன. சில கிராமங்களில் இதற்காக ஒரு கிலோமீட்டர் தூரம் வரை செல்ல வேண்டியுள்ளது. சில கிராமங்களிலோ கழிப்பறைகளை பயன்படுத்த தண்ணீர் இருப்பதில்லை. 

தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக தங்கள் கிராமத்தின் பாதி குடும்பங்கள் கோடை காலங்களில் கழிப்பறைகளை பயன்படுத்துவதில்லை என்று கூறுகிறார் ஒடிஷாவின் கானாக்பூர் கிராமத்தைச் சேர்ந்த தரங்கனி மிஷ்ரா என்பவர். தண்ணீர் விநியோகம்தான் உண்மையான பிரச்னை என கூறுகிறார் பலாங்கீர் மாவட்ட ஆட்சியர். 

கிராமப்புற வளர்ச்சி குறித்த நாடாளுமன்ற நிலைக்குழுவின் அறிக்கை கடந்த ஜூலை 19ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. ‘இந்தியர்கள் அனைவருக்கும் முழுமையான சுகாதாரம் அளிக்கப்பட வேண்டும். மகாத்மா காந்தியின் தூய்மை இந்தியா இன்னும் நனவாகவில்லை’ என அதில் தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆவணங்களில் உள்ள தகவல்களும், கள நிலவரங்களும் ஒத்துப்போவதில்லை என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், நாடாளுமன்ற நிலைக்குழுவின் இந்த கருத்தை அரசு ஏற்க மறுத்துவிட்டது. 

இத்தகைய சூழலில், சரிபார்ப்பு பணிகளை மேற்கொள்வதற்கான குழுக்கள் தங்கள் பணிகளை நேர்மையாக செய்ய வேண்டியது மிகவும் அவசியமாகிறது. அதோடு, கழிப்பறைகளுக்கு தண்ணீர் போதுமான அளவு கிடைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். சுற்றுச்சூழலுக்கு உகந்த கழிப்பறைகளை கட்டுவதும், குப்பைகளை சரியாக கையாளுவதும் மிகவும் அவசியம். அப்போதுதான் உண்மையான தூய்மை இந்தியா உருவாகும். 

சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு: 

மகசேசே விருது பெற்றவரும் சஃபாய் கர்மசாரி அந்தோலனின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான பெஜாவாடா வில்சன், நாட்டில் 96 லட்சம் உலர் கழிப்பறைகள் உள்ளதாகவும், அவற்றில் சேரும் கழிவுகளை பொதுவெளியில் கொட்டுவதைத் தவிர வேறு வழியில்லை என்றும் கூறுகிறார். இதுபோன்ற பொதுகழிப்பிடங்களில் சேரும் கழிவுகள் அருகில் உள்ள நீர்நிலைகளில்தான் கொட்டப்படுவதாகக் கூறப்படுகிறது. சுற்றுச்சூழல் மேலும் மாசுபடுவதற்கும் நோய்கிறுமிகள் பரவுவதற்குமே இது வழிவகுக்கும். 

மொழிபெயர்ப்பு: பால. மோகன்தாஸ்

மொத்த எழுத்துக்கள்: 802 

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.