ETV Bharat / bharat

நிதி ஆணையத்தின் பரிந்துரைப்படி நிதி விடுவிக்க வேண்டும்- பிகார் துணை முதலமைச்சர் - பிகார் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி

பட்னா: 15ஆவது நிதி ஆணையம் பரிந்துரைத்த மானியத் தொகை ஏழாயிரத்து 434 கோடி ரூபாயை உடனடியாக விடுவிக்க கோரி, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு பிகார் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி கடிதம் எழுதியுள்ளார்.

sushil modi
sushil modi
author img

By

Published : May 11, 2020, 12:13 PM IST

உலகையே அச்சுறுத்திவரும் கரோனா வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் கடந்த மார்ச் 25ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு மே 17ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக நாட்டின் பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கரோனா வைரஸ் எதிரொலியாக பிகார் மாநிலத்தின் வருவாய் குறைந்துள்ளதாகவும், மாநிலத்தின் வளர்ச்சி திட்டங்கள் மற்றும் இதர செயல்பாடுகளை மேற்கொள்ளும் விதமாக 15ஆவது நிதி ஆணையம் பரிந்துரைத்த தொகை உடனடியாக விடுக்க வேண்டும் எனவும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு, அம்மாநில துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி கடிதம் எழுதியுள்ளார்.

அதில், நிதி ஆணையத்தின் பரிந்துரையின் படி, 2020-21 நிதியாண்டில் பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளுக்கு ரூ. ஐந்தாயிரத்து 18 கோடியும், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ. இரண்டாயிரத்து 416 கோடியும் விடுவிக்க வேண்டும். இந்த தொகையை நிதியாண்டின் முதல் காலாண்டில் விடுவித்தால், குடிநீர் திட்டம், வடிகால் திட்டம் உள்ளிட்டவற்றை செயல்படுத்த மாநில அரசிற்கு உதவியாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

பல்கலைக்கழக ஆசிரியர்களின் ஊதியத்தை வழங்க ஏதுவாக மத்திய அரசின் கட்டுப்பட்டின் கீழ் இயங்கும் சமக்ரா சிக்க்ஷா அபியனிற்கு வழங்கும் நிதியை அதிகரிக்க வேண்டும் என்றும் துணை முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், இந்த ஏப்ரல்-ஜூன் காலாண்டில் பல்கலைக்கழக ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க சுமார் 999 கோடி ரூபாய் பயன்படுத்தப்படும் என்றும் , 7 வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளின்படி, ஏற்கனவே ரூ.767 கோடி ஊதிய தொகையாக பல்கலைக்கழகங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாவும் தெரிவித்துள்ளார். பல்கலைக்கழக மானியக் குழுவின் வழிகாட்டுதல்களின்படி, பல்கலைக்கழகங்களில் பணிபுரிபவர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தில் 50 சதவீதத்தை மத்திய அரசு ஏற்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதையும் பார்க்க: காவலர்களே சட்டவிரோதமாக மது விற்பனை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.