கர்நாடக மாநிலம் ராய்ச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்த 30 பேர் தெலங்கானாவிற்கு கூலிவேலைச் செய்ய வந்துள்ளனர். கரோனா வைரஸ் அச்சுறுத்தலால், நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, அவர்கள் வேலை கிடைக்காமல் மிகவும் சிரமத்திற்கு ஆளாகினர்.
இதன்காரணமாக, வீடு திரும்ப எண்ணிய 30 பேரும் மீண்டும் மினிலாரியில் ராய்ச்சூருக்கு சென்றுக் கொண்டிருந்தனர். அப்போது, மினிலாரி சூர்யாபேட் அருகே சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வந்த லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து மினிலாரி மீது எதிர்பாராதவிதமாக மோதியது.
இந்த விபத்தில் ஆறு பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்தில் படுகாயமடைந்த ஆறு பேரும் ஓஸ்மானியா அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க:திருப்பூர் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து!