காப்பர் உலோகம் நமது உடலுக்கு வளர்ச்சி மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை வழங்கும் ஒரு முக்கியமான கனிமமாகும். இது பாக்டீரியா எதிர்ப்பு, ஆண்டி மைக்ரோபியல் பண்புகளைக் கொண்டுள்ளது.
முந்திரி கொட்டைகள், உலர்ந்த பழங்கள், கருப்பு மிளகு, ஈஸ்ட் ஆகியவற்றில் இவை ஏராளமாக இடம்பெற்றுள்ளது. இதே போல், செப்பு அணிகலன்கள் அணிவதும் உடலுக்குள் குணப்படுத்தும் ஆற்றலை வெளிப்படுத்தும் என முன்னோர்களால் நம்பப்படுகிறது. மணிக்கட்டில் வளையம் அல்லது விரலில் மோதிரமாக அணிந்திருந்த பலர் உடல்நிலையில் முன்னேற்றம் இருப்பதாக தெரிவித்துள்ளனர்
காப்பரினால் ஏற்படும் நன்மைகள்:
- நோயெதிர்ப்பு சக்தி அதிகப்படுத்தல்.
- மாரடைப்பு மற்றும் இதயம் தொடர்பான சிக்கலிலிருந்து பாதுகாக்கும் திறன் கொண்டது.
- மூட்டு வலி மற்றும் மூட்டுவலியை குணப்படுத்தும் தன்மை கொண்டது.
- தோல் மற்றும் முடியின் புத்துணர்ச்சிக்கு உதவுகிறது.
- கோபம், பதட்டம் போன்ற எதிர்மறையான உணர்ச்சிகளையும் விலக்கி வைக்க உதவுகிறதாக நம்பப்படுகிறது.
இத்தகைய பல்வேறு நன்மைகளை கொண்டுள்ள காப்பரை பயன்படுத்த மக்கள் ஆர்வம் காட்ட வேண்டும்.