ETV Bharat / bharat

ரஞ்சன் கோகாய் மீது உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி கடும் தாக்கு!

author img

By

Published : Mar 18, 2020, 9:33 AM IST

திருவனந்தபுரம்: ரஞ்சன் கோகாயை மாநிலங்களவை உறுப்பினராக நியமித்திருப்பது, நீதித் துறை மீதான மக்களின் நம்பிக்கையை சீர்குலைக்கும்வகையில் உள்ளதாக உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி குரியன் ஜோசப் விமர்சித்துள்ளார்

Kurian Joseph
Kurian Joseph

உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாயை மாநிலங்களவை நியமன உறுப்பினராக திங்கள்கிழமை (மார்ச் 16) குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அறிவித்தார். இந்த அறிவிப்புக்குப் பல்வேறு தரப்பினரும் தங்கள் எதிர்ப்புகளைப் பதிவுசெய்து-வருகின்றனர்.

இந்நிலையில் ரஞ்சன் கோகாயைப் பற்றிய அறிவிப்பு நீதித் துறை மீதான நம்பிக்கையைச் சீர்குலைக்கும் என்று உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி குரியன் ஜோசப் விமர்சித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், "நம் நாட்டிலுள்ள நீதித் துறையின் சுதந்திரத்தைக் காக்க என்னுடன் சேர்ந்து ரஞ்சன் கோகாய் உள்ளிட்ட நான்கு நீதிபதிகள் 2018 ஜனவரி 12இல் செய்தியாளர்களைச் சந்தித்தோம்.

நீதித் துறை மீதான சுதந்திரத்தைக் காக்க ஒரு காலத்தில் தைரியமாகப் போராடிய ரஞ்சன் கோகாய் இப்படிச் சமரசம் செய்துகொண்டது எனக்கு மிகப்பெரிய ஆச்சரியத்தைத் தருகிறது. இந்த நியமனம் நீதித் துறை மீதான மக்களின் நம்பிக்கையைச் சீர்குலைக்கும்வகையில் உள்ளது" என்று விமர்சித்துள்ளார்.

சுதந்திர இந்தியாவின் வரலாற்றிலேயே இல்லாத வகையில், முதன்முதலாக 2018 ஜனவரி 12ஆம் தேதி உச்ச நீதிமன்ற செயல்பாடுகள் குறித்து நீதிபதி செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகாய், லோகூர், குரியன் ஜோசப் ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

இதையும் படிங்க: 'பதவியேத்துகிட்டு அப்புறமா பதில சொல்றேன்' - ரஞ்சன் கோகாய்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.