ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவ்வழக்கில் ஜாமீன் வேண்டி, டெல்லி உயர் நீதிமன்றத்தில் ப. சிதம்பரம் தாக்கல் செய்த மனு நிராகரிக்கப்பட்டது.
இந்நிலையில், ப. சிதம்பரம் ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இன்று விசாரணைக்கு வந்த இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள், சிதம்பரத்தின் ஜாமீன் மனு குறித்துப் பதிலளிக்க அமலாக்கத் துறைக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.
மேலும், இந்த வழக்கை நவம்பர் 26ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.
இதையும் படிங்க: வானிலை காரணமாக மேலும் மோசமடையும் டெல்லி காற்று மாசு!