ETV Bharat / bharat

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு 2020 அறிவிப்பை நிறுத்தி வைக்கக் கோரும் சூழலியல் மாணவர்கள்!

author img

By

Published : Jun 25, 2020, 10:43 PM IST

டெல்லி: மத்திய அரசின் 'சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு 2020' அறிவிப்பை நிறுத்தி வைக்கக்கோரி நாடு முழுவதும் உள்ள புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த மாணவர்கள் கூட்டாக வலியுறுத்தியுள்ளனர்.

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு 2020 அறிவிப்பை நிறுத்தி வைக்க கோரும் சூழலியல் மாணவர்கள்!

'சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு 2020' என்ற தலைப்பில் மத்திய அரசின் சுற்றுச்சூழல், வன மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் (MoEFCC) சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டத்தில் ஏற்படுத்தப்பட வேண்டிய திருத்தங்கள் குறித்து பரிந்துரைகளை ஆவணப்படுத்தியது. இந்த மதிப்பீடுகளை உடனடியாக அமல்படுத்த மத்திய அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக அறிய முடிகிறது.

இதனை எதிர்த்து மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேக்கருக்கு, நாடு முழுவதும் உள்ள சூழலியல் மாணவர்கள் சார்பில் கடிதமொன்று இன்று (ஜூன் 25) அனுப்பப்பட்டுள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி, டெல்லி, கர்நாடகா, மகாராஷ்டிரா, அஸ்ஸாம், தெலங்கானா, மேற்கு வங்கம், பஞ்சாப், கோவா, மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், ஹரியானா, ஒடிசா, குஜராத் மற்றும் ஆந்திரப் பிரதேசம் மாணவர்கள் இதில் தங்களது எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.

புதிய இ.ஐ.ஏ வரைவு அறிவிப்பு 2020 தொடர்பாக மாணவர்கள் எழுதியுள்ள கடிதத்தில், " 'சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு 2020' என்ற தலைப்பில் மத்திய அரசின் சுற்றுச்சூழல், வன மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் (MoEFCC) சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டத்தில் மேற்கொள்ள பரிந்துரைத்துள்ள திருத்தங்கள் அனைத்துமே சுற்றுச்சூழலுக்கும், பல்லுயிர் சூழல் சமூகத்திற்கும் கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்தும்.

சுரங்க மற்றும் கட்டுமானம் போன்ற அழிவுகரமான தொழில்களுக்கு, இயற்கை வளங்களைத் தாரை வார்க்கும் திட்டங்களுக்கு சட்டப் பூர்வமான அங்கீகாரத்தை வழங்கும். பன்னாட்டு மற்றும் உள்நாட்டு முதலாளிகளுக்கு நாட்டின் வளத்தை பங்குப்போட்டு கொடுக்கும் சதி என்று தான் சொல்ல வேண்டும். பெரிய அளவிலான எதிர்ப்புகள் எழுந்தபோதிலும் மும்பை மெட்ரோ ரயில் கட்டுமானத்திற்காக ஆரே காடு அழிக்கப்பட்டது. 2016ஆம் ஆண்டில் எதிர்ப்பைப் பொருட்படுத்தாமல் கோவாவில் உள்ள துறைமுகங்களை விரிவுபடுத்த பாதுகாக்கப்பட்ட கடல் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டன.

விசாகப்பட்டினத்தின் தென் கொரிய நிறுவனமான எல்.ஜி பாலிமர்ஸ் தொழிற்சாலையிலிருந்து வெளியான விஷவாயு கசிவும் அதனால் அங்கு ஏற்பட்ட சூழலியல் சீர்கேடுகள். அஸ்ஸாமின் பாக்ஜான் பகுதியில் ஆயில் இந்தியா நிறுவனத்தின் எரிவாயு கிணற்றில் ஏற்பட்ட விபத்தும், அதனை இன்று வரை அணைக்க அரசு போராடி வருவதும் நமது நிலையை நமக்கே எடுத்து சொல்கின்றன. இந்நிலையில், புதிய வரைவில் அறிவிக்கப்பட்டுள்ள பலவும் சர்ச்சைக்குரியவையாகவே உள்ளன.

அரசு கொண்டுவர விரும்புகிற திருத்தங்கள் பெரும்பாலும் கள உண்மைக்கு மாறாகவும், பல இயற்கை வள சுரண்டல்களுக்கு வழிவகுக்கவும், பெரும் நிறுவனங்களை காக்கவும் இருப்பதை உறுதி செய்கின்றன. சுரங்கத் திட்டங்களுக்கான அனுமதி வழங்கும் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் வழிமுறைகளில் தவறான அணுகுமுறைகளுக்கு வழிகோலிடும்.

இந்தியா எனும் ஜனநாயக நாட்டின் பங்குதாரர்களாகிய நாங்கள், நமது சுற்றுச்சூழலைப் பற்றி அதனை பாதுகாப்பது பற்றி கவலைப்படுவதற்கு பல காரணங்கள் உள்ளன. உலகளாவிய பெருந்தொற்று நோயான கரோனா பாதிப்பிலிருந்து வெளிவருகையில், எந்த வகையான இந்தியா எந்த வகையான சூழலில் இருக்க வேண்டும் ? எந்த வகையான சூழல் நாட்டை பாதுகாக்கும் ? எவை நாம் வாழ்வதற்கான சூழலை வழங்கும் ? என்பதை பற்றி மக்களிடையே பேச இளைஞர்களாகிய நாங்கள் முடிவு செய்துள்ளோம்.

செழிப்பான காடுகள், சுத்தமான ஆறுகள், இயற்கை அழிக்காத வழியில் குன்றாத வளர்ச்சி பாதை, நிலைத்த முன்னேற்றம், பல்வேறு சமூகங்களுக்கும் முக்கியத்துவம், சீரான பொருளாதார ஏற்றம் கொண்ட ஒரு இந்தியாவை வடிவமைப்பதைப் பற்றி குடிமக்களுடன் உரையாடலை கண்டு, அதனை ஊக்குவிக்கும் வகையில் கொள்கை உருவாக்கும் முறைமையை அரசு கொள்ள வேண்டும். அதுவரை இந்த புதிய வரைவை நடைமுறைப்படுத்தாமல் நிறுத்தி வைக்க வேண்டும்” என கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

இந்தக் கடிதத்தில் அசோகா பல்கலைக்கழகம், ஜே.என்.யூ, ஐ.ஐ.எஸ்.இ.ஆர், ஜெயின் பல்கலைக்கழகம், ஜிண்டால் குளோபல் லா ஸ்கூல், யூத் 4 ஸ்வராஜ் மற்றும் ஏ.ஐ.எஸ்.ஏ போன்ற நாட்டின் தலைச்சிறந்த கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த சூழலியல் மாணவர்கள் கையெழுத்திட்டு உள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.