ETV Bharat / bharat

பெங்களூருவில் சிக்கித்தவிக்கும் 4000-க்கும் மேற்பட்ட அசாம் தொழிலாளர்கள்! - குடிபெயர்ந்த தொழிலாளர்கள்

பெங்களூரு : தாயகம் அழைத்துச்செல்ல ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு ரயில்கள் குறித்த தகவல் தெரியாமல் 4000-க்கும் மேற்பட்ட அசாமியத் தொழிலாளர்கள் பெங்களூரு ரயில் நிலையத்தில் தவித்து வருகின்றனர்.

Stuck in Bengaluru, thousands of Assam migrants wait for return

author img

By

Published : Jun 14, 2020, 9:11 AM IST

தென்னிந்தியாவில் அதிக அளவில் வெளிமாநிலத் தொழிலாளர்கள் குடிபெயர்ந்திருக்கும் சில நகரங்களில் கர்நாடக மாநிலம் பெங்களூரும் ஒன்று. ஊரடங்கு காலத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்புகளில் சுமார் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அம்மாநிலத்தில் தங்கி இருப்பது தெரியவந்தது.

இரண்டு மாத கால ஊரடங்கில் மாவட்ட நிர்வாகம், தன்னார்வலர்கள் உதவி செய்தாலும் அவர்களுக்கான தன்னிறைவு என்பது கடைசிவரை ஏற்படவில்லை. தற்போது, ஊரடங்கு தளர்வுக்குப் பிறகும் வெளிமாநிலத் தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்ல,‌ மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்தது.

இதையடுத்து, சொந்த ஊர் செல்வதற்காக, பெங்களூருவில் மட்டும் பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை சுமார் 2 லட்சத்தை தாண்டியது. சிறப்பு ரயில்கள் மூலம் பெங்களூருவிலிருந்து தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு அனுப்பப்படுவதை நம்பியும், ரயில் நிலையத்திற்கு நேரில் சென்றால் ஊர் சென்று விடலாம் என்று சொன்னவர்களின் வாக்கை நம்பியும் பெங்களூரு அரண்மனை அருகில் வந்து குடிபெயர்ந்த தொழிலாளர்கள் காத்துக் கிடக்கின்றனர்.

சிக்கியுள்ள குடிபெயர்ந்தோருக்கு உதவிகளை செய்துவரும் ரோஸ்மேரி விஸ்வநாத கூறுகையில், "அசாமைச் சேர்ந்த 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடிபெயர்ந்த தொழிலாளர்கள் இங்குள்ள அரண்மனை மைதானத்தில் கூடியிருக்கின்றனர். தங்கள் மாநிலத்திற்கு எந்தவொரு ரயிலும் கடந்த ஆறு நாள்களாக இல்லாத காரணத்தால் அவர்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர்.

மக்கள் கூடியிருக்க வேண்டிய இடத்தில் மின்சாரம் இல்லை, குளியலறைகள் இல்லை, தண்ணீர் இல்லை, எந்த ஏற்பாடும் இல்லை. இதற்கெல்லாம் பதிலளிக்க ஒரு அலுவலரும் இங்கில்லை. இது நிர்வாகத்தின் மிகப்பெரிய தோல்வி. குடிபெயர்ந்தவர்கள், தொழிலாளர்கள் என்பதால் நிர்வாகத்தினர் யாரும் சரியான பதிலைத் தருவதில்லை" என தெரிவித்தார்.

இது குறித்து அவர்கள் கூறுகையில்,"சொந்த ஊர் செல்ல முறையாக விண்ணப்பித்து ஒரு மாத காலம் ஆகிவிட்ட நிலையில் தற்போது வரை எந்த பதிலும் இல்லை. ரயில் டிக்கெட் பெறுவதற்கு நேரில் ரயில் நிலையம் சென்றால் போதும் என நாங்கள் வேலை பார்த்த நிறுவன உரிமையாளர்களும், இன்னும் சிலரும் கூறியதை நம்பி இங்கு வந்து ஆறு நாள்களாக இருக்கிறோம். அரசிடம் விண்ணப்பித்தவர்களுக்கு, டோக்கன் கொடுக்கப்பட்டு உணவுகளும் வழங்கப்பட்டு கலைந்து போக வைக்கின்றனர்" என வேதனை தெரிவிக்கின்றனர்.

கவுஹாத்தியில் திட்டமிடப்பட்ட ஷ்ராமிக் சிறப்பு ரயில் இன்னும் புறப்படவில்லை. அது அங்கிருந்து புறப்பட்ட பின்னரே இவர்கள் இங்கிருந்து செல்ல முடியும் என்றும், விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை அதிகம் என்பதால் பதிவு செய்த அனைவரையும் அனுப்பி வைக்க சிறிது காலம் ஆகும் என்றும் பெங்களூரு நிர்வாகத்தினர் தகவல் தெரிவிக்கின்றனர்.

வயதானவர்கள், கைக்குழந்தையுடன் இருக்கும் தாய்மார்கள், நிறைமாத கர்ப்பிணிகள் என அனைவரது நிலையும் பார்ப்போரை கண்கலங்க வைக்கிறது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.