ஜம்மு-காஷ்மீரில் வழக்கமாக மூன்று நாட்கள் விமரிசையாக கொண்டாடப்படும் ரமலான் விழா இந்த ஆண்டு கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக களையிழந்திருந்தது.
இந்தியாவில் அதிகளவிலான இஸ்லாமியர்கள் வசிக்கும் ஜம்மு-காஷ்மீரின் சிவப்பு மண்டல பகுதிகளில் வசிக்கும் குடும்பங்களுக்கு, ஒன்றுகூடுதல் உள்ளிட்ட அனைத்து பொது கொண்டாட்டாங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், ரமலானை முன்னிட்டு நடத்தப்படும் ஊர்வலமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
பாதிப்பு குறைவான பகுதிகளில் மசூதிகளிலும், மைதானங்களில் தொழுகை செய்யவும், சிறிய அளவிலான கூட்டு பிரார்த்தனைக்கும் அங்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 20 அல்லது 30 பேர் மட்டும் கூடி தொழுகை நடத்திக்கொள்ளலாம் என கட்டுப்பாடுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பெரும்பாலான காஷ்மீரிகள் தமது வீடுகளிலேயே தொழுகை நடத்தியுள்ளனர். மேலும், அனுமதிக்கப்பட்ட பகுதிகளில் குறைந்த எண்ணிக்கையில் தகுந்த இடைவெளியோடு, உரிய பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி மக்கள் தொழுகை நடத்தினர். ரமலான் விழா நாளான இன்று வழக்கத்திற்கு மாறாக ஜம்மு-காஷ்மீர் களையிழந்து காணப்பட்டது.
இதையும் படிங்க : சிபிஎஸ்சி தேர்வு மையங்கள் 12 ஆயிரமாக உயர்வு