மத்திய அரசின் கட்டுப்பாட்டில் ஏறத்தாழ 300 பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளன. அவற்றுள் 181 பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகள் இந்தியப் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளன.
இதன் நிகர சொத்து மதிப்பு, லாபம் ஈட்டும் அடிப்படையில் பொதுத்துறை நிறுவனங்களை மகா நவரத்தின நிறுவனங்கள், நவரத்தின நிறுவனங்கள் மற்றும் சிறு நவரத்தின நிறுவனங்கள் என மூன்றாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தாண்டு ஏப்ரல் மாதத்திற்கான மகாநவரத்தின நிறுவனங்களின் குறியீட்டின் வளர்ச்சி விகிதம் 38.1 விழுக்காடு குறைந்துள்ளது. இது மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் 9 விழுக்காடு வீழ்ச்சி அடைந்துள்ளது எனத் தெரியவந்துள்ளது.
கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கின் காரணமாக, நிலக்கரி, சிமென்ட், எஃகு, இயற்கை எரிவாயு, சுத்திகரிப்பு நிலையம், கச்சா எண்ணெய் உள்ளிட்ட மகாநவரத்தின நிறுவனங்களின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால், கணிசமான இழப்பைச் சந்தித்து வருகின்றன.
தொழில் துறை குறியீட்டில் சேர்க்கப்பட்டுள்ள பொருள்களின் மதிப்பீட்டு உற்பத்தியில் 40.27 விழுக்காடு இந்த எட்டு மகாநவரத்தின நிறுவனங்கள் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
நிலக்கரி - நிலக்கரி நிறுவனத்தின் உற்பத்தி கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு 15.5 விழுக்காடு குறைந்துள்ளது. அதன் ஒட்டுமொத்த குறியீட்டு எண், ஏப்ரல் முதல் மார்ச் வரையிலான காலகட்டத்தில் 0.4 விழுக்காடு குறைந்துள்ளது.
கச்சா எண்ணெய்- கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில், கச்சா எண்ணெய் உற்பத்தி 6.4 விழுக்காடு குறைந்துள்ளது. அதன் ஒட்டுமொத்த குறியீடானது ஏப்ரல் முதல் மார்ச் வரையிலான காலகட்டத்தில் 5.9 விழுக்காடு குறைந்துள்ளது.
இயற்கை எரிவாயு - இயற்கை எரிவாயு உற்பத்தி கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில் 19.9 விழுக்காடு குறைந்துள்ளது. அதன் ஒட்டுமொத்த குறியீட்டு எண் 2019-20 நிதியாண்டில் ஏப்ரல் முதல் மார்ச் வரை 5.6 விழுக்காடு குறைந்துள்ளது.
சுத்திகரிப்புப் பொருள்கள்- பெட்ரோலிய சுத்திகரிப்பு உற்பத்தி கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில் 24.2 விழுக்காடு குறைந்துள்ளது. அதன் ஒட்டுமொத்த குறியீட்டு எண் ஏப்ரல் முதல் மார்ச் வரையிலான காலகட்டத்தில் 0.2 விழுக்காடு அதிகரித்துள்ளது.
உரங்கள் - கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில் உரங்கள் உற்பத்தி 4.5 விழுக்காடு குறைந்துள்ளது. அதன் ஒட்டுமொத்த குறியீடானது கடந்த நிதியாண்டின் ஏப்ரல் முதல் மார்ச், வரையிலான காலத்தில் 2.7 விழுக்காடு அதிகரித்துள்ளது.
எஃகு- எஃகு (ஸ்டீல்) உற்பத்தி கடந்தாண்டு ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில் 83.9 விழுக்காடு குறைந்துள்ளது. அதன் ஒட்டுமொத்த குறியீட்டு எண் 3.4 விழுக்காடு அதிகரித்துள்ளது
சிமென்ட் - சிமென்ட் உற்பத்தி கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில் 86.0 விழுக்காடு குறைந்துள்ளது. அதன் ஒட்டுமொத்த குறியீட்டு எண் ஏப்ரல் முதல் மார்ச் வரையிலான காலகட்டத்தில் 0.9 விழுக்காடு சரிந்துள்ளது.
மின்சாரம் - கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில், மின்சார உற்பத்தி 22.8 விழுக்காடு குறைந்துள்ளது. அதன் ஒட்டுமொத்த குறியீட்டு எண் ஏப்ரல் முதல் மார்ச், வரையிலான காலகட்டத்தில் 1.0 விழுக்காடு அதிகரித்துள்ளது