ETV Bharat / bharat

சிறுவர்களுக்கு நாயுடன் கட்டாயத் திருமணம் - ஏன் தெரியுமா?

புபனேஸ்வர் : ஒடிசாவில் உள்ள ஒரு கிராமத்தில் மூடநம்பிக்கையின் அடிப்படையில் சிறுவர்களுக்கு நாயுடன் திருமணம் செய்து வைக்கப்பட்ட விநோதச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

odisha dog marriage
odisha dog marriage
author img

By

Published : Feb 24, 2020, 1:16 PM IST

ஒடிசா மாநிலம், மயூர்பான்ஜ் மாவட்டத்தில் உள்ள சுக்குலியா வட்டத்தில் பாரியா என்ற கிராமம் அமைந்துள்ளது. இங்கு வாழும் பழங்குடியின சமூகத்தில் பிறக்கும் குழந்தைக்கு, முதல் பல் மேல் தாடையில் தோன்றினால், அது தீய சகுணமாகப் பார்க்கப்படுகிறது.

இந்தத் தீய சகுணத்தைப் போக்க, அந்தக் குழந்தைகளை நாய்களுக்குத் திருமணம் செய்து வைக்கும் வழக்கத்தை இப்பழங்குடியினர் காலம் காலமாகப் பின்பற்றி வருகின்றனர்.

அந்த வகையில், நேற்று பாரியா கிராமத்தில் இரண்டு பதின்ம வயது சிறுவர்களுக்கு தெரு நாய்களுடன் திருமணம் செய்து வைக்கப்பட்டது.

திருமணநிகழ்ச்சி

சிறுவர்களுக்கு மாப்பிள்ளை போல உடை அணிவித்து, ஊரைச் சுற்றி வரச் செய்து, பின்னர் நாய்களுடன் திருமணம் செய்து வைத்தனர். இந்த விநோதத் திருமணத்தை ஊரே திருவிழாப் போல கொண்டாடியது. இதற்கு சுக்குலியா வட்டத் தலைவரும் உடந்தையாகச் செயல்பட்டுள்ளார்.

நவீன யுகத்திலும் மூடநம்பிக்கைகள் மனிதனிடம் எந்த அளவிற்கு நெருக்கமாக இருக்கின்றன என்பதை இந்தச் சம்பவம் உணர்த்துகிறது.

இதையும் படிங்க : பிரிட்டிஷ் ஆட்சி போல பாஜக ஆட்சியும் தோல்வியடையும் - திருமுருகன் காந்தி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.