ஆந்திர பிரதேசம் மாநிலம் கர்னூல் மாவட்டம் அகோபிலாவில் 100 -க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இங்கு வசிக்கும் மக்கள் தங்களது முன்னோர்கள் விட்டுச்சென்ற பாரம்பரியத்தை காத்து வருகின்றனர்.
இந்த பழமை மாறாத பழங்குடியின மக்கள் அந்த பகுதியில் நிலவும் வறட்சியை போக்க தங்களது குலதெய்வத்திற்கு விழா எடுக்க விரும்பினர். அதன்படி இன்று நடந்த விழாவில் முக்கிய நிகழ்வான கடவுளுக்கு பாயாசம் வழங்கும் நிகழச்சி நடைபெற்றது. சுடசுட மக்கள் கொண்டு வந்த பாயாசத்தை கடவுளுக்கு பிரசாதமாக படைத்தனர்.
பின்பு சாமிக்கு படைத்த பாயாசத்தை தரையில் ஊற்றி சிறுவர்களை குடிக்க செய்தனர். இந்த நிகழ்வு பார்ப்பவர்களை நெகிழ்ச்சியடைய செய்தது.