ஒடிசாவின் அரிசி கிண்ணம் என ஒரு காலத்தில் அழைக்கப்பட்டதுதான் பர்கர் மாவட்டம். ஆனால் தற்போது அதிக புற்றுநோயாளிகளின் எண்ணிக்கையை அந்த மாவட்டம் எண்ணிக் கொண்டிருக்கிறது. அதிலும் மாநிலத்தில் புற்று நோயாளிகளின் எண்ணிக்கை பர்கர் மாவட்டத்தில்தான் அதிகமாக உள்ளது. இதற்கெல்லாம் காரணம் என்ன?
விவசாயத்தில் ரசாயனம் கலந்த உரங்கள், பூச்சிக் கொல்லிகளை பயன்ப்படுத்தியதின் விளைவு மாவட்டத்தை புற்றுநோயை ஆட்க்கொள்ள வைத்துள்ளது. இதனால் எப்படி புற்றுநோய் உண்டாகியிருக்கும் என உங்களுக்கு சந்தேகம் எழுந்தால், அதற்கும் பதிலிருக்கிறது.
ரசாயனம் கலந்த உரங்கள், பூச்சிக் கொல்லிகளை விவசாய நிலத்தில் தெளிக்கும் போது, சுவாசிக்கும் காற்று மாசுபடுகிறது, நீர் ஆதாரங்களில் ரசாயனம் கலக்கிறது. இதனால்தான் மாவட்ட முழுவதும் புற்றுநோயாளிகள் அதிகரித்துவருகின்றனர்.
1950ஆம் ஆண்டு முதல் மாவட்டம் முழுவதும் நெல், காய்கறிகளை பயிரிட்டுவருகின்றனர். இதற்காக ஹிராகுட் நீர் தேக்கத்திலிருந்து நீரை வயல்களுக்கு பாய்ச்சியுள்ளனர். இதில் பல விவசாயிகள் ஆந்திராவிலிருந்து குடிபெயர்ந்து விவசாயம் செய்துவந்துள்ளனர். இந்த விவசாயிகள் நல்ல விளைச்சலை காண மண்ணில் ரசயான உரங்களை தூவியுள்ளனர். இதனால் மண் வளமின்றி, மாவட்டத்தின் நீர் வளமும் பாதிப்படைந்துள்ளது.
இப்போதும்கூட மாநிலத்தில் அறியப்படும் புற்றுநோய் பாதித்தவர்களில் 26. 3 விழுக்காடு இந்த பர்கர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்.
இது குறித்து புற்று நோயிலிருந்து மீண்டு வந்த ரோசன் அரா கான் கூறுகையில், அப்போது என் கைகளில் எந்த உணர்ச்சியை என்னால் உணரமுடியவில்லை. பின்னர் புவனேஷ்வரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டேன். அன்றிலிருந்து மூன்று மாதங்கள் படுத்த படுக்கையாகவே மருத்துவமனையில் இருந்தேன். பின்னர்தான் குணமாகி வீடு திரும்பினேன்” என்றார்.
இப்படி இருக்கும் பட்சத்தில் மாவட்டத்தில் சிகிச்சையளிக்க ஒரே ஒரு அரசு மருத்துவமனை மட்டுமே உள்ளது. இருந்தபோதிலும் புற்று நோயிலிருந்து மீண்டுவந்த சிலர் சேர்ந்து “ஃபைட்டர்ஸ் குரூப்” என உருவாக்கி புற்றுநோயிலிருந்து பர்கர் மீண்டு வர முயற்சி எடுத்துவருகிறது. அதன் ஒருபகுதியாக பர்கரில் ஒரு புர்றுநோய் மருத்துவமனையை உருவாக்க வேண்டும் என 2017ஆம் ஆண்டு முதல் கோரிக்கை வைக்கப்படுகிறது.
இதையும் படிங்க...'பொருளாதாரத்தை மீட்க விவசாயிகள் உதவுவார்கள்'