கோவிட்-19 பரவல் காரணமாக பல்வேறு நாடுகளிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடும் வீழ்ச்சியைச் சந்தித்தது. இதைக் கருத்தில்கொண்டு மார்ச் 16ஆம் தேதி முதல் பெட்ரோல், டீசல் விலை குறைப்பு தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், தற்போது ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால், கச்சா எண்ணெய் விலை சர்வதேச அளவில் மீண்டும் கணிசமாக உயர்ந்துவருகிறது.
இந்தியாவிலும் 82 நாள்களுக்குப் பின், ஜூன் 8ஆம் தேதி பெட்ரோல் லிட்டருக்கு 53 காசுகளும், டீசல் லிட்டருக்கு 52 காசுகளும் உயர்த்தப்பட்டன. அதைத்தொடர்ந்து நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டன. கடந்த 10 நாள்களில் மட்டும் பெட்ரோல் விலை 5.47 ரூபாயும், டீசல் விலை 5.80 ரூபாயும் உயர்ந்துள்ளது.
உலகளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்துபோது விலையை குறைக்காத மத்திய அரசு, இப்போது மட்டும் பெட்ரோல், டீசல் விலையை ஏற்றுவது மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், "பிரதமர் மோடி, இந்த நெருக்கடியான காலத்தில் ஏழைகள், நடுத்தர வர்கத்தினரின் கைகளில் பணத்தை தாருங்கள். ஏழைகளின் துன்பத்திலிருந்து லாபமடைவதை நிறுத்திக்கொள்ளுங்கள்" என்று #ModiStopLootingIndia ஹேஷ்டேக்கை பயன்படுத்தி ட்வீட் செய்துள்ளார்.
-
PM Modi, these tragic times dictate putting money directly in the hands of middle class and poor. STOP profiteering from their misery. #ModiStopLootingIndia pic.twitter.com/g7wRhBWJxf
— Rahul Gandhi (@RahulGandhi) June 16, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">PM Modi, these tragic times dictate putting money directly in the hands of middle class and poor. STOP profiteering from their misery. #ModiStopLootingIndia pic.twitter.com/g7wRhBWJxf
— Rahul Gandhi (@RahulGandhi) June 16, 2020PM Modi, these tragic times dictate putting money directly in the hands of middle class and poor. STOP profiteering from their misery. #ModiStopLootingIndia pic.twitter.com/g7wRhBWJxf
— Rahul Gandhi (@RahulGandhi) June 16, 2020
அத்துடன் பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்பப்பெற வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி எழுதியுள்ள கடிதத்தையும் இணைத்துள்ளார்.
மற்றொரு ட்வீட்டில், "பெரு முதலாளிகளின் பரிசுகளுக்கான விலையை நடுத்தர வர்கத்தினரும் ஏழைகளும் செலுத்துகிறார்கள்" என்று பதிவிட்டு, பெட்ரோல் டீசல் விலை தொடர்பான படம் ஒன்றையும் பதிவிட்டிருந்தார்.
-
Middle class and the poor pay for the gifts the crony capitalists get. #शर्म_करो_लुटेरी_सरकार pic.twitter.com/q69cqlF83Q
— Rahul Gandhi (@RahulGandhi) June 15, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Middle class and the poor pay for the gifts the crony capitalists get. #शर्म_करो_लुटेरी_सरकार pic.twitter.com/q69cqlF83Q
— Rahul Gandhi (@RahulGandhi) June 15, 2020Middle class and the poor pay for the gifts the crony capitalists get. #शर्म_करो_लुटेरी_सरकार pic.twitter.com/q69cqlF83Q
— Rahul Gandhi (@RahulGandhi) June 15, 2020
தொடர்ந்து 10ஆவது நாளாக இன்று பெட்ரோல் விலை 45 பைசாவும், டீசல் விலை 54 பைசாவும் உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: வேலைவாய்ப்பு குறித்த அவநம்பிக்கையில் 40% இந்தியர்கள் - ஆய்வு தகவல்