உலகின் மிக உயரமான சிலையான சர்தார் வல்லபாய் படேல் சிலை குஜராத் மாநிலம் ஜாம்நகர் மாவட்டத்தின் நர்மதை அணை அருகில் அமைந்துள்ளது.
இதனைக் காண ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை புரிந்தனர். இதற்கிடையில், நாட்டில் கரோனா தொற்று பரவ தொடங்கியதையடுத்து, சிலையை மக்கள் பார்வையிட தடை விதிக்கப்பட்டது.
தற்போது நாட்டில் பல்வேறு தளர்வுகளை அறிவித்து வரும் மத்திய உள்துறை அமைச்சகத்தின் சுற்றுலா தளங்களையும் திறக்க முடிவு செய்தது.
அதன்படி, ஒற்றுமைக்கான சிலையாக கருதப்படும் சர்தார் வல்லபாய் பட்டேல் சிலையை மக்கள் பார்வைக்காக வரும் அக்டோபர் 17ஆம் தேதி முதல் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் திறக்க மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
அதன்படி...
- தினந்தோறும் 2500 சுற்றுலா பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
- முகக்கவசம் (மாஸ்க்) கட்டாயம் அணிய வேண்டும்
- தகுந்த இடைவேளியை மக்கள் பின்பற்ற வேண்டும்
- வாசலில் தெர்மல் ஸ்கேனிங் மற்றும் கிருமி நாசினி தெளித்து கைகளை சுத்தம் செய்ய வேண்டும்
- ஹாப்-ஆன்-ஹாப்-பேருந்தின் இருக்கைகள் புதிய விதிப்படி மாற்றப்பட்டுள்ளது.
மேலும், பல இடங்களில் வாடிக்கையாளர்களுக்காக சானிடைசர் மெஷின்கள் பொருத்தப்பட்டிருக்கும் என கட்டுப்பாடு தொடர்பான அறிக்கை வாயிலாக அறியமுடிகிறது.
இதையும் படிங்க: ’சர்தார் வல்லபாய் படேல் ஜவுளி கல்லூரியை ஆராய்ச்சி மையமாக மாற்றக் கூடாது’