ETV Bharat / bharat

சட்டப் பிரிவு 370 ரத்து - உமர் அப்துல்லா கடும் கண்டனம் - ஒமர் அப்துல்லா

காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு நீக்கியதற்கு தேசிய மாநாட்டுக் கட்சி துணைத் தலைவர் உமர் அப்துல்லா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

உமர் அப்துல்லா
author img

By

Published : Aug 5, 2019, 2:02 PM IST

காஷ்மீரை ஆட்சி செய்த ஹரி சிங் மேற்கொண்ட ஒப்பந்தத்தின்படி காஷ்மீர் அரசுக்கு சிறப்பு அந்தஸ்துகள் வழங்கப்பட்டு வந்தன. சட்டப் பிரிவு 370இன்படி வழங்கப்பட்டு வந்த இந்த சட்டப்பிரிவை மத்திய அரசு ரத்துசெய்ய முடிவெடுத்துள்ளதாக நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்தார். இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில் இதுகுறித்து தற்போது வீட்டுச் சிறையிலுள்ள தேசிய மாநாட்டுக் கட்சி துணைத் தலைவர் உமர் அப்துல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய அரசு 370 சட்டப் பிரிவை ரத்து செய்திருப்பது காஷ்மீர் மக்களுக்கு இழைக்கப்பட்ட துரோகம். ஏற்படவிருக்கும் பல மோசமான விளைவுகளுக்கு இந்த முடிவு அடித்தளமாக அமையக்கூடும்.

மத்திய அரசின் காஷ்மீர் பிரதிநிதிகள் இதுபோன்ற எந்த முடிவும் திட்டமிடப்படவில்லை என்று தொடர்ந்து பொய்யான தகவல்களைக் காஷ்மீரில் பரப்பி வந்தனர். காஷ்மீர் மாநிலத்தில் லட்சக்கணக்கான பாதுகாப்புப் படை வீரர்கள் குவிக்கப்பட்டபிறகு இந்த அறிவிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. காஷ்மீர் மக்களின் உரிமைக்காகக் குரல் கொடுத்தவர்கள், பாதுகாப்புப்படை வீரர்கள் சிறைப்படுத்தப்பட்டுள்ளனர்.

உமர் அப்துல்லா வெளியிட்டுள்ள அறிக்கை
உமர் அப்துல்லா வெளியிட்டுள்ள அறிக்கை

370, 35ஏ சட்டப் பிரிவுகளை மத்திய அரசு நீக்கிய முடிவு ஒருதலைபட்சமானது என்றும், அரசியலமைப்பிற்கு எதிரானது என்றும் தெரிவித்துள்ளார். மேலும் ஒரு நீண்ட போர் நம்முன் உள்ளது, அதற்குத் தயாராகவே நாங்கள் உள்ளோம் என்றும் கூறியுள்ளார்.

Intro:Body:

Statement of Omar Abdullah, Vice-President of National Conference and former Chief Minister of Jammu & Kashmir, on revoking of Article 370 and other decisions announced by Government of India.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.