ETV Bharat / bharat

சிறப்பு அந்தஸ்து நீக்கத்திற்குப் பிறகு நடைபெறும் முதல் தேர்தல்! - ஜம்மு காஷ்மீர் தேர்தல்

ஸ்ரீநகர் : ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கத்திற்குப் பிறகு முதல்முறையாக அங்கு உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது.

ஜம்மு காஷ்மீர்
ஜம்மு காஷ்மீர்
author img

By

Published : Nov 4, 2020, 10:40 PM IST

கடந்த 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5ஆம் தேதி, ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு நீக்கியது. இதனைத் தொடர்ந்து, ஜம்மு-காஷ்மீர் ஒரு யூனியன் பிரதேசமாகவும், லடாக் ஒரு யூனியன் பிரதேசமாகவும் பிரிக்கப்பட்டது. இந்நிலையில், மாவட்ட மேம்பாட்டு அமைப்புகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளாட்சி அமைப்புகளுக்கு வருகிற நவம்பர் 28ஆம் தேதி முதல் டிசம்பர் 19ஆம் தேதி வரை தேர்தல் நடைபெறும் என ஜம்மு காஷ்மீர் தேர்தல் ஆணையராக புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கே.கே.சர்மா அறிவித்துள்ளார். செய்தியாளர்களை அவர் சந்தித்துப் பேசுகையில், "வாக்குப்பதிவு எட்டு கட்டங்களாக நடைபெறவுள்ளது. முதல்கட்ட வாக்குப்பதிவு வரும் நவம்பர் 28ஆம் தேதியும், இறுதிக்கட்ட வாக்குப்பதிவு டிசம்பர் 19ஆம் தேதியும் நடைபெறவுள்ளது. காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரை தேர்தல் நடைபெறவுள்ளது.

முதல்முறையாக, மேற்கு காஷ்மீரைச் சேர்ந்த அகதிகள் தேர்தலில் வாக்களிக்க உள்ளனர். மாநிலத்தில் வாழும் மக்கள் அனைவரும் வாக்காளர்களாக பதிவு செய்து கொள்ளலாம்" என்றார். உள்ளாட்சித் தேர்தல்களை நடத்தும் நோக்கில் ஜம்மு காஷ்மீர் பஞ்சாயத்து ராஜ் சட்டத்தில் கடந்த அக்டோபர் மாதம் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.