தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் பகுதியில் உள்ள பஞ்சார ஹில்ஸ் பகுதியில், சென்ற அரசுப் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் சென்ற இரு சக்கர வாகனம் மீது மோதியது. இந்த விபத்தில் தனியார் ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் சோனி சக்சேனா (24) என்ற இளம்பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதைப் பார்த்து ஆத்திரமடைந்த பொது மக்கள் பேருந்தை கல் வீசி தாக்கியதோடு மட்டுமல்லாமல் ஓட்டுநரையும் தாக்கினர். பின்னர் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், உயிரிழந்த பெண்ணின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டதில், அனுபவமில்லாத ஓட்டுநர் பேருந்தை இயக்கியதால் தான் விபத்து நடந்திருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
தெலங்கானா மாநிலத்தில், தற்போது போக்குவரத்து ஊழியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், அரசு சார்பில் ஒப்பந்த முறையில் ஓட்டுநர்களை நியமித்து பேருந்துகளை அம்மாநில போக்குவரத்துறை இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.
ஆட்டோ மீது கன்டெய்னர் லாரி மோதி விபத்து - ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு
இதையும் படிங்க: