இலங்கை ஜாப்னா துறைமுகத்திலிருந்து காரைக்கால் துறைமுகத்திற்கு பயணிகள் கப்பல் போக்குவரத்தினை தொடங்குவது தொடர்பாக புதுச்சேரி தலைமை செயலகத்தில் மத்திய கப்பல் போக்குவரத்து இணை அமைச்சர் மனுசுக் மாண்டேவியா தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி தலைமைச் செயலகம் அக்கூட்டத்தில் அமைச்சர் கந்தசாமி, சுற்றுலாத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், தலைமை செயலாளர் அஸ்வனி குமார், காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அர்ஜுன் சர்மா, இந்திய கடலோரக்காவல்படை அலுவலர்கள், இந்திய இலங்கை துறைமுகத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர். அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த மன்சுக் மாண்டேவியா, இலங்கையின் ஜாப்னா துறைமுகத்திலிருந்து காரைக்கால் துறைமுகத்திற்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவது தொடர்பாக கடந்த நான்காண்டுகளாக ஆலோசிக்கப்பட்டு வந்தநிலையில் கப்பல் போக்குவரத்து விரைவில் தொடங்கப்படவுள்ளது எனத் தெரிவித்தார். மேலும் பேசிய அவர், அதன்மூலம் தமிழ்நாடு - இலங்கை சுற்றுலா பயணிகள் அதிகளவில் பயணம் செய்வார்கள் என்றார்.இதையும் படிங்க: நீர்நிலை ஆக்கிரமிப்பு : தமிழ்நாடு அரசின் அறிக்கையை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு!