இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
குண்டூர் - தெனாலி இடையே நடைபெறும் தண்டவாளப் பணி காரணமாக கீழ்கண்ட ரயில்கள் மாற்று வழியில் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
* ஹைதராபாத் - சென்னை சென்ட்ரல் ரயில் ஏப்ரல் 21ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை குண்டூர், கிருஷ்ணா கால்வாய், தெனாலி வழியாக இயக்கப்படும்.
* ஹைதராபாத் - திருவனந்தபுரம் சபரி விரைவு ரயில் 21ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை குண்டூர், கிருஷ்ணா கல்வாய் வழியாக இயக்கப்படும்.
* செங்கல்பட்டு - காக்கிநாடா விரைவு ரயில் 21ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை கிருஷ்ணா கால்வாய், தெனாலி வழியாக இயக்கப்படும்.
* சென்ட்ரல் - லக்னோ விரைவு ரயில் 22ஆம் தேதி மற்றும் 23ஆம் தேதி கிருஷ்ணா கால்வாய், தெனாலி வழியாக இயக்கப்படும்.
* விஜயவாடா - சென்ட்ரல் ஜன்சதாப்தி விரைவு ரயில் 21ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை கிருஷ்ணா கால்வாய், தெனாலி வழியாக இயக்கப்படும்.
* ஹைதராபாத் - எர்ணாகுளம் விரைவு ரயில் 24ஆம் தேதி செகந்திராபாத், கசிபேட், விஜயவாடா, தெனாலி வழியாக இயக்கப்படும்.
* சென்ட்ரல் - ஸ்ரீ மாதா விஷ்ணுதேவி காத்ரா அந்தமான் விரைவு ரயில் 21ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை தெனாலி, கிருஷ்ணா கல்வாய் வழியாக இயக்கப்படும்.
இவ்வாறு ரயில்வே சார்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.