23 தலைவர்களின் கருத்து வேறுபாடு குறித்த கடிதம் காங்கிரசில் ஒரு பரபரப்பை ஏற்படுத்திய சில நாள்களுக்கு பின்னர், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவரான குலாம் நபி ஆசாத்தின் எதிர்காலம் குறித்த ஊகங்கள் கட்சி வட்டாரத்தில் தொடங்கியுள்ளன.
ஆசாத்தின் ஐந்தாவது மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காலம் பிப்ரவரி 15, 2021 அன்று முடிவடையும்நிலையில், கட்சி மேலிடம் அவரை நாடாளுமன்றத்தின் மேல் சபைக்கு மீண்டும் தேர்ந்தெடுக்கும் என்பது கிட்டத்தட்ட சாத்தியமற்றது.
புதுச்சேரியில் அதிமுக-வின் கோகுல்கிருஷ்ணன் பதவிகாலம் 2021 அக்டோபரில் முடிவடைந்து விடும் என்பதால் அங்கு வாய்ப்புகள் இருக்கலாம், ஆனால் அடுத்த ஆண்டு மே மாதம் நடைபெறும் தேர்தலில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வர முடிந்தால் மட்டுமே அந்த வாய்ப்பு கிடைக்கும்.
இதற்கான அர்த்தம் ஆசாத் 2022 மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் மாநிலங்களவை தேர்தலின் அடுத்த சுற்று வரை காத்திருக்க வேண்டியிருக்கும். மேலும் பொருத்தமான காலியிடம் இருந்தால் மட்டுமே மீண்டும் மேல் சபையில் நுழைய வாய்ப்பு கிடைக்கும்.
ஆனால் அதற்கான வாய்ப்புகள் குறைவாக உள்ளதாகத் தெரிகிறது என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
ஆசாத் ஜம்மு-கஷ்மீர் மாநிலத்திலிருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார், இது 2019-ல் யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டது.
எதிர்காலத்தில் யூனியன் பிரதேசமான ஜம்மு-கஷ்மீரில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் என்று பிரதமர் மோடி சமீபத்தில் தெளிவுபடுத்திய போதிலும், 2021 மார்ச் மாதத்திற்குள் தொகுதிகளின் எல்லை நிர்ணயம் முடிந்த பின்னரே இது சாத்தியமாகும்.
2015ல் ஆசாத் மீண்டும் மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதில் நிறைய திருப்பங்கள் இருந்தது. அப்போது இந்த தந்திரமான அரசியல்வாதி தேசிய மாநாட்டு கட்சி சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவைப் பெற முடிந்தது.
யூனியன் பிரதேசமான ஜம்மு கஷ்மீரில் போட்டி இல்லாமல் இருப்பதால், காங்கிரஸ் மேலிடம் அவரை வேறு எந்த மாநிலத்திலிருந்தும் மீண்டும் தேர்ந்தெடுப்பது என்பது சாத்தியமற்றது.
தற்போது காங்கிரஸ் ஆட்சி நடக்கும் பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கரில் இருந்து மாநிலங்களவைக்கு பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
காங்கிரஸ் எதிர்க்கட்சியாக உள்ள கர்நாடகா, மத்தியப் பிரதேசம் மற்றும் குஜராத் மாநிலங்களில் கணிசமான எண்ணிக்கையிலான உறுப்பினர்கள் உள்ளனர், ஆனால் இங்கேயும் மேலவைக்கு பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
மேற்கு மாநிலமான மகாராஷ்டிராவில் மாநிலங்களவை தேர்தல் முடிந்த நிலையில், ஆளும் சிவசேனா-என்.சி.பி-காங்கிரஸ் கூட்டணியின் ஒரு அங்கமாக இருக்கும் காங்கிரசிற்கு இங்கு எந்த வாய்ப்பும் இல்லை.
ஆசாத் மேல் சபைக்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவது தொடர்பாக நடந்து வரும் ஊகங்களுக்கும், முக்கியமாக எதிர்ப்பாளர்களின் பட்டியலில் அவரது பெயர் இடம் பெற்றுள்ளது என்பதற்கும் வெளிப்படையான தொடர்பு எதுவும் இல்லை என்றாலும், தற்போது இருக்கும் மாநிலங்களவை உறுப்பினர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் அந்தஸ்து ஆகியவை அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்திற்குப் பிறகு போய்விட்டது என்றால் இந்த தந்திர அரசியல்வாதிக்கு அடுத்து நடப்பவை சுலபமாக இருக்காது என்று கட்சியினர் தெரிவித்தனர்.
ஆசாத் பின்னர் 2019ம் ஆண்டில் அவருக்கு கிடைத்த ஹரியானாவுக்குப் பொறுப்பான அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலாளர் பதவியில் நீடிப்பார். அதற்கு முன்னர், 2017 சட்டசபைக்கு முன்னதாக அரசியல் ரீதியாக முக்கியமான மாநிலத்தில் கட்சியை புதுப்பிக்க ஆசாத் 2016ல் உத்தரபிரதேசத்தின் பொறுப்பாளராக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி நியமித்தது. அவரது தலைமையின் கீழ், சமாஜ்வாடி கட்சியுடன் கைகோர்க்க காங்கிரஸ் முடிவு செய்தது, ஒரு பேரழிவாக மாறியது என்று கட்சியின் தேர்தல் அமைப்பாளர்கள் நினைவு கூர்ந்தனர்.
சமீபத்தில், உ.பி. காங்கிரஸின் முன்னாள் தலைவர் நிர்மல் காத்ரி 2017 தேர்தலில் கட்சியின் மோசமான செயல்பாட்டை குறிப்பிட்டு, ஆசாத்தின் கருத்து வேறுபாடு கடிதம் குறித்து விளாசினார். மற்றொரு உ.பி. பிரிவு தலைவர் நசீப் பதான் இந்த விவகாரத்தில் ஆசாத்தை வெளியேற்ற வேண்டும் என்று கோரினார்.
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து மாவட்ட அளவு வரை உட்கட்சி தேர்தல்களைக் கோரும் குழுவின் பின்னால் இருந்து கொண்டு ஆசாத் தொடர்ந்து தனது அதிகாரத்தை தக்க வைப்பது எளிதல்ல என்று கட்சியினர் தெரிவித்தனர்.
இப்போதைக்கு, மீண்டும் அதிகாரத்திற்கு வரக்கூடும் என எதிர்பார்க்கப்படும் காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி மற்றும் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இருவரும் ஆசாத் எழுப்பிய பிரச்சினைகள் தீர்க்கப்படும் என்று உறுதியளித்துள்ளனர்
ஆனால் எதிர்காலத்தில் எந்தவொரு சிறிய அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி மறுசீரமைப்பும் ஹரியானாவை போல் சோனியா-ராகுல் விசுவாசிக்குச் செல்வதைக் காணலாம். கடந்த ஜூலை மாதம் மற்றொரு வகை கட்சி எதிர்ப்பை கிளப்பிய அவினாஷ் பாண்டேவிற்கு பதில் ராகுலின் நெருங்கிய உதவியாளர் அஜய் மக்கன்-ஐ திடீரென அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் ராஜஸ்தானின் பொறுப்பாளராக நியமித்தார்,
கட்சியில் விவாதிக்கப்படுகின்ற மற்றொரு பிரச்சினை என்னவென்றால், ஆசாத்துக்கு பதிலாக மாநிலங்களவையில் எதிர்க்கட்சித் தலைவராக யார் நியமிக்கப்படுவார்கள் என்பதுதான்.
பொதுவாக, இந்த பதவி ஆசாத்தின் அடுத்த நிலையில் நீண்ட காலமாக உள்ள ஆனந்த் ஷர்மாவிற்கு தான் செல்ல வேண்டும். ஆனால், சர்மாவும் கருத்து வேறுபாடு கடிதத்தில் கையெழுத்திட்டவர்களில் ஒருவராக இருக்கிறார் என்பது அவருக்கு பதவி உயர்வு பெறுவதற்கான வாய்ப்புகளை குறைக்கக்கூடும் என்று கட்சியினர் தெரிவித்தனர். ஷர்மாவின் மாநிலங்களவை காலம் ஏப்ரல் 2022 இல் முடிவடைகிறது.
கட்சி மேலிடம் இந்த விவகாரத்தில் தலையிட தயாராக இல்லை என்றாலும், இந்த ஆண்டு மேல் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் 2026 வரை உறுப்பினராக பணியாற்ற உள்ள மூத்த கர்நாடக தலைவர் மல்லிகார்ஜூன் கார்கேவின் பெயர் கட்சி வட்டாரங்களுக்குள் தனிப்பட்ட முறையில் விவாதிக்கப்பட்டுள்ளது.
சோனியா விசுவாசியான கார்கேவின் பெயர் எதிர்ப்பாளர்களின் பட்டியலில் இடம் பெறவில்லை என்பது தலித் தலைவரின் வேட்புமனுவுக்கு சற்று பலத்தை சேர்க்கக்கூடும். முன்னாள் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் மந்திரியாக பணியாற்றிய இவர் 9 முறை சட்டமன்ற உறுப்பினராகவும் இரண்டு முறை மக்களவை உறுப்பினராகவும் இருந்துள்ளார்.
இதையும் படிங்க: 'நான் பாஜக தொண்டன், காங்கிரஸ் குறித்து பேச மாட்டேன்'- ஜோதிராதித்ய சிந்தியா