மகாராஷ்டிரா மாநிலத்தின் புனே அருகே உள்ள பிம்ப்ரி பகுதியைச் சேர்ந்தவர் நாகேஷ் கேலே. 2013ஆம் ஆண்டு நேர்ந்த ரயில் விபத்தில் தனது இரண்டு கால்களையும் இழந்த இவர், தனது தாயின் உதவியுடன் ஆட்டோ ஒன்றினை வாங்கி, அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை வைத்து தனது குடும்பத்தை நடத்தி வந்தார்.
இந்த நிலையில், கரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காகப் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால், கடந்த மூன்று மாதங்களாக வருமானம் ஏதுமின்றி இவரின் குடும்பம் தவித்து வந்துள்ளது.
இந்நிலையில், ஊரடங்கில் சில தளர்வுகள் ஏற்படுத்தப்பட்ட நிலையில், நாகேஷ் மீண்டும் தனது ஆட்டோ ஓட்டும் தொழிலைத் தொடங்கியுள்ளார்.
மேலும், நாள் ஒன்றுக்கு 200 ரூபாய் வரை வருமானம் வருவதாகக் கூறும் அவர், இந்த இக்கட்டான சூழலிலும் தன்னுடன் துணை நிற்கும் தாய், மனைவி ஆகியோருக்குத் தனது நன்றியினையும் தெரிவித்துள்ளார்.