இதுகுறித்து விவசாயத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "குறுகிய காலத்தில் அழியும் தன்மையுடைய அத்தியாவசிய பொருள்களான பழங்கள், காய்கறிகள், பால் பொருள்கள், விதைகள் ஆகியவற்றை நாடு முழுவதும் எடுத்துச்செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக, நாடு முழுவதும் 67 வழித்தடங்களில் 134 சிறப்பு ரயில்கள் பொருள்களை ஏற்றிச் செல்கின்றன. ரயில்களுக்கான பயண நேரங்கள் அட்டவணையாக தயாரிக்கப்பட்டு இந்திய ரயில்வே இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது . ஏதேனும் மாநிலத்தில் பொருள்கள் தேவை இல்லையென்றால் ரயில்கள் மாற்றிவிடப்படும்.
மேலும், இது தொடர்பாக தோட்டக்கலை செயலர்கள், இயக்குநர்களுடன் நடைபெற்ற வீடியோ கலந்துரையாடலில், இந்த ரயில்களில் கொண்டுவரப்படும் பொருள்களை உபயோகிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது" என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: லூடோ கேமில் ஏமாற்றிய கணவர்: போலீஸை அழைத்த மனைவி!