ETV Bharat / bharat

இந்தியாவில் இவ்வளவு சிறப்பு அந்தஸ்து பெற்ற மாநிலங்களா?... மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? - சந்திரபாபு நாயுடு

ஜம்மு - காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை நீக்கியதிலிருந்து, சிறப்பு அந்தஸ்து பெற்ற மற்ற மாநிலங்களும் தங்களுக்கான அந்தஸ்தை மத்திய அரசு நீக்கிவிடுமோ என்ற அச்சத்தில் உள்ளன.

amith shah
author img

By

Published : Aug 8, 2019, 9:19 AM IST

யூனியன் பிரதேசங்களே மாநில அந்தஸ்து தருமாறு கோரிவரும் நிலையில், ஜம்மு- காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தைப் பறித்தும் மாநிலமாக இருந்த அதனை, இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்திருக்கும் மத்திய அரசுக்கு எதிராக பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டன குரலை எழுப்பி வருகின்றனர். இந்த சிறப்பு அந்தஸ்து குறித்து சற்று விரிவாகக் காண்போம்...

மோடி
மோடி

மாநில சுயாட்சி:

மத்தியில் ஆளும் அரசானது அனைத்து மாநிலங்களுக்கும் அதிகாரத்தைப் பிரித்துக் கொடுத்து முன்னேற வைக்க வேண்டும். இம்மாதிரியான ‘கூட்டாட்சி’ முறையைத் தான் இந்திய அரசியலமைப்பும் வலியுறுத்துகிறது. ஆனால், ஆளும் அரசு அதிகாரங்கள் அனைத்தையும் தன் கையிலே வைத்துக் கொள்ள ஆசைப்படுகிறது. சமீபத்திய உதாரணமாக, அணைகளின் மீதான மாநில அரசுகளின் அதிகாரங்களைப் பிடுங்கி ’அணை பாதுகாப்பு மசோதா’-வை நிறைவேற்றி தன்வசமாக்கியுள்ளது. தற்போது ஜம்மு - காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை நீக்கியுள்ளது.

இந்த அராஜகப் போக்கை மத்தியில் ஆளும் அரசு இப்போது மட்டும் கடைப்பிடிக்கவில்லை. இந்திய சுதந்திரம் வாங்கிய காலகட்டங்களிலிருந்தே, காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசும் இந்தப் போக்கை பின்பற்றியது. 1976ஆம் ஆண்டு எமர்ஜென்சி காலத்தில் மாநிலப்பட்டியலில் இருந்த கல்வி பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்டது. அதனுடைய விளைவின் ஒரு பகுதியாக ’நீட்’ தேர்வு இந்தியா முழுவதும் அமல்படுத்தப்பட்டு எழை மாணவர்களின் மருத்துவ கனவைச் சிதைத்துள்ளது.

அண்ணா மற்றும் கலைஞர்
அண்ணா மற்றும் கலைஞர்

50 ஆண்டுகளுக்கு முன்னரே அண்ணா மாநில சுயாட்சி கோரிக்கையை எழுப்பினார். அவரைத் தொடர்ந்து கலைஞர் கருணாநிதியும் இந்த கோரிக்கையை வலியுறுத்தியே வந்தார். ஆனால், இந்த கோரிக்கையை பல்வேறு மாநிலங்கள் தற்போது தான் எழுப்பத் தொடங்கியுள்ளன. இந்த சூழலில் மத்திய பாஜக அரசு, ஜம்மு - காஷ்மீருக்கு வழங்கிய சிறப்பு அந்தஸ்தை நீக்கியுள்ளது. இது மாநில சுயாட்சி கோரிக்கையை எழுப்பிய பல்வேறு மாநிலங்களுக்கிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

சிறப்பு அந்தஸ்த்தின் அவசியம்:

இந்தியா என்பது ஒரே கலாச்சாரம் ஒரே நிலப்பரப்பில் வாழும் மக்களை உள்ளடக்கிய தேசம் இல்லை. பல்வேறு வகையான கலாச்சாரங்களையும் மொழிகளையும் நிலப்பரப்புத் தன்மையையும் கொண்ட மாநிலங்களின் ஒன்றியமே இந்தியா. இவ்வாறு பல்வேறு விதமான நிலப்பரப்புகள் இருப்பதால் தான் அந்ததந்த மாநிலங்களுக்கென்று தனிச் சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. இச்சட்டங்கள் தான் அந்த மாநிலத்தில் வாழும் மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்துகின்றன.

சிறப்பு அந்தஸ்து என்றால் மிகவும் பெருமைக்குரிய நிலை என்று தவறாகப் புரிந்துகொள்ளப்படுகிறது. ஆனால், கீழே கிடக்கும் ஒரு மாநிலத்தை உயர்த்தும் நோக்கில் தான் இந்த முறை கொண்டுவரப்பட்டது.

பழங்குடியின மக்கள்
பழங்குடியின மக்கள்

இந்தியாவில் உள்ள மாநிலங்கள் அனைத்தும் பொருளாதார தன்னிறைவை அடையவில்லை. மலைப்பிரதேசங்களில் வாழும் மக்கள், பழங்குடியின மக்கள் ஆகியோர் தற்போதும் அடிப்படை கல்வியறிவைக் கூடப் பெற முடியாத சூழலில் தான் உள்ளனர். இம்மக்களை உள்ளடக்கிய பின்தங்கிய மாநிலங்களுக்கும், பொருளாதாரத்தில் நலிவடைந்த மாநிலங்களுக்கும் கட்டாயம் சிறப்பு அந்தஸ்து கொடுத்து அம்மாநிலங்களை முன்னேற வைக்கும் கட்டாயக் கடமை மத்தியில் ஆளும் ’கூட்டாட்சி’ அரசுக்கு உள்ளது.

சிறப்பு அந்தஸ்து தோன்றிய வரலாறு:

சிறப்பு அந்தஸ்து முறை 1969ஆம் ஆண்டில் ஐந்தாவது நிதிக்குழு ஆணையம் மூலம் தோற்றுவிக்கப்பட்டது. இக்குழு பின்தங்கிய மாநிலங்களின் பொருளாதாரத்தை உயர்த்தும் பொருட்டு உருவாக்கப்பட்டது. இந்த நிதிக்குழுவே பிற்காலத்தில் திட்டக்குழு எனப் பெயர் மாற்றப்பட்டது.

வேறுபாடுகள்
வேறுபாடுகள்

சிறப்பு அந்தஸ்துக்கான காரணங்கள்:

  1. ஒரு மாநிலம் பொருளாதார நிதி நெருக்கடியில் இருக்க வேண்டும்.
  2. குறைந்த அளவு மக்கள் தொகையைக் கொண்டிருக்க வேண்டும்.
  3. மாநிலத்தில் வாழும் பழங்குடியினரின் எண்ணிக்கை அதிகமாக இருக்க வேண்டும்.
  4. சர்வதேச நாடுகளின் எல்லைகளில் உள்ள மாநிலமாக இருக்க வேண்டும்.
  5. பொருளாதாரம் மற்றும் உள்கட்டமைப்பில் வசதிகளில் பின்தங்கிய மாநிலமாக இருக்க வேண்டும்.
  6. உற்பத்தி தொழில்களை மேற்கொள்ள முடியாத மலைப்பிரதேசமாக இருக்க வேண்டும்.
  7. எளிதில் பயணிக்க இயலாத நிலப்பரப்பாக இருக்க வேண்டும்.
  8. தனிநபர் வருமானம் குறைந்த அளவு இருக்க வேண்டும்.
    சிறப்பு அந்தஸ்து மாநிலங்களின் வரைபடம்
    சிறப்பு அந்தஸ்து மாநிலங்களின் வரைபடம்

சிறப்பு அந்தஸ்து மாநிலங்களுக்குக் கிடைக்கும் நன்மைகள்:

  1. தொழில்துறையில் முதலீட்டை ஈர்ப்பதற்காக சுங்கவரி, கலால் வரி உள்ளிட்ட வரிகளிலிருந்து விலக்கு அளிக்கப்படும்.
  2. இம்மாநிலங்களுக்கு மத்திய அரசு 90% நிதியை மானியமாகவும் 10% கடனாகவும் அளிக்கும்.
  3. மத்திய அரசு பட்ஜெட்டின் 30% நிதி சிறப்பு அந்தஸ்து மாநிலங்களுக்குச் செல்லும்.
  4. வளர்ச்சி திட்டங்களுக்கான மத்திய நிதியளிப்பில் இம்மாநிலங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
  5. இந்த மாநிலங்களுக்கு ஒரு நிதியாண்டில் ஒதுக்கப்பட்ட நிதி செலவளிக்காமலிருந்தால், அந்த நிதி அடுத்த நிதியாண்டோடு சேர்த்துக் கொள்ளப்படும்.

சிறப்பு அந்தஸ்தைப் பெற்ற மாநிலங்கள்:

சிறப்பு அந்தஸ்து முறையை ஜம்மு - காஷ்மீர் மாநிலம் மட்டுமே பெற்றுள்ளதாக பெரும்பாலான மக்கள் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால், ஜம்மு தவிர்த்து 10 மாநிலங்களுக்குச் சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு வழங்கியுள்ளது. ஆரம்பத்தில் அஸ்ஸாம், நாகாலாந்து, ஜம்மு - காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்தைத் திட்டக் குழு வழங்கியது. இந்த மூன்று மாநிலங்களும் சமூக, பொருளாதாரம் மற்றும் நிலப்பரப்பில் மிகவும் பின்தங்கியதாக இருந்ததால் சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டது.

சிறப்பு அந்தஸ்து மாநிலங்கள்
சிறப்பு அந்தஸ்து மாநிலங்கள்

அதன்பின், 1974-1979ஆம் ஆண்டுகளுக்குள் ஹிமாச்சல பிரதேசம், மணிப்பூர், மேகாலயா, சிக்கிம், திரிபுரா ஆகிய ஐந்து மாநிலங்களுக்கு அந்தஸ்து வழங்கப்பட்டது. 1990ஆம் ஆண்டு அருணாச்சலபிரதேசம், மிசோரம் ஆகியவற்றிற்கும் 2001ஆம் ஆண்டு உத்தரகாண்ட் மாநிலத்திற்கும் சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டது. இதில் ஜம்மு - காஷ்மீர் மட்டும் அரசியலமைப்பு சட்டப்பிரிவு 370ல் உள்ளது. மற்ற 10 மாநிலங்கள் சட்டப்பிரிவு 371ல் உள்ளன.

நாகாலாந்து (பிரிவு 371 A) :

நாகா மக்களின் மதம் மற்றும் சமூக பழக்க வழக்கங்கள் சார்ந்து நாடாளுமன்றத்தில் இயற்றப்படும் சட்டங்கள் எதுவும் நாகாலாந்துக்குப் பொருந்தாது. மேலும், நாகா மக்களின் பாரம்பரிய சட்ட விதிமுறைகளுக்கும் பொருந்தாது. அம்மக்களின் நிலம் அவர்களுக்கு மட்டுமே சொந்தம். மத்திய அரசின் சட்டங்களை நாகாலாந்து மாநிலத்தில் அமல்படுத்த வேண்டுமெனில் அதன் சட்டப்பேரவையில் மசோதாவாகத் தாக்கல் செய்ய வேண்டும்.

இந்த அனைத்து அந்தஸ்துகளும் மிசோரம்(பிரிவு 371 G) மாநிலத்திற்கும் பொருந்தும்.

அஸ்ஸாம்(பிரிவு 371 B) :

அஸ்ஸாம் மாநில சட்டப்பேரவையில் அங்குள்ள பழங்குடியின மக்களுக்கு இடஒதுக்கீடு உரிமை அளிக்கும் சிறப்பு அந்தஸ்து ஜனாதிபதியால் வழங்கப்பட்டது. இதுபோன்றே மணிப்பூர்(பிரிவு 371 C) மாநிலத்திற்கும் வழங்கப்பட்டுள்ளது.

சிக்கிம் (பிரிவு 371 F):

அஸ்ஸாம் தேயில்லைத் தோட்டம்
அஸ்ஸாம் தேயில்லைத் தோட்டம்

சிக்கிமில் வசிக்கும் பல்வேறு வகையான மக்களின் உரிமையைக் காக்கும் பொருட்டு மாநில சட்டமன்றத்தில் 30க்கும் குறைவான உறுப்பினர்கள் இடம்பெறக் கூடாது. மேலும், மாநில சட்டங்களில் ஆளுநருக்கு சிறப்பு அதிகாரமும் கொடுக்கப்பட்டுள்ளது. அருணாச்சல பிரதேசத்திற்கும்(பிரிவு 371 H) இந்த ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஆந்திரா, கோவா, பிகார், ராஜஸ்தான், ஒடிசா ஆகிய ஐந்து மாநிலங்கள் தங்களுக்கும் சிறப்பு அந்தஸ்து வழங்கக் கோரி போராடி வருகின்றன.

சிறப்பு அந்தஸ்து மற்ற மாநிலங்களுக்கும் கிடைக்குமா?

14ஆவது திட்டக்குழுவானது ’இனி எந்த மாநிலத்திற்கும் சிறப்பு அந்தஸ்து கொடுக்க முடியாது’ எனக் கூறியுள்ளது. மேலும், நிதிக்குழுவின் வேலை அனைத்து மாநிலங்களுக்கும் சமமான வரி மற்றும் வருவாயைப் பிரித்துத் தருவதேயாகும். சிறப்பு அந்தஸ்துள்ள மாநிலம் மற்றும் பொது மாநிலம் என வேறுபடுத்திப் பார்க்கவில்லை என்றும் தெரிவித்துள்ளது.

நிதி ஆயோக் கூட்டம்
நிதி ஆயோக் கூட்டம்

எனவே, இனி எந்த மாநிலத்திற்கும் சிறப்பு அந்தஸ்து வழங்குவதற்கான வாய்ப்பு இல்லை என்றே தெரிகிறது. பல ஆண்டுகளாகச் செயல்பட்டுக் கொண்டிருந்த இந்த திட்டக்குழுவை ‘நிதி ஆயோக்’ அமைப்பாகக் கடந்த 2015ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி பாஜக அரசு மாற்றியது குறிப்பிடத்தக்கது.

சிறப்பு அந்தஸ்தும் ஆந்திராவும்:

2014ஆம் ஆண்டு அப்போதைய காங்கிரஸ் அரசு ஆந்திராவை இரண்டாகப் பிரித்தது. ஹைதராபாத் தெலுங்கானா வசம் சென்றதால், அந்த இழப்பைச் சரிசெய்யப் பிரதமர் மன்மோகன்சிங் ஆந்திராவை ’சிறப்பு மாநிலமாக’ அறிவிக்கப்படும் என உறுதியளித்திருந்தார். ஆனால், பாஜக கட்சி அதே வாக்குறுதியைக் கொடுத்ததால் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேச கட்சி பாஜகவுடன் கூட்டணி அமைத்தது.

ஆந்திர பிரதேசத்தின் சிறப்பு அந்தஸ்து கோரிக்கை

அதன்பின், பாஜக மத்தியில் ஆட்சியமைத்தும் ஆந்திராவிற்குச் சிறப்பு அந்தஸ்து அளிக்காததால் கூட்டணியிலிருந்து தெலுங்கு தேசம் விலகியது. 14ஆவது நிதிக்குழுவின் பரிந்துரையைக் காட்டி ஆந்திராவிற்குச் சிறப்பு அந்தஸ்து வழங்க முடியாது என அப்போதைய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறினார். ஆனால், ஆந்திராவின் வளர்ச்சிக்கு வேறு வழிகளில் நிதி அளிக்கிறோம் எனக் கூறினார்.

அஸ்ஸாம் தேயில்லைத் தோட்டம்
அருண் ஜெட்லியுடன் சந்திரபாபு நாயுடு

இப்போது வரை சிறப்பு அந்தஸ்து வழங்கப் போராடி வரும் சந்திரபாபுவும் ஜெகன்மோகன் ரெட்டியும், ஜம்மு - காஷ்மீரின் சட்டப்பிரிவு 370ஐ நீக்கி சிறப்பு அந்தஸ்தைப் பறித்ததை வரவேற்றுள்ளது நகைமுரணாக உள்ளது.

சட்டப்பிரிவு 370ஐ போல் 371ம் நீக்கப்படுமா?

ஜம்மு - காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை நீக்கியதிலிருந்து, சிறப்பு அந்தஸ்து பெற்ற மற்ற மாநிலங்களும் தங்களுக்கான அந்தஸ்தை மத்திய அரசு நீக்கிவிடுமோ என்று அச்சத்தில் உள்ளனர். சட்டப்பிரிவு 370ஐ நீக்கியதே 371ஐ நீக்குவதற்கான முன்னெச்சரிக்கை என்ற சந்தேகமும் வலுக்கிறது. 370ஐ நீக்கியதற்குக் காரணமாக அனைத்து திட்டங்களும் அனைவருக்கும் சென்று சேர வேண்டும் என்று கூறிய பாஜக அரசு அதனைச் செயல்படுத்துமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Intro:Body:

kashmir

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.