ETV Bharat / bharat

கோடையின் தாக்கத்தைச் சமாளிக்கும் உயிரியல் பூங்கா!

author img

By

Published : Feb 23, 2020, 7:13 AM IST

திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் உயிரியல் பூங்காவில் வன விலங்குகள், கோடையின் தாக்கத்தைச் சமாளிக்க, மின் விசிறி, நீச்சல் குளம், குளிர்ச்சி தரும் சத்துள்ள உணவுகள், குளிரூட்டி உள்ளிட்ட வசதிகளை இடைவிடாமல் வழங்க கேரள அரசு ஏற்பாடு செய்துள்ளது.

Thiruvananthapuram zoological park
திருவனந்தபுரம் உயிரியல் பூங்கா

இந்தியாவின் பருவநிலை, கார்காலத்தை நிறைவுசெய்து கோடைக்காலத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்தக் பருவநிலை மாற்றத்தைச் சமாளிக்க மனிதர்களே சற்று தடுமாறுகின்றனர். இந்நிலையில், கோடைக்காலம் விலங்குகளுக்கு மிகப்பெரிய சவாலாகவே உள்ளது. இந்தச் சிக்கலை மாற்ற முயன்றுள்ளது, கேரள அரசு. கேரள மாவட்டம் திருவனந்தபுரத்தில், 36 ஏக்கர் பரப்பளவில் வன விலங்கு உயிரியல் பூங்கா உள்ளது. இங்கு நூற்று இருபதுக்கும் மேற்பட்ட பறவையினங்கள், ஆயிரத்திற்கும் மேற்பட்ட விலங்குகள் பராமரிக்கப்பட்டுவருகின்றன.

இதையடுத்து, சுட்டெரிக்கத் தொடங்கும் வெயிலிலிருந்து வன உயிரினங்களைக் காக்க பல்வேறு முன்னெடுப்புகளை செய்துள்ளது. நிலவும் வெப்ப நிலைகளுக்கேற்ப ஒவ்வொரு உயிரினத்திற்கும் தனிப்பட்ட வசதிகளையும் உணவுப் பொருள்களையும் உயிரியல் பூங்கா அலுவலர்கள் பொருள் குறிப்பாகப் பட்டியலிட்டுள்ளனர்.

அனல்காற்றைத் தாங்கமுடியாமல் தவிக்கும் உயிரிகளுக்குச் செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்து இங்கு காணலாம். இதுகுறித்து பூங்காவின் மூத்த அதிகாரி டி.வி. அனில் குமார் கூறுகையில், ”மழை போல தண்ணீரைப் பீய்ச்சி அடிக்கும் பல குழாய்கள் ஆங்காங்கே பொருத்தப்பட்டு உள்ளன. இதனால் விலங்குகளின் உடல் வெப்பநிலை சீரான நிலையில் பார்த்துக் கொள்ளப்படும். நீர்ச்சத்து அதிகமுள்ள பழங்கள், வைட்டமின்கள் நிறைந்துள்ள வழக்கமான உணவு வகைகள் வழங்கப்படும்.

முதலை, புலி, கரடி நீர் யானை, காண்டாமிருகம் போன்ற விலங்குகளுக்கு அருகில் நீச்சல் குளங்கள் உருவாக்கப்பட்டு உள்ளன. இதில் எப்போதும் தண்ணீர் சேவை இருக்குமாறு பார்த்துக் கொள்ளப்படும். இதனால், அந்த விலங்குகளால் தேவைக்கேற்ப நீரைப் பயன்படுத்திக்கொள்ள முடியும்.

குளிர் பிரதேசத்தில் வசிக்கும் அனகோண்டா உள்ளிட்ட பாம்புகளுக்கு, அவை வசிக்கும் கண்ணாடி அறைகளில், குளிரூட்டி பொருத்தப்பட்டுள்ளது. இதனுடன் சில விலங்குகளுக்கும், குளிரூட்டி, மின் விசிறி வசதிகள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, இந்த அமைப்புகளோடு வெப்பநிலை கண்காணிப்புக்காக தனி அளவைகளும் பொருத்தப்பட்டுள்ளன. உணவு வகைகளிலும் நாங்கள் அதிகம் கவனம் செலுத்திவருகிறோம்.

தர்பூசணி, வெள்ளரிக்காய், அன்னாசிபழம், பூசணி ஆகியவற்றையும் உணவுப்பட்டியலில் இணைத்துள்ளோம். குளிர்பிரதேசத்தைச் சேர்ந்த ஹிமாலயன் கரடிகளுக்காகத் தர்பூசணியைக் குளிர்சாதனப்பெட்டியில் வைத்து உறைய வைத்து வழங்குகிறோம். குரங்குகளுக்கு வேர்க்கடலை, வாழைப்பழங்கள், கரும்பு, முளைகட்டிய பயிர் வகைகள், காய்கறிகள் ஆகியவற்றையும் அளித்துவருகிறோம். இவை மட்டுமில்லாமல், பூங்கா பசுமையான சூழலைக் கொண்டுள்ளது. இதனால், அதிகப்படியான நிழல் கிடைக்கிறது. இதனடிப்படையில் பார்த்தால் வெயிலில் தாக்கம் குறைவுதான்” என்றார்.

இதையும் படிங்க: மோடியின் ஆசிபெற்ற மாநிலம் பிகார் - ஜே.பி. நட்டா பெருமிதம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.