கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த ரயில்வே பெண் ஊழியரின் மகன் இம்மாதத் தொடக்கத்தில் ஸ்பெயின் நாட்டிலிருந்து திரும்பியுள்ளார். மார்ச் மாத தொடக்கத்தில் இவர் இந்தியா திரும்பியுள்ள நிலையில், இவரின் பயண விவரத்தை ரயில்வேத் துறையிடம் தெரிவிக்காமல் அந்த ஊழியர் மறைத்துவைத்துள்ளார்.
பின்னர் காவல் துறைக்கு இந்தப் பயணம் விவரம் குறித்த தகவல் தெரியவர, உஷாரான காவல் துறை ரயில்வே ஊழியரை விசாரிக்கையில் உண்மையை ஒப்புக்கொண்டார். அவரது மகனும் அவரும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில்வைக்கப்பட்டுள்ளனர்.
கரோனா பாதிப்பை அலட்சியப்படுத்தி அதை மறைக்கும்விதத்தில் ரயில்வே ஊழியர் ஒருவர் நடந்துகொண்டது கர்நாடகாவில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. இந்தச் சம்பவம் குறித்து அந்த ஊழியர் மீது வழக்குப்பதிந்த காவல் துறை, தற்போது முதல் தகவல் அறிக்கையைப் பதிவுசெய்தது.
இதையடுத்து தனது மகனுக்கு இருந்த கரோனா பாதிப்பை மறைக்க முயன்ற அந்த ஊழியரை தற்போது தென்னக ரயில்வே இடைநீக்கம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளது.
இதையும் படிங்க: ‘நிர்பயா வழக்கில் நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது’ - பிரதமர் மோடி