நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத்தொடர் நேற்று டெல்லியில் தொடங்கியது. இந்த கூட்டத் தொடரானது ஜூலை 26ஆம் தேதி வரை நடைபெறுகிறது. நாடாளுமன்ற கூட்டத்தொடரின் இரண்டாம் நாளான இன்று காங்கிரஸ் முன்னாள் தலைவரும், ரேபரேலி மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்றவருமான சோனியா காந்தி மக்களவை உறுப்பினராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
காங்கிரஸ் மூத்தத் தலைவர் சசி தரூர், முன்னாள் மத்திய அமைச்சர் மேனகா காந்தி, பாஜக மூத்தத் தலைவர் சாக்ஷி மகராஜ் ஆகியோரும் மக்களவை உறுப்பினர்களாக பொறுப்பேற்றுக் கொண்டனர்.